)
Pradhan Mantri Awas Yojana: மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் மக்களுக்கு தேவையான பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர். அவற்றில் மத்திய அரசின் முக்கிய சமூக நலத் திட்டங்களில் ஒன்றான பிரதமர் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY) திட்டம் முக்கியமான ஒன்றாக உள்ளது. இந்த திட்டத்தின் மூலமாக இதுவரை 4.21 கோடி வீடுகள் கட்டி மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன என்று மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. “2022-க்குள் அனைவருக்கும் வீடு” என்ற நோக்கில் கடந்த 2015ல் துவக்கப்பட்ட திட்டம் தான் பிரதமர் மந்திரி ஆவாஸ் யோஜனா. தற்போது இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு பலருக்கும் பயன் உள்ளதாக மாற்றப்பட்டுள்ளது.
இரண்டு பிரிவுகளாக செயல்படும் திட்டம்!
PMAY - நகர்ப்புறம் (Urban) மற்றும் PMAY - கிராமப்புறம் (Gramin) என இரு பிரிவுகளாக இயங்கும் இந்தத் திட்டத்தின் கீழ், குறைந்த வருமானம், நடுத்தர வருமானம் மற்றும் ஏழை வர்க்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு வீடுகள் கட்டித் தரப்படுகின்றன. சமீபத்தில் வெளியான அரசு அறிக்கையின் படி, PMAY-Gramin திட்டத்தின் கீழ் மட்டும் 2.94 கோடி வீடுகள் முடிக்கப்பட்டுள்ளன. PMAY-Urban மூலம் 1.27 கோடி வீடுகள் கட்ட தொடங்கப்பட்டு, 84 லட்சத்துக்கும் அதிகமான வீடுகள் பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. 2025 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில், இந்தத் திட்டத்துக்கு ரூ.80,671 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட 18% அதிகரிப்பாகும்.
வீடுகளுடன் கட்டமைப்பு வசதிகள், குளியலறைகள், மின்சாரம், குடிநீர், காற்றோட்டம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் இணைந்து வழங்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், பெண்கள், மாற்றுத்திறனாளிகள், பழங்குடியினர் மற்றும் ஜாதி அடிப்படையில் புறக்கணிக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் சமீபத்திய அறிவிப்பின்படி, ரூ.18 லட்சம் வரை வீடுக் கடனுக்கு வட்டி சலுகை வழங்கப்படும். குறிப்பாக, வருமான அடிப்படையில் தாழ்வான மற்றும் நடுத்தர வருமானக் குடும்பங்களுக்கே இந்த வங்கி கடன்கள் குறைந்த வட்டியில் வழங்கப்படுகின்றன. வீடு திட்டத்தின் கீழ், பயனாளிகள் ரூ. 2.67 லட்சம் வரை வட்டி மானியம் பெறலாம்.
மேலும், இந்த திட்டத்தில் பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். வீடுகள் அவர்களது பெயரில் பதிவு செய்யப்பட வேண்டும். இத்திட்டத்தில் பட்டா, மின்சாரம், குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் சேர்க்கப்பட்டுள்ளன. நகர்ப்புறத்தில் குத்தகைக்கு வசிப்பவர்கள் மற்றும் நீண்ட நாட்களாக புறம்போக்கு நிலத்தில் வாழ்பவர்கள் கூட இந்த திட்டத்தின் கீழ் வீடுகளைப் பெறத் தகுதியுடையவர்களாக கருதப்படுகின்றனர். 2025-26 நிதியாண்டில் மட்டும் ரூ. 80,000 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கப்பட்டு, திட்ட செயல்பாடு மும்முரமாக நடந்து வருகிறது. சமூக நலத்திற்கான மிகப் பெரிய முதலீடு என்பதால், அரசின் நம்பகத்தன்மை மற்றும் வருங்காலத் திட்ட திட்டமிடலுக்கு இது ஒரு முன்னுதாரணமாக பார்க்கப்படுகிறது.
மேலும் தகவல்களுக்கு: https://pmay.gov.in
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ