கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கடந்த 17-ம் தேதி இந்தியாவுக்கு வருகை தந்தார். ஒரு வார காலம் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர், பஞ்சாப் மாநிலத்துக்கு சென்றார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அப்போது, அமிர்தசரஸில் அமைந்துள்ள பொற்கோயிலுக்கு தமது குடும்பத்தினருடன் சென்று வழிபட்டார். இதனைத் தொடர்ந்து, பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்கை சந்தித்து ஜஸ்டின் ட்ரூடோ ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து நேற்று மீண்டும் டெல்லி திரும்பிய கனடா பிரதமர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். 


இந்த நிலையில், இன்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இது குறித்து பிரதமர் மோசி தனது ட்விட்டர் பக்கத்தில்  கருத்து தெரிவித்துள்ளார் மோடி, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை நாளை (இன்று) சந்தித்து பேசுவதை ஆவலோடு எதிர்நோக்கியுள்ளேன். 


இந்தியா- கனடா இடையேயான உறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக  ட்ரூடோவுடன் பேச உள்ளேன். நமது இருநாடுகளுக்கு இடையேயான உறவுக்கு அவர் அளிக்கும் ஆழமான அர்ப்பணிப்பை நான் பாராட்டுகிறேன்” என்று தெரிவித்துள்ளார். 


இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள கனடா பிரதமரை மத்திய அரசு புறக்கணிப்பதாக பரவலாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், பிரதமர் மோடி- ட்ரூடே இடையேயான சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.