)
Rahul Gandhi, PM Modi - Donald Trump: இந்தியா, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தும் என இந்திய பிரதமர் மோடி, தன்னிடம் வாக்குறுதி அளித்ததாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருந்த நிலையில், மோடியை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக சாடி உள்ளார்.
PM Modi is frightened of Trump.
— Rahul Gandhi (@RahulGandhi) October 16, 2025
1. Allows Trump to decide and announce that India will not buy Russian oil.
2. Keeps sending congratulatory messages despite repeated snubs.
3. Canceled the Finance Minister’s visit to America.
4. Skipped Sharm el-Sheikh.
5. Doesn’t contradict him…
இதுகுறித்து, ராகுல் காந்தி அவரது அதிகாரப்பூர்வ X தளத்தில், "டிரம்பைப் பார்த்து பிரதமர் மோடி பயப்படுகிறார். இந்தியா, ரஷ்ய எண்ணெயை வாங்காது என்று டிரம்பே முடிவு செய்து அறிவிக்க அனுமதிக்கிறார். பலமுறை அவமதிக்கப்பட்ட போதிலும் வாழ்த்துச் செய்திகளை அனுப்பிக் கொண்டே இருக்கிறார். நிதியமைச்சரின் அமெரிக்க வருகையை ரத்து செய்தார். ஷர்ம் எல்-ஷேக் (அமைதி மாநாட்டை) தவிர்த்துவிட்டார். ஆபரேஷன் சிந்தூர் குறித்து அவரது (டிரம்ப்பின்) கருத்துக்களை மறுக்கவும் இல்லை" என சாராமாரியாக சாடி உள்ளார்.
இந்திய பொருள்கள் மீது அதிக வரியை விதிப்பது தொடங்கி பல அவமதிப்புகளை சந்தித்த பிறகும் கூட, பிரதமர் மோடி டிரம்ப்புக்கு வாழ்த்துச் செய்தி அனுப்புவதாக ராகுல் காந்தி சாடி உள்ளார். சமீபத்தில், ஹமாஸ் - இஸ்ரேல் இடையே போர் நிறுத்தத்திற்கு டிரம்ப்பிற்கு, மோடி வாழ்த்து கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி, எகிப்து நாட்டின் ஷ்ரம் எல்-ஷேக் நகரில் நடைபெற்ற 2025 காசா அமைதி உச்சி மாநாட்டையும் இந்தியா புறக்கணித்ததையும் ராகுல் காந்தி குறிப்பிட்டார். நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் அமெரிக்க பயணம் ரத்து செய்யப்பட்டதையும் ராகுல் காந்தி குறிப்பிட்டுகிறார்.
அதேபோல், இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பிரச்னையை வணிகத்தை பயன்படுத்தி தான் முடிவுக்கு கொண்டுவந்ததாக டொனால்ட் டிரம்ப் 51 முறை கூறியிருக்கும் நிலையில், பிரதமர் மோடி அதுகுறித்து இதுவரை வாய்த்திருக்கவில்லை என ராகுல் தெரிவித்துள்ளார். தற்போது இந்தியா ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதியை நிறுத்தும் என்பதை டொனால்ட் டிரம்ப் அறிவித்ததையும் குறிப்பிட்டு, இந்த 5 காரணங்களை முன்வைத்து டொனால்ட் டிரம்ப்பை பார்த்து பிரதமர் மோடி அச்சப்படுகிறார் என்பதை ராகுல் காந்தி கூறுகிறார்.
முன்னதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையில் பேசுகையில், "ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்க மாட்டோம் என்று அவர் (பிரதமர் நரேந்திர மோடி) இன்று எனக்கு உறுதியளித்தார். அது ஒரு பெரிய நகர்வாகும்" என்றார். மேலும், தனது நண்பர் என்றும் டிரம்ப் மோடியை குறிப்பிட்டார். எரிபொருள் கொள்கையில் இருதரப்புக்கும் இடையே பிரச்னை இருந்தாலும் இந்தியா நெருங்கிய பார்ட்னர் என்றும் அவர் குறிப்பிட்டார். சீனாவுடன் தற்போது கடும் பிரச்னை நிலவும் வேளையில் இந்தியா நம்பத்தகுந்த பார்ட்னராக பார்க்க முடியுமா என்று டிரம்ப்பிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, "எங்களிடையே சிறந்த உறவு நீடிக்கிறது" என டிரம்ப் பதிலளித்தார்.
கச்சா எண்ணெய் மூலம் ரஷ்யா பெறும் வருமானத்தை குறைப்பதில், பிரதமர் மோடியின் இந்த உறுதியளிப்பு முக்கிய ராஜதந்திர நகர்வாகும் என்று கூறினார். இந்தியாவை ஒப்புக்கொள்ள வைத்ததுபோல், சீனாவிடமும் நாம் இதையே செய்தாக வேண்டும் என்றும் அவர் கூறினார். மேலும், கடந்த வாரம் மத்திய கிழக்கில் நாம் செய்ததை ஒப்பிடும்போது, சீனாவுக்கு அழுத்தம் கொடுப்பது மிக எளிதுதான் என்றும் டிரம்ப் பேசினார்.
டொனால்ட் டிரம்ப் இந்தியா குறித்து மேலும் பேசுகையில், "அவர் (மோடி) ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய்யை வாங்கவில்லை. ஆனால், அவரால் அதை உடனடியாகச் செய்ய முடியாது. இது ஒரு நீண்ட செயல்முறை, ஆனால் செயல்முறை விரைவில் முடிவடையும்" என்றார். ஆனால், இதுவரை இந்திய அரசு டிரம்ப்பின் பேச்சுக்கு எவ்வித பதிலும் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ