)
Rajasthan Bride Runs Off Marriage Night : ராஜஸ்தான் மாநிலம் கிஷான்கார்க் பகுதியை சேர்ந்தவர் 32 வயது நபர் . இவருக்கு திருமண செய்ய முடிவு செய்யப்பட்டது . ஆனால் பல இடங்களில் தேடியும் மணப்பெண் அமையவில்லை. இதற்கிடையே தான் ஜிதேந்திரா என்பவர் அந்த இளைஞரின் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு. தன்னை திருமண புரோக்கர் என்று அறிமுகம் கொண்டார். அதோடு ஆக்ராவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் உள்ளார். சம்மதம் தெரிவித்தால் திருமணம் செய்து வைப்பதாக நம்பிக்கையளித்தார். இளைஞரின் வீட்டினரும் மணப்பெண் கிடைக்காத விரக்தியில் இருந்ததால் அவர்கள் கண்மூடித்தனமாக ஜிதேந்திராவை நம்பினர்.
திருமண இரவு..
ஜிதேந்திரா சுமார் 27 வயது நிரம்பிய பெண் ஒருவரை அறிமுகம் செய்தார். இளைஞரின் குடும்பத்துக்கு அந்த பெண் பிடித்துப்போனது. திருமண ஏற்பாடுகள் தொடங்கியது. ஜிதேந்திரா ரூ.2 லட்சத்தை கமிஷனாக பெற்று கொண்டார். அதன்பிறகு இருவரின் திருமணமும் ஜெய்ப்பூரில் கோலகலாமாக நடந்தது. இளைஞரின் சம்பிரதாய முறைப்படி திருமணம் நடந்தது. அறுசுவை உணவுகளுடன் திருமண விழா சிறப்பாக முடிவடைந்தது.
அதன்பிறகு கிஷான்கார்க் பகுதிக்கு புதுமண ஜோடி வந்தனர். முதலிரவில் இளைஞரும், இளம்பெண்ணும் தங்களின் ‛பெட்ரூம்' சென்றார். அப்போது அந்த இளம்பெண், ‛‛இன்று முதலிரவு வேண்டாம். நாம் இருவரும் இன்று ஒன்றாக படுக்கையை பகிர வேண்டாம். எங்களின் பாரம்பரியப்படி முதலிரவில் கணவன் - மனைவி சேர்ந்து இருக்க கூடாது'' என்றார். இதனை மாப்பிள்ளை பெரிதாக எடுக்கவில்லை. இருவரும் ஒரே அறையில் தனித்தனியாக படுத்து கொண்டனர்.
பெண்ணை காணவில்லை!
சுமார் 3 மணியளவில் திடீரென்று மாப்பிள்ளைக்கு தாகம் எடுத்தது. தண்ணீர் குடிக்க அவர் கண்விழித்தார். அப்போது தான் அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது தனது அறையில் தனியாக படுத்து கிடந்த மனைவியை காணவில்லை. அவரை வீடு முழுவதும் தேடிப்பார்த்தார் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அதுமட்டுமின்றி வீட்டில் இருந்த நகை, பணமும் மாயமாகி இருந்தது. இதனால் மனைவி தான் பணம், நகையை எடுத்து கொண்டு எஸ்கேப் ஆகியிருக்க வேண்டும் என்று நினைத்தார்.
உடனடியாக அந்த இளைஞர் பஸ் நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்டவற்றில் தனது குடும்பத்தினருடன் தேடினார். அங்கு அவர் இல்லை. அதேபோல் திருமண புரோக்கர் ஜிதேந்திராவை தொடர்பு கொள்ள முயன்றும் முடியவில்லை. இதனால் இருவரும் சேர்ந்து தான் மோசடி செய்திருப்பதாக இளைஞரின் குடும்பத்தினர் நினைத்தர். இதுபற்றி மதன்கஞ்ச் போலீசில் புகாரளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து புதுப்பெண் மற்றும் திருமண புரோக்கர் ஜிதேந்திரா ஆகியோரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் இளைஞரின் குடும்பத்தை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ