Crime News In Tamil: தொழில்நுட்ப வளர்ச்சியில் பல சாதக, பாதகங்கள் இருக்கின்றன. நீங்கள் கற்றுக்கொள்வதற்கு எதுவும் தடையாக இருக்காது, அது நல்ல விஷயம் என்றாலும் சரி, கெட்டதாக இருந்தாலும் சரி அனைத்தும் உங்கள் விரல் அசைவில் இருக்கிறது. அந்த வகையில், தற்போது ஆபாச படங்களின் நுகர்வும் அதிகமாகிவிட்டது. தொழில்நுட்ப வராத காலத்திலும் ஆபாச படங்கள், புகைப்படங்கள் ஆகியவற்றுக்கு இளைய சமுதாயத்தினர் அடிமையாக இருந்திருந்தாலும் தற்போது தொழில்நுட்பம் பள்ளி குழந்தைகள் வரை பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது எனலாம்.
Crime News In Tamil: பொறியியல் பட்டதாரி கைது
அந்த வகையில், கர்நாடகாவின் தும்குரு மாவட்டத்தில் பொறியியல் பட்டதாரி ஒருவர் தனது வீட்டு அருகில் உள்ள மாணவிகளின் உள்ளாடைகளை திருடிய காரணத்திற்காக போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 25 வயதான அந்த நபரின் ஷரத் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர் தும்குரு மாவட்டத்தில் SIT-இல் உள்ள IV கிராஸ் பகுதியில் வசித்து வருகிறார்.
Crime News In Tamil: அதிர்ச்சியடைந்த மாணவிகள்
இவர் அந்த பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருக்கும் மாணவிகள் சிலர் கடந்த சில நாள்களாக தங்களின் உள்ளாடைகள் தொடர்ந்து காணாமல் போவதை கண்டு அதிர்ச்சி அடைந்து கவலைக்குள்ளாகி உள்ளனர். இதுகுறித்து உடனே தங்களின் வீட்டு உரிமையாளர்களுக்கும் தகவல் கொடுத்துள்ளனர்.
மேலும் படிக்க | அழிந்து வரும் பொம்மலாட்டக் கலை ‘அப்டேட்’ உடன் வரும் கலைஞர்கள்
Crime News In Tamil: சிசிடிவி கேமராவில் சிக்கிய ஷரத்
இதையடுத்து, அந்த வீட்டின் உரிமையாளர் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து பார்த்ததில் ஷரத், அந்த மாணவிகளின் வீட்டின் அருகே தனது இருச்சக்கர வாகனத்தை நிறுத்துவதும், உள்ளாடைகளை திருடுவதும் பதிவாகியுள்ளன. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த வீட்டு உரிமையாளர் உடனே காவல்துறையிடம் புகார் தெரிவித்துள்ளார். அவர் அளித்த புகாரின் அடிப்படையிலேயே ஷரத்தை போலீசார் கைது செய்தனர்.
Crime News In Tamil: ஆபாச படங்களுக்கு அடிமை
இதையடுத்து, போலீசார் ஷரத்திடம் மேற்கொண்ட விசாரணையில் மாணவிகளின் உள்ளாடைகளை திருடியதை அவர் ஒப்புக்கொண்டார். அந்த SIT பகுதியில் இருக்கும் எஸ்எஸ் புரம், அசோக் நகர் ஆகிய இடங்களில் இதுபோன்ற செயலில் அவர் ஈடுபட்டுள்ளார். போலீசாரின் விசாரணையில் இவர் ஆபாச படங்களுக்கு அடிமையானது தெரியவந்துள்ளது. தான் நீச்சல் குளத்தில் குளித்துவிட்டு வீடு திரும்பியபோது, அங்கிருந்த மாணவிகளின் உள்ளாடைகள் பார்த்ததை அடுத்து, அதனை திருடிச்சென்றதாக தனது குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டார்.
Crime News In Tamil: ஜாமினில் வெளிவந்த ஷரத்
கைதான ஷரத், தும்குரு மாவட்டத்தில் உள்ள சிக்கநாயக்கனஹள்ளி பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். அவரது பெற்றோர் ஆசிரியர்களாக பணியாற்றி உள்ளனர். அவரது மூத்த சகோதரரும் ஒரு பொறியாளராக பணியாற்றி வருகிறார். ஷரத்தின் இதுபோன்ற நடவடிக்கைகள் அவர்களது குடும்பத்தினருக்கு போலீசார் அவரை கைது செய்யும் வரை தெரிந்திருக்கவில்லை. இதுபோன்ற செயல்களில் இனி ஈடுபடக்கூடாது என்ற எச்சரிக்கையுடன் ஷரத் போலீசாரால் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். மாணவிகள் புகார் அளிக்கவோ அல்லது சாட்சி வாக்குமூலம் அளிக்கவோ முன்வரவில்லை என போலீசார் தரப்பில் தகவல்கள் தெரிவிக்கப்பட்டன.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









