Bihar Assembly Election 2025: பீகாரில் சட்டப்பேரவை தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று பரபரப்பாக நடைபெற்று வருகிறது. பீகாரில் கடந்த கால தேர்தல்களை ஒப்பிடும்போது, சிறப்பான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது எனலாம்.
Bihar Election 2025: வரலாற்று சிறப்புமிக்க வாக்குப்பதிவு
இன்று மதியம் 1 மணி நிலவரப்படி, பீகாரில் மொத்தம் 42.31% வாக்குகள் பதிவாகி உள்ளன. 20 ஆண்டுகளுக்கு பிறகு நிதிஷ் குமார் முதலமைச்சர் பதவியை இழப்பாரா அல்லது பதவியை தக்கவைப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். ஆனால், தேசிய ஜனநாயக கூட்டணி இந்த முறை நிதிஷ் குமாரை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரத்தில் எதிர்க்கட்சிகளின் மகா கூட்டணி ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் தேஜஸ்வி யாதவை முதல்வர் வேட்பாளராக நிறுத்தி உள்ளது.
Bihar Election 2025: வாக்குகளை பிரிக்கும் பிரசாந்த் கிஷோர்
தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் மகா கூட்டணி மட்டுமின்றி பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சியும் அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது. தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், மகா கூட்டணிக்கும்தான் போட்டி கடுமையாக இருக்கும் என்றாலும் ஜன் சுராஜ் கட்சி அதிகளவில் வாக்குகளை பிரிக்கும் என்றும் கருதப்படுகிறது. குறிப்பாக, நிதிஷ் குமாருக்கும், தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் பிரசாந்த் கிஷோர் பெரியளவில் தலைவலியாக இருப்பார் என கருதப்படுகிறது. நிதிஷ் குமார் மற்றும் பாஜகவுக்கு ஆதரவான உயர் சமூக வாக்குகள் தற்போது பிரசாந்த் கிஷோருக்கும் சிதறும். இது ராஷ்டிரிய ஜனதா தளத்திற்கு சாதகமாக அமையும் என அரசியல் வல்லுநர்களால் கணிக்கப்படுகிறது.
Bihar Election 2025: ராகுல் காந்திக்கு திடீர் ஆதரவு
இந்நிலையில், பிரசாந்த் கிஷோர் காங்கிரஸின் முன்னணி தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்திக்கு ஆதரவளிக்கும் வகையில் கருத்து தெரிவித்திருப்பது தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இன்னும் சிக்கலை அதிகரித்திருக்கிறது எனலாம். தேர்தல் ஆணையத்திற்கு எதிராக ராகுல் காந்தி முன்வைக்கும் அனைத்து கேள்விகளும் சரியானவை என பிரசாந்த் கிஷோர் கருத்து தெரிவித்துள்ளார்.
Bihar Election 2025: பிரசாந்த் கிஷோர் சொன்னது என்ன?
பிரசாந்த் கிஷோர் இதுகுறித்து கூறுகையில், "ராகுல் காந்தி தேர்தல் செயல்பாடுகளை நோக்கி எழுப்பும் கேள்விகள் அனைத்தும் செல்லுபடியானவை. இதற்கு தேர்தல் ஆணையம் தகுந்த பதிலளிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு நாங்கள் ஆதரவளிக்கிறோம்" என தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதேநேரத்தில், மகாராஷ்டிரா மற்றும் ஹரியானாவில் ஏற்பட்டது பீகார் நடக்காது என்று கூறி ராகுல் காந்தியின் கருத்து மறுப்பு தெரிவித்துள்ளார். பீகாரை பொருத்தவரை இந்த வாக்குத் திருட்டு பெரிய பிரச்னையாக இருக்காது. இடம்பெயர்தல், ஊழல், குழந்தைகளுக்கான கல்வி ஆகியவையே பெரும் பிரச்னையாக இருந்து வருகிறது" என்றார்.
Bihar Election 2025: ராகுல் காந்திக்கு ஆதரவும், எதிர்ப்பும்...
ராகுல் காந்தியின் கூற்றுக்கு தேர்தல் ஆணையம், மத்திய அரசு, பாஜக என அனைத்து தரப்பில் இருந்து பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. அதேநேரத்தில், இந்தியா கூட்டணியில் உள்ள எதிர்க்கட்சிகள் தொடர்ந்து தேர்தல் ஆணையத்தின் மீதான தங்களின் கேள்விகளையும் தொடர்ந்து எழுப்பி குற்றஞ்சாட்டி வருகின்றனர். திமுக, திரிணாமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி, சிவ சேனா கட்சி (உத்தவ் தாக்ரே) ஆகியவை ராகுல் காந்திக்கு ஆதரவளித்து கருத்து தெரிவித்துள்ளன.
மேலும் படிக்க | பெண்களுக்கு ரூ.30,000 ஊக்கத்தொகை... அதுவும் ஒரே தவணையில்... தேஜஸ்வியின் மாஸ் பிளான்!
மேலும் படிக்க | ராகுல் காந்தி சொன்ன பிரேசில் பெண்... மாடலே இல்லையாம் - அவரே சொன்ன பதில்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









