)
Rahul Gandhi Press Conference On Vote Chori: வாக்குத் திருட்டு விவகாரத்தில் ஹைட்ரஜன் குண்டை வீசப்போவதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியிருந்தார். இதையொட்டி, மிகுந்த எதிர்பார்ப்புகள் மற்றும் பரபரப்புக்கு மத்தியில் ராகுல் காந்தி இன்று (செப். 18) டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். ராகுல் காந்தி சொன்னபடி ஹைட்ரஜன் குண்டை தற்போது போடவில்லை என்றாலும் வாக்கு திருட்டு குறித்த பல்வேறு புதிய குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறார்.
மேலும் இது ஹைட்ரஜன் குண்டுக்கான முன்னோட்டம் என்றும் அடுத்தடுத்த செய்தியாளர்கள் சந்திப்பில் அதை எதிர்பார்க்கலாம் என்றும் தெரிவித்தார். மேலும், புதிய குற்றச்சாட்டுகளின் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு 10 நாள்கள் ராகுல் காந்தி கெடு விதித்துள்ளார். வாக்கு திருட்டு விவகாரத்தில் பல்வேறு முறைகேடுகளை தாங்கள் கண்டறிந்திருப்பதாக அவர் தெரிவித்தார். மேலும் அவர் தனது பேச்சில், "ஜனநாயகத்தை அழிப்பவர்களை தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பாதுகாக்கிறார். போலி login-ஐ பயன்படுத்தி சுமார் 6,000 வாக்குகள் அழிக்கப்பட்டுள்ளன. வாக்காளர்களின் பெயர்களை பட்டியலில் இருந்து நீக்குவதன் மூலம் கட்சியின் வாய்ப்புகளை பலவீனப்படுத்துகின்றனர்" என குற்றஞ்சாட்டினார்.
#WATCH | Delhi: Lok Sabha LoP and Congress MP Rahul Gandhi says, "FIR is filed on February 23. Karnataka CID writes to ECI requesting all details of these numbers and these transactions almost immediately in March. In August, EC gives a reply, doesn't fulfil any of the demands… pic.twitter.com/nPP5FOmxPo
— ANI (@ANI) September 18, 2025
உதாரணத்திற்கு கர்நாடகாவின் தொகுதியின் போலி விண்ணப்பங்களை மேற்கோள் காட்டி, மென்பொருள் மூலம் வாக்காளர் பெயர்கள் நீக்கப்பட்டன என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மேலும் தேர்தல் ஆணையம் ஜனநாயகத்தை அழிப்பவர்களை காப்பாற்றுகிறது என சீறினார். சுதந்திரமான, நியாயமான தேர்தல்களை உறுதி செய்வதற்கு பதில், தேர்தல் ஆணையம் ஒரு சார்பாக செயல்படுவதாகவும் நாட்டில் ஜனநாயக செயல்முறைகளின் மேல் உள்ள மதிப்பைக் குறைக்கும் வகையில் செயல்படுபவர்களை பாதுகாப்பதாகவும் ராகுல் காந்தி தெரிவித்தார்.
#WATCH | Delhi: On being asked if he will approach the Court or any higher agency, Lok Sabha LoP and Congress MP Rahul Gandhi says, "Frankly, what I am doing here is not my work. My work is to participate in the democratic system. My work is not to protect the democratic system.… pic.twitter.com/aTEpraRJry
— ANI (@ANI) September 18, 2025
மேலும், 100 சதவீத உண்மை மற்றும் ஆதாரத்தின் ஆதரவு இல்லாமல் எந்த அறிக்கையையும் வெளியிட மாட்டேன் என பேசிய ராகுல் காந்தி, அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக மதிப்புகளுக்கான தனது உறுதிப்பாட்டையும் வலியுறுத்தினார், தனது நாட்டை நேசிப்பதாகவும், அதன் ஜனநாயக செயல்முறையைப் பாதுகாப்பதில் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் ராகுல் காந்தி கூறினார். தான் கூறும் அனைத்தும் உண்மையைச் சரிபார்க்கக்கூடியதாகவும், நிரூபிக்கக்கூடிய ஆதாரங்களின் அடிப்படையில் இருக்கும் என்றும் அவர் உறுதி அளித்தார்.
போலி விண்ணப்பங்கள் மற்றும் மென்பொருள் ஆகியவற்றின் மூலம் வாக்காளர் பட்டியலில் இருந்து வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும் அதில் பெரும்பாலும் சிறுபான்மையினரே குறிவைக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தி பேசியதாவது, "ஆலந்த் என்பது கர்நாடகாவின் தொகுதியாகும். ஒரு சிலர் அங்கு 6,018 வாக்குகளை அழிக்க முயற்சித்துள்ளனர். 2023 சட்டப்பேரவை தேர்தலில் ஆலந்த் தொகுதியில் மொத்தம் எத்தனை வாக்குகள் அழிக்கப்பட்டன என்பது நமக்கு தெரியாது. கண்டிப்பாக 6,018 வாக்குகளை விட அதிகமாக இருக்கும். ஆனால் யாரோ ஒருவர் அந்த 6,018 வாக்குகளை நீக்கும்போது பிடிபட்டார், அதுவும் தற்செயலாகப் பிடிபட்டுள்ளார்.
ஒரு பெண் தனது உறவினர் ஒருவரின் வாக்கு ஏன் இல்லை என்பதை சரிபார்த்துள்ளார். அப்போதுதான் பக்கத்துவீட்டுக்காரர்கள் அதை செய்துள்ளார்கள் என்பது தெரியவந்துள்ளது. உடனே பக்கத்துவீட்டுக்காரர்களிடம் கேட்டுள்ளார், ஆனால் அவர்கள் அப்படி ஏதும் தாங்கள் செய்யவில்லை என தெரிவித்துள்ளனர். வாக்கை நீக்கியதாக கூறப்பட்ட நபருக்கோ, வாக்கு பறிக்கப்பட்ட நபருக்கோ விஷயமே தெரியாது. வேறு சில அந்நிய சக்திகள் விண்ணப்பித்து, வாக்கை அழித்துள்ளன" என்றார். மேலும், யாரின் வாக்குகள் அழிக்கப்பட்டதோ அவர்களை மேடையேற்றி அவர்களின் வாக்குமூலத்தையும் ராகுல் காந்தி செய்தியாளர் சந்திப்பிலேயே பதிவு செய்ய வைத்தார். மொத்தம் 12 வாக்காளர்களை அவர் மேடையேற்றினார்.
ராகுல் காந்தி மேலும் கூறியதாவது, "ஒரு மென்பொருள் வாக்குச் சாவடியில் முதல் பெயரை எடுத்து, அதைப் பயன்படுத்தி வாக்குகளை நீக்குகிறது. வாக்குச்சாவடியில் முதலில் வருபவர் விண்ணப்பதாரர் என்பதை உறுதிப்படுத்த யாரோ ஒரு ஆட்டோமேட்டிக் பிரோகிராமை அமைத்துள்ளனர். அதே நபர் கர்நாடகாவுக்கு வெளியில் இருந்து செல்போன்களைப் பெற்று விண்ணப்பத்தை தாக்கல் செய்ய மொபைல்களை பயன்படுத்தினார். இது ஒரு அடிமட்டத்தில் செய்யப்பட்டது போல் இல்லை. பெரியளவில் ஒருங்கிணைக்கப்பட்டு, அதிகமானோர் இதில் ஈடுபட்டுள்ளனர். அதிகபட்சமாக நீக்கப்பட்ட முதல் 10 வாக்குச்சாவடிகள் காங்கிரசின் கோட்டைகளாக கருதப்படுபவை. 2018ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில், இந்த 10 வாக்குச்சாவடிகளில் 8 வாக்குச்சாவடிகளை காங்கிரஸ் வென்றது. இது தற்செயல் நிகழ்வு அல்ல. இது ஒரு திட்டமிட்ட செய்யப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் இந்த வாக்கு திருட்டு விவகாரம் குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக கர்நாடக சிஐடி, தேர்தல் ஆணையத்திற்கு 18 மாதங்களில் 18 கடிதங்களை அனுப்பி இருக்கிறது. மேலும் அவர்கள் தேர்தல் ஆணையத்திடம் சில எளிய உண்மைகளைக் கேட்டுள்ளனர். வாக்காளர் நீக்க படிவங்கள் நிரப்பப்பட்ட சாதனத்தின் IP முகவரி மற்றும் OTP வந்த தடங்கள் போன்ற தகவல்களை சிஐடி கேட்டிருக்கிறது. ஆனால் அவர்கள் வழங்கவில்லை, ஏன் அவர்கள் வழங்கவில்லை?. ஏனென்றால் இந்த விஷயங்கள் எங்கு நடக்கிறதோ, அந்த இடத்திற்கு எங்களை இது அழைத்துச் செல்லும், மேலும் இது எங்கு செல்லப் போகிறது என்பதிலும் நாங்கள் உறுதியாக உள்ளோம். இதைச் செய்பவர்களை தலைமை தேர்தலை ஆணையர் ஞானேஷ் குமார் பாதுகாக்கிறார் என்பதற்கு இது உறுதியான சான்றாகும்" என்றார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ