PM Modi: நாட்டு மக்களிடம் இரவு 8 மணிக்கு உரையாற்றும் பிரதமர் மோடி...

PM Narendra Modi: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பின்னர், பிரதமர் நரேந்திர மோடி முதல்முறையாக இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்ற உள்ளார்.

Written by - Sudharsan G | Last Updated : May 12, 2025, 05:11 PM IST
PM Modi: நாட்டு மக்களிடம் இரவு 8 மணிக்கு உரையாற்றும் பிரதமர் மோடி...

PM Narendra Modi: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பின்னர், பிரதமர் நரேந்திர மோடி முதல்முறையாக இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்ற உள்ளார்.

India Pakistan Ceasefire: பகல்காம் தாக்குதலும், பதிலடி நடவடிக்கையும்

ஏப்ரல் 22ஆம் தேதி, ஜம்மு காஷ்மீரின் பகல்காம் பைசரன் புல்வெளிப் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். அதில் உள்ளூர்வாசி ஒருவர், மற்றவர்கள் சுற்றுலா பயணிகள் ஆவர். இந்த பயங்கரவாத தாக்குதல் நாடு முழுக்க கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மேலும், சர்வதேச அளவில் மிகப்பெரிய அதிர்வலைகளையும் ஏற்படுத்தியது. இந்த கொடூர தாக்குதலை மேற்கொண்டவர்கள், அவர்களுக்கு உதவியவர்கள் என அனைவரும் வேட்டையாடப்படுவார்கள் என பிரதமர் மோடி அப்போது பேசியிருந்தார்.  

இதைத் தொடர்ந்து சுமார் 15 நாள்களுக்கு பிறகு, மே 7ஆம் தேதி அதிகாலையில் இந்தியாவின் ஆயுதப்படை 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பகல்காம் சம்பவத்திற்கு பதிலடியாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் இருந்த 9 பயங்கரவாத முகாம்களில் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் சுமார் 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அனைத்து கட்சிக் கூட்டத்தில தகவல் அளித்ததாக கூறப்பட்டது.

India Pakistan Ceasefire: அத்துமீறிய பாகிஸ்தான்... பதிலடி கொடுத்த இந்தியா!

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பின் இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரிக்கத் தொடங்கியது. பாகிஸ்தான் இந்தியாவின் பல நகரங்களை குறிவைத்து மே 8, மே 9, மே 10ஆம் தேதிகளில் டிரோன்கள், ஏவுகணைகள், அதிவிரைவு ஏவுகணைகள், போர் விமானங்களை கொண்டு தாக்குதல் தொடுக்க முயற்சித்தன. இவை அனைத்தும் முறியடிக்கப்பட்டது. பகல்காம் தாக்குதலுக்கு பின்னர், எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் தொடுத்தது. இதற்கும் இந்திய ராணுவம் தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டது.

India Pakistan Ceasefire: பிரதமர் மோடி இரவு 8 மணிக்கு உரை

இதையடுத்து மே 10ஆம் தேதி மாலை 5 மணி முதல் இந்தியா - பாகிஸ்தான் தங்களின் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்வதாக உடன்பாட்டுக்கு வந்தது. இதனை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். இருப்பினும், போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே உடன்பாட்டை மீறி மீண்டும் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. அதற்கும் பதிலடி கொடுக்கப்பட்டது. தற்போது இரு தரப்பிலும் ஏதும் மோதல் போக்கு இல்லை. நேற்று காலையில் இருந்து எல்லைப் பகுதியில் நிலவி வந்த பதற்றம் தணிந்து தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது. இந்நிலையில், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பின்னர் முதல்முறையாக பிரமதர் மோடி இன்று இரவு 8 மணிக்கு மக்களிடம் உரையாற்ற உள்ளார். இதில் ஆபரேஷன் சிந்தூர் குறித்து அவர் மக்களிடம் விரிவான விளக்கத்தை அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | ஆபரேஷன் சிந்தூர்: முழு விவரங்களை பகிர்ந்துகொள்ள முடியாது - முப்படைகள் விளக்கம்

மேலும் படிக்க | India Pakistan War: இன்று இந்தியா - பாகிஸ்தான் இடையே நடக்கும் முக்கிய பேச்சுவார்த்தை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News