மோடி ஊழல்; ஆதாரம் என்னிடம் உள்ளது - ராகுல் காந்தி
பிரதமர் மோடியின் ஊழல் சம்பந்தமா சில தகவல் என்னிடம் உள்ளது என கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
மத்திய மந்திரி கிரண் ரிஜ்ஜூ மீதான குற்றச்சாட்டு, ரூபாய் ஒழிப்பு நடவடிக்கை உள்ளிட்ட விவகாரங்களை எழுப்பி இன்றும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் பாராளுமன்றம் முடங்கியது.
இதனையடுத்து ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது அவர் கூறியதாவது:-
மோடி ஊழல் செய்துள்ளார். அதைதான் நான் பாராளுமன்றத்தில் பேச விரும்புகின்றேன் ஆனால் என்னை பேசுவதற்கு அனுமதிப்பது கிடையாது என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். என்னை பேசவிட்டால் அவருடைய பலூன் வெடித்துவிடும் என்று தெரிந்துதான் என்னை பேசவிட பிரதமர் மோடி பயப்படுகிறார் என்றார்.
பிரதமர் மோடி தொடர்பான சில தனிப்பட்ட தகவல்கள் என்னிடம் உள்ளது. இதனையே நான் பாராளுமன்றத்தில் பேச விரும்புகின்றேன். ஆனால் அவர்கள் என்னை பேச விடுவதில்லை. அனைத்து எதிர்க்கட்சியினரையும் பாராளுமன்றத்தில் பேசுவதற்கு அரசு அனுமதிக்க வேண்டும். பிரதமர் மோடி நாட்டிற்கு விளக்கம் கொடுக்க வேண்டியது உள்ளது. தொடர்ந்து அவர் தப்பி ஓடிவிட முடியாது என்றார். நாங்கள் பார்லிமென்டில் விவாதம் நடத்த வேண்டும் என விரும்புகிறோம் என தெரிவித்தார்.