மத்திய அரசு சொந்த தொழில் தொடங்க தனி நபர்களுக்கு ரூபாய் பத்து லட்சம் வரை பாரத பிரதமர் முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் கடன் வழங்குகிறது. இதனை எப்படி பெறலாம் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

மத்திய அரசு தொழில் முனைவோரை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தொழில் தொடங்குவதற்கு கடன் உதவியும் வழங்கி வருகிறது. பிரதான் மந்திரி முத்ரா யோஜனா அதில் முக்கியமான திட்டம் ஆகும். விவசாயம் அல்லாத சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு இந்த திட்டத்தின் மூலம் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் சிறு நிதி நிறுவனங்கள், வணிக வங்கிகள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுக்கு ரூபாய் 10 லட்சம் வரை கடன் வழங்கப்படுகின்றன இதற்கு எந்த ஒரு பிணையும் அல்லது தகுதியான ஆவணங்களும் செலுத்த தேவையில்லை.

இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க நீங்கள் ஒரு இந்திய குடிமகனாக இருந்தால் போதுமானது. ஒரு வணிகத் திட்டத்திற்கான முழு பிளானையும் கைவசம் வைத்திருக்க வேண்டியது அவசியம். இந்த திட்டத்தில் பயன் பெற ஏற்கனவே வங்கியில் எந்த ஒரு கடனும் பெற்று இருக்கக் கூடாது. மேலும் 3 ஆண்டுகள் வணிகத்தில் ஈடுபட்டிருக்க வேண்டும், அதேபோல குறைந்தபட்சம் 24 வயதும் அதிகபட்சம் 70 வயதிற்கும் இருக்க வேண்டும். ஆர்வமுடன் நபர்கள் மத்திய அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் போது சில அடிப்படை ஆவணங்கள் தேவைப்படும், அவற்றை கைவசம் வைத்துக் கொள்வது அவசியம். இந்த கடனுக்கான வட்டி ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின்படி வசூலிக்கப்படுகிறது.
ஒவ்வொரு வங்கியும் ஆண்டுக்கு 25 பேருக்கு இந்த திட்டத்தின் மூலம் கடன் வழங்க வேண்டும், அதிகபட்சமாக வங்கி முடிவு செய்யும் எண்ணிக்கையில் தனி நபர்களுக்கு கடன் வழங்கலாம். உங்களது தொழில் சிறப்பாக நடைபெறும் பட்சத்தில் உங்களுக்கு கூடுதல் கடன் தொகையும் கிடைக்க வாய்ப்புள்ளது. நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கிகளில் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் போது வாக்காளர் அடையாள அட்டை, பான் கார்டு, ஆதார் கார்டு, இருப்பிட சான்று, பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், உங்கள் தொழிலுக்கு தேவையான உபகரங்களுக்கான ரசீது, உங்கள் அலுவலகம் இருக்கும் இடத்திற்கான ஆவணங்கள் போன்றவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ