)
Rajasthan Bus Fire Accident: ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்சல்மரில் இருந்து ஜோத்பூர் நோக்கிச் சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததில், உள்ளே இருந்த 20 பயணிகள் உடல் கருகி உயிரிழந்தனர்.
ராஜஸ்தானில் இச்சம்பவம் நேற்று (அக். 14) மதியம் நடந்துள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் பல்வேறு விஷயங்கள் தெரியவந்துள்ளன. நேற்று மதியம் 3 மணிக்கு ஜெய்சல்மர் நகரில் இருந்து 57 பயணிகளுடன் அந்த தனியார் பேருந்து புறப்பட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
ஜெய்சல்மர் - ஜோத்பூர் நெடுஞ்சாலையில் பேருந்துகொண்டிருந்தபோது, பின்பகுதியில் இருந்து கடுமையாக புகை வரத் தொடங்கி இருக்கிறது. இதைப் பார்த்ததும் ஓட்டுநர் சாலையோரம் பேருந்தை நிறுத்தி உள்ளார், ஆனால் உடனே பேருந்து முழுவதும் தீப்பிடித்து எரியத் தொடங்கியிருக்கிறது.
பேருந்து எரிவதை பார்த்ததும் சாலையில் வாகன ஓட்டிக்கொண்டிருந்தவர்கள், உள்ளூர் மக்கள் உள்ளிட்டோர் கூடி பேருந்தின் தீயை அணைத்து, உள்ளே இருக்கும் பயணிகளை பத்திரமாக மீட்கும் பணியில் இறங்கியிருக்கின்றனர். தீயணைப்பு துறைக்கும், காவல்துறைக்கும் அவர்களே தகவல் கொடுத்துள்ளனர்.
Tragic news from #Jaisalmer
— पारुल कुलश्रेष्ठ (@parul_kuls) October 14, 2025
A moving bus consisting 57 passengers caught fire. More than 10 people got burnt and rest are given medical assistance. pic.twitter.com/yi76gcQ5Y6
பேருந்தில் மின் கசிவு (Short Circuit) காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தகவல் கிடைத்துள்ளது. விபத்துக்குள்ளான இந்த தனியார் பேருந்து, 5 நாள்களுக்கு முன்னர் வாங்கப்பட்ட புதிய பேருந்து என்பதுதான் மேலும் அதிர்ச்சி அளிக்கிறது. 57 பயணிகளில் இதுவரை 3 பெண்கள், 3 குழந்தைகள் என 20 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 4 பெண்கள், 2 குழந்தைகள் உள்பட 15 பேர் கடுமையான தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு 70% தீக்காயங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. முதலில், மூன்று ஆம்புலன்ஸ்கள் மூலம் ஜெய்சல்மரின் ஜவஹர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக ஜோத்பூருக்கு கொண்டுசெல்லப்பட்டனர்.
பேருந்து முழுவதுமாக எரிந்துவிட்டதாகவும், பலரும் அடையாளம் காண முடியாத அளவிற்கு எரிந்துவிட்டதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவர் கூறுகையில்,"அகமதாபாத் விமான விபத்தில் பின்பற்றப்பட்ட நெறிமுறையைப் போலவே, மரபணு சோதனை மூலம் உயரிழந்தவர்களின் அடையாளம் உறுதி செய்யப்படும். அதன் பிறகுதான் உடல்கள் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும்" என்றார். தடயவியல் மற்றும் மரபணு பரிசோதனைக்கான குழுக்கள் முழு வீச்சில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
இச்சம்பவத்தை தொடர்ந்து, ராஜஸ்தான் முதலமைச்சர் பஜன் லால் சர்மா, நேற்றிரவு ஜெய்சல்மருக்கு வந்தார். தொடர்ந்து, விபத்துக்கு காரணமான பேருந்தையும் முதலமைச்சர் ஆய்வு செய்தார். தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர் ஆறுதல் அளித்தார்.
மேலும் பிரதமர் மோடி, ராஜஸ்தான் பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தனது இரங்கலையும் பதிவு செய்துள்ளார். பிரதமர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் இதுகுறித்து, "ராஜஸ்தானின் ஜெய்சால்மரில் ஏற்பட்ட விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு மிகுந்த துயரத்தை அளிக்கிறது. இந்த கடினமான நேரத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் எனது எண்ணங்கள் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்" என பதிவிட்டுள்ளார். மேலும் பிரதமர் நிவாரணை நிதியில் இருந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ