இந்தியாவையே சுற்றும் வைரல் இன்ஸ்டா பிரபலம்... யார் இந்த ராதிகா சுப்பிரமணியம்?

Radhika Subramaniyam: இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களுக்கு பயணித்து வரும் ராதிகா சுப்பிரமணியம்தான் தற்போது அதிகம் வைரலாகி வருகிறார். யார் இவர், ஏஏன் இவர் வைரலாகி வருகிறார் என்பதை இங்கு பார்க்கலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Jun 15, 2025, 03:11 PM IST
  • ராதிகா பயண பிரியர் ஆவார்.
  • இவர் சமூக வலைதள பிரபலமாகவும் உள்ளார்.
  • பல்வேறு மாநிலங்கள் சார்ந்த கதைகளை இவர் கூறுவார்.
இந்தியாவையே சுற்றும் வைரல் இன்ஸ்டா பிரபலம்... யார் இந்த ராதிகா சுப்பிரமணியம்?

Radhika Subramaniyam: நாடு முழுக்க, உலகம் முழுக்க எந்தவித நெருக்கடியும் இன்றி, அழுத்தமும் இன்றி, பிரச்னையும் இன்றி பயணம் செய்ய வேண்டும் என்பது பலரின் விருப்பமாக இருக்கும். அதற்கு அதிக நேரமும், அதிகளவில் பணமும் தேவை எனலாம். 

சிறுவயதில் பள்ளி, வளர்ந்த பின் கல்லூரி, இளம் வயதில் வேலை, குடும்பம் என சாதாராண மனிதர்களுக்கு இது சாத்தியப்படாத கனவாகும். எனவேதான் சாத்தியமாகும் இடங்களுக்கு குறுகிய நேரத்தில் பயணம் செய்து மகிழ்ச்சியடைந்துகொள்கிறார்கள். 

அதாவது குற்றாலத்தில் பல அருவிகளிலும் குளித்துவிட்டால் உலகத்தில் உள்ள அனைத்து நீர்வீழ்ச்சிகளிலும் குளித்துவிட்டதுபோல் சந்தோஷப்பட்டு நிம்மதி அடையலாம். இருப்பினும் உள்ளுக்குள் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்ல வேண்டும் என்ற ஆசை இருந்துகொண்டேதான் இருக்கும்.

Radhika Subramaniyam: யார் அந்த ராதிகா சுப்பிரமணியம்? 

இதற்கு தீர்வு காணும் வகையில், செயற்கை நுண்ணறிவை (AI) பயன்படுத்தி இந்தியாவில் முதல்முறையாக டிஜிட்டல் ஆளுமை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த டிஜிட்டல் ஆளுமைக்கு ராதிகா சுப்பிரமணியம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட டிஜிட்டல் ஆளுமைதான் சமீப காலமாக செய்திகளில் அடிப்படத் தொடங்கி உள்ளது.

Radhika Subramaniyam: ராதிகா சுப்பிரமணியம் என்ன செய்வார்?

ராதிகா சுப்பிரமணியம் என்ற இந்த ஏஐ டிஜிட்டல் ஆளுமை, ஒரு பயணம் பிரியர் எனலாம். இவர் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ள அங்கு கலாச்சாரம் மற்றும் வரலாற்றுக் கதைகள், தகவல்களை ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளில் சமூக வலைதளங்களில் வழங்கி வருகிறார். இவரை Collective Artists Network என்ற நிறுவனம் உருவாக்கி உள்ளது. ராதிகா சுப்பிரமணியம் தனியாக பயணம் போகும் ஒரு Gen Z தலைமுறையினர் போல் உருவாக்கப்பட்டுள்ளார்.

Radhika Subramaniyam: ராதிகா சுப்பிரமணியம் சொல்லும் கதைகள்...! 

Collective Artists Network நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் குரூப் சிஇஓவான விஜய் சுப்பிரமணியம் இதுகுறித்து கூறுகையில்,"ராதிகா யார் என்றால், உங்கள் அனைவருக்கும் ஒரு நண்பர் இருப்பார், அதாவது வேலையை விட்டுவிட்டு அவர் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும் என விரும்புவார் அல்லவா... அவரை போல்தான் ராதிகா..." என்கிறார். 

 

ராதிகா சுப்பிரமணியன் சிந்தனைமிக்கவர், சுதந்திரமானவர், மக்களுடன் நட்பு பாராட்ட விரும்புபவர். ராதிகாவை ஒரு Influencer ஆக மட்டுமின்றி அதனை தாண்டியும் தாக்கம் செலுத்தக் கூடியவராக உருவாக்க விரும்பினோம். தனிநபர்களின் கதை மற்றும் உண்மையான கதைகளை ராதிகா சொல்ல வேண்டும் என விரும்பினோம்.

Radhika Subramaniyam: உள் அர்த்தத்தை புரிந்துகொள்ளும் ராதிகா சுப்பிரமணியம் 

ராதிகாவிடம் ஒருவித நெருக்கம் இருக்கிறது, அதை போலி என்று கூறுவது கஷ்டம். அவர் வெறும் டிரெண்டிங்கை வெளிப்படுத்த மாட்டார் அல்லது வைரலாவதற்கு முயற்சிக்க மாட்டார். உண்மையில் அவர் உள் அர்த்தத்தை புரிந்துகொள்கிறார். பிராண்டுகளுக்கு, அதுதான் பொக்கிஷம் எனலாம். எப்போதும் உங்கள் சிந்தனையுடன் ஒத்திசைந்து, எப்போதும் ஆர்வமாக இருக்கும் ஒருவரை நீங்கள் பெறுவீர்கள். இது பார்வையாளர்களை கவரும். இந்த வகையான கதைசொல்லல் மிகவும் உற்சாகமாக இருக்கும்" என்று Collective Artists Network நிறுவனத்தின் தலைமை வருவாய் அதிகாரியும், Big Bang Social நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியுமான சுதீப் சுபாஷ் ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார். 

Radhika Subramaniyam: ராதிகா சுப்பிரமணியம் உருவாக்கப்பட்டது எப்படி?

இயந்திர கற்றல் (Machine Learning), இயற்கை மொழி செயலாக்கம் (Natural Language Processing) மற்றும் Generative Design போன்ற கருவிகளைப் பயன்படுத்தி ராதிகா உருவாக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த சுற்றுலா தளங்களுக்கு பயணிக்க இவர் நம்மை போன்று பணம் செலவழிக்க மாட்டார். 

சமூக வலைதளங்களில் Influencer ஆக இவர் செயல்படுவார். சமூக வலைதளப் பக்கங்களில் புகைப்படங்களை இடுகையிடுதல், Caption எழுதுவார் மற்றும் ஆன்லைனில் பின்தொடர்பவர்களுடன் உரையாடுவார். கதை சொல்லல் மூலம் பார்வையாளர்களுக்கு பரந்துபட்ட அனுபவத்தை கொடுப்பார். இவர் பயணம் சார்ந்த மக்களின் கேள்விகளையும், சந்தேகங்களையும் கூட தீர்த்துவைக்கிறார். 

மேலும் படிக்க | புதிய வீட்டு கடன் திட்டம் 2025! இனி சொந்த வீடு கனவு எளிதானது!

மேலும் படிக்க | உத்தரகாண்ட் ஹெலிகாப்டர் விபத்து: 7 பேர் பலி - 6 வாரங்களில் இது 5வது விபத்து

மேலும் படிக்க | நீட் ரிசல்ட் வந்தாச்சு... இனி மருத்துவ சீட் வாங்குவது எப்படி? கவுன்சிலிங் எப்படி நடக்கும்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News