காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் சொத்து மதிப்பு 15.88 கோடியே ரூபாய் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மக்களவை தேர்தலில் கேளரா மாநிலம் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடவுள்ளார். இதற்கான வேட்பு மனுவை நேற்று ராகுல்காந்தி தாக்கல் செய்தார். வயநாடு தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்து பாஜக சார்பில் பாரத் தர்ம ஜனசேனா வேட்பு மனு தாக்கல் செய்தார்.  


காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உத்திரபிரதேசம் அமேதி லோக்சபா தொகுதியில் போட்டியிடுகிறார். இரண்டாவதாக வயநாடு லோக்சபா தொகுதியிலும் போட்டியிட வேண்டும் என கேரளா காங்கிரஸ் கட்சியினர் வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து நேற்று  வயநாடு சென்று தேர்தல் அலுவலரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.


இந்நிலையில் வேட்புமனுவை தாக்கல் செய்த ராகுல்காந்தி தமது சொத்துகள் குறித்த விவரத்தையும் இணைத்திருந்தார். அதில், அவருடைய அசையும் சொத்துகள் மதிப்பு சுமார் 5 கோடியே 80 லட்சம் 58 ஆயிரம் ரூபாய் என்றும் அசையா சொத்துகளின் மதிப்பு ஏழு கோடியே 93 லட்சம் ரூபாய் என்றும் நடப்பாண்டு வருமானம் சுமார் ஒரு கோடியே 11 லட்சம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த 2014ம் ஆண்டு மக்களவை தேர்தலின் போது ராகுல் காந்தி தனது வேட்புமனுவில் குறிப்பிட்ட சொத்து மதிப்பை விட ரூ. 9.4 கோடி அளவில் அவருடைய சொத்து தற்போது அதிகரித்துள்ளது.