)
இந்த காலத்தில் அனைத்து துறைகளையும் ஏஐ தொழில்நுட்பம் ஆக்கிரமித்துள்ளது. நவீன தொழிற்நுட்பத்தை நோக்கி உலக நாடுகள் நகர்ந்து வருகிறது. இந்தியாவிலும் அப்படி தான். என்னதான் நவீன தொழிற்நுட்பம் வந்தாலும், ஆன்லைன் மோசடி சம்பவங்களும் தொடர்ந்து நடந்து வருகிறது. இதற்கு ஏராளமான பொதுமக்கள் இறையாகி, தங்கள் சேமிப்பு பணத்தையும் இழந்து வருகின்றனர். ஆன்லைன் மோசடிகளை தடுக்க அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இருப்பினும், மோசடி சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. அப்படி தான், தற்போது மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் ஆன்லைன் விளம்பரத்தை நம்பி சென்றவருக்கு அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் புனேவைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் சமீபத்தில் விளம்பர வீடியோ ஒன்றை பார்த்துள்ளார். அந்த வீடியோவில் பெண் ஒருவர், உடலுறவுக்கு அழைத்து தன்னை கர்ப்பமாக்கினால் அதற்காக பணம் தருவதாக கூறியிருந்தார்.
மேலும், அந்த வீடியோவில் பெண், தாய்மையின் மகிழ்ச்சியைக் கொடுங்கள். நான் அவருக்கு ரூ.25 லட்சம் தருகிறேன். அவர் படித்தவரா இல்லையா, எந்த சாதியைச் சேர்ந்தவர், அவர் சிவப்பா, கருப்பா என்பது எனக்கு முக்கியம் இல்லை என்று கூறினார். வீடியோவைப் பார்த்த பிறகு, அவர் அந்த பெண்ணை தொடர்பு கொள்ள முயன்றார். அப்போது, பெண்ணின் உதவியாளர் எனக் கூறிக் கொண்டு ஒருவர், ஒப்பந்ததாரிடம் பேசினார்.
தொடர்ந்து, ஒப்பந்ததாரரை சிலர் தொடர்பு கொண்டு பணம் கேட்டனர். பதிவு கட்டணம், அடையாள அட்டை கட்டணங்கள், சரிபார்ப்பு கட்டணம் உள்ளிட்ட பல்வேறு கட்டணங்களை செலுத்த ஒப்பந்ததாரர் பலமுறை வற்புறுத்தப்பட்டார். ஒப்பந்ததாரர் ஒருநிமிடம் கூட யோசிக்காமல், அவர் பணத்தை அனுப்பினார். அந்த நபர்கள் கேட்கும் போது எல்லாம், ஒப்பந்ததாரர் பணத்தை அனுப்பி இருக்கிறார். செப்டம்பர் முதல் வாரத்திலிருந்து அக்டோபர் 23 வரை மொத்தம் ரூ.11 லட்சத்தை அவர் அனுப்பி இருக்கிறார்.
100க்கும் மேற்பட்ட சிறிய பணப் பரிமாற்றங்களையும் அவர் செய்துள்ளார். அதன்பிறகு, அவருக்கு சில நாட்கள் எந்த கால் எதுவும் வரவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர், உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். உடனடியாக மோசடி செய்பவர்கள் பயன்படுத்திய தொலைபேசி எண்கள் மற்றும் வங்கிக் கணக்குகள் குறித்து விசாரணையைத் தொடங்கினர்.
இதுகுறித்து காவல்துறை கூறுகையில், "சந்தேகத்திற்கிடமான ஆன்லைன் விளம்பரங்கள் அல்லது சலுகைகளுக்கு குடிமக்கள் பதிலளிப்பதைத் தவிர்க்க வேண்டும். தனிப்பட்ட வேலைக்காக யாராவது ஆன்லைனில் பெரிய தொகையை கேட்டால், அவர்கள் உடனடியாக காவல்துறையிடம் புகார் செய்ய வேண்டும்" என தெரிவித்தார்.
பீகார், உத்தரபிரதேசம் மற்றும் பிற மாநிலங்களில் உள்ள காவல்துறையினர் ஏற்கனவே இந்த மோசடிகளுடன் தொடர்புடைய பல குற்றவாளிகளைக் கைது செய்துள்ளனர். 2022 ஆம் ஆண்டின் பிற்பகுதியிலிருந்து நாடு முழுவதும் இதேபோன்ற மோசடிகள் பதிவாகியுள்ளதாக புனேவில் உள்ள சைபர் கிரைம் புலனாய்வாளர்கள் குறிப்பிட்டனர்.
கர்ப்பிணி வேலை சேவை போன்ற பெயர்களில், பெண்களை கருத்தரிக்க ஆண்களுக்கு பெரிய அளவில் பணம் வழங்குவதாக கூறி, பெண்களே இடம்பெறும் சமூக ஊடக விளம்பரங்களை மோசடி செய்பவர்கள் பரப்பியுள்ளனர். இந்த விளம்பரத்தை நம்பி வருபவர்களின் விவரத்தை பதிவு செய்து, மருத்துவ பரிசோதனைகள், பாதுகாப்பு வைப்புத்தொகைகளுக்கு முன்கூட்டியே கட்டணம் செலுத்துமாறு கேட்கப்படுகிறார்கள். பணம் செலுத்தப்பட்டவுடன், மோசடி செய்பவர்கள் அவர்களை தொடர்பு கொள்வதில்லை. இதுபோன்ற மோசடி தான் தற்போது புனேவில் அரங்கேறி இருக்கிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ