)
21 Crores Worth Buffalo Death : ராஜஸ்தானின் புஷ்கர் கண்காட்சியில், 21 கோடி மதிப்பிலான எருமை வைரலானது. இதையடுத்து, அந்த எருமை தற்போது உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் எருமை:
ராஜஸ்தான் மாநிலத்தில் வருடா வருடம், புஷ்கர் கால்நடை கண்காட்சி நடப்பது வழக்கம். மிக பிரபலமான இந்த கண்காட்சியானது, மிகப்பெரிய கால்நடைகள் திருவிழாவாக பார்க்கப்படுகிறது. இந்த விழாவினில் ஆயிரக்கணக்கான குதிரைகள், மாடுகள், ஒட்டகங்கள், எருமைகள் உள்ளிட்ட கால்நடைகள் பார்வைக்காகவும் விற்பனைக்காகவும் காட்சிக்கு வைக்கப்படுகின்றன.
ரூ.21 கோடி விலை!
புஷ்கர் கண்காட்சியில், ராஜஸ்தானை சேர்ந்த ஒரு நபருக்கு சொந்தமான எருமைமாடு காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. அதன் பெயர், ‘அன்மோல்’. இந்த எருமை மாட்டின் விலை, ரூ.21 கோடி என்று நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.
ஒரு ராஜாவை போல பராமரிக்கப்படும் இந்த எருமைக்கு, நாள்தோறும் நெய், பால், பருப்பு வகைகள், முந்திரி உள்ளிட்ட வை உணவாக வழங்கப்படுவதாக, அதன் உரிமையாளர் தெரிவித்திருந்தார். புஷ்கர் கண்காட்சிக்கு வந்திருந்த அனைவரின் கவனத்தையும் ஈர்த்த இந்த எருமை, சமூக வலைதளங்கள் மூலம் பெரிதாக வைரலானது.
அந்த எருமை, ஆறு அடி அங்குலமும், 13 அடி நீளமும், 1500 கிலோ எடையும் கொண்டதாக இருந்தது. முரா என்கிற இனத்தை சேர்ந்த இந்த எருமையின் உரிமையாளர் பெயர், ஜக்தர் சிங். 8 வயதான இந்த எருமையின் ஒரு நாள் தீனி செலவு மட்டும் ரூ.2,000 ஆவதாக அவர் தெரிவித்திருந்தார். இந்த எருமையை, தான் மகன் போல வளர்த்து வருவதாக அதன் உரிமையாளர் தெரிவித்து இருந்தார்.
உயிரிழப்பு!
பலரது கவனத்தை ஈர்த்த இந்த அன்மோல் என்கிற எருமை மாட்டின் உடல் நிலை, சமீபத்தில் மோசமடைந்து, உயிரிழந்திருக்கிறது. திடீரென இப்படி ஆனதால், பலர் அதிர்ச்சிக்குள்ளாகினர். லாபம் என்கிற பெயரில் விலங்குகளை கொடுமைப்படுத்துவதற்கு எடுத்துக்காட்டாக, இந்த சம்பவம் நடந்திருப்பதாக விலங்குகள் நல ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
எருமைக்கு ஏற்கனவே உடல் உபாதைகளா இருந்த போதிலும், அதை வலிமையானதாகவும் பருமனாகவும் காண்பிக்க வேண்டும் என்பதற்காக பலவித மருந்துகளை அதற்கு செலுத்தியிருப்பதாக விலங்கு நல ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ