தாகூரின் சிந்தனையில் இருந்து உதித்தது தான் தற்சார்பு இந்தியா: பிரதமர் மோடி
மேற்கு வங்கத்தின் விஸ்வ பாரதி பல்கலைக் கழகத்தின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, வீடியோ கான்பரன்சிங் மூலம் உரையாற்றினார்.
மேற்கு வங்கத்தின் விஸ்வ பாரதி பல்கலைக் கழகத்தின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, வீடியோ கான்பரன்சிங் மூலம் உரையாற்றினார்.
பிரதமர் மோடி தனது உரையில், தாகூர் அமைத்துக் கொடுத்த வழியின்படி பணியாற்று வரும் விஷவபாரதியின் நூற்றாண்டு விழா என்பது ஒவ்வொரு இந்தியரும் பெருமை கொள்ளும் விஷயம் என குறிப்பிட்டார். விஸ்வபாரதி ஓய்வின்றி பணியாற்றி வருகிறது.
விஸ்வபாரதி நாட்டுக்கு அளித்துள்ள செய்தியை நம் நாடு உலகிற்கு எடுத்துச் செல்கிறது எனவும் பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi) மேலும் கூறினார்.
தற்சார்பில் ஆத்மசக்தி பற்றி குருதேவ் ரவீந்திரநாத் தாகூர் பேசியுள்ளார். தற்சார்பு இந்தியா என்ற சிந்தனையுன் இங்கிருந்து தான் உத்வேகம் பெற்றது. நம் நாட்டின் வளர்ச்சி என்பது நம் நாட்டுக்கான வளர்ச்சி மட்டுமல்ல, உலகம் முழுமைக்கும் பயனளிக்கும் வளர்ச்சி என பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
வங்காளத்தில் எண்ணற்றவர்கள் நாட்டுக்காகத் தியாகம் செய்துள்ளனர். 2022-ல் நாம் நாட்டின் 75ம் ஆண்டு சுதந்திரத்தைக் கொண்டாடவிருக்கிறோம். தாகூரின் சிந்தனைகள் மற்றும் லட்சியங்கள் காட்டும் பாதையில் நாம் பயணித்து, நாட்டை முனேற்ற பாதையில் தொடர்ந்து கொண்டு செல்ல வேண்டும் என்றார்.
மேற்கு வங்க (West Bengal) முதல்வர் மம்தா பானர்ஜி விஸ்வ-பாரதி பல்கலைக்கழக நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ளவில்லை. தனக்கு அழைப்பு தாமதமாக கிடைத்தது என திரிணமுல் காங்கிரஸ் கூறியுள்ளது. இருப்பினும், முதல்வர் மம்தா பானர்ஜிக்கு 2020 டிசம்பர் 4 தேதி அழைப்பிதழ் அனுப்பட்டது.
நேற்று முன் தினம் அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தின் (AMU) நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, அங்குள்ள மாணவர்களிடையே அவர் உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ | அலிகர் முஸ்லிம் பல்கலைகழகம் ஒரு மினி இந்தியா: பிரதமர் மோடி
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR