ரத்தன் டாடாவின் உயில்... யார் யாருக்கு என்னென்ன சொத்துக்கள் தெரியுமா?

Ratan Tata Will Details: ரத்தன் டாடா தனது உயிலில் யார் யாருக்கு அவர் எவ்வளவு தொகையை, என்னென்ன சொத்துகளை ஒதுக்கியிருக்கிறார் என்பதை இங்கு அறிந்துகொள்ளலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Apr 1, 2025, 06:39 PM IST
  • ரத்தன் டாடா கடந்தாண்டு மறைந்தார்.
  • அவரது உயில் 2022இல் எழுதப்பட்டுள்ளது.
  • பெரும் தொகையை தொண்டுக்கு ஒதுக்கி உள்ளார்.
ரத்தன் டாடாவின் உயில்... யார் யாருக்கு என்னென்ன சொத்துக்கள் தெரியுமா?

Ratan Tata Will Details: கடந்தாண்டு அக்டோபர் 9ஆம் தேதி இந்திய தொழில்துறையில் முன்னோடியான ரத்தன் டாடா மறைந்தார். அவரது மறைவையொட்டி நாடு முழுவதும் உள்ள மக்கள் தங்களின் துக்கத்தை சமூக வலைதளங்கள் மூலம் பகிர்ந்துகொண்டனர். ரத்தன் டாடா தங்களின் எந்தளவிற்கு ஊக்கப்படுத்தியுள்ளார் என்பதையும் பலரும் அந்த காலகட்டத்தில் பகிர்ந்துகொண்டது இங்கு நினைவுக்கூரத்தக்கது.

Add Zee News as a Preferred Source

Ratan Tata Will: யார் யாருக்கு என்னென்ன ஒதுக்கீடு?

மக்களின் இத்தகைய அன்புக்கு காரணம், ரத்தன் டாடா செய்த வந்த மனிதநேய செயல்பாடுகள் எனலாம். கடைசி வரை திருமணம் செய்துகொள்ளாத ரத்தன் டாடா, டாடா சன்ஸ் உள்ளிட்ட தனது பெருவாரியான சொத்துக்களை தொண்டு நோக்கத்திற்கு தானம் அளித்தார் எனலாம்.

இருப்பினும் ரத்தன் டாடா அவரது குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள், அவரிடம் பணியாற்றியவர்கள், ஏன் அவரின் வளர்ப்பு நாயை கூட கடைசிக் கட்டத்தில் மறக்கவில்லை எனலாம். அந்த வகையில், ரத்தன் டாடாவின் உயில் குறித்த விவரங்களை இங்கு காணலாம். அதில் யார் யாருக்கு ரத்தன் டாடா எவ்வளவு தொகையை, என்னென்ன சொத்துகளை ஒதுக்கியிருக்கிறார் என்பதை அறிந்துகொள்ளலாம்.

மேலும் படிக்க | டாடா டிரஸ்டின் வயதில் மிக இளைய ஜி.எம் யார் தெரியுமா? ரத்தன் டாடாவின் நெருங்கிய தோழன் ஷாந்தனு நாயுடு!

Ratan Tata Will: பெரும் பகுதி அறக்கட்டளைகளுக்கு...

ரத்தன் டாடா அவரது சொத்துகளில் பெரிய பகுதியை, அதாவது ரூ.3,800 கோடி சொத்துக்களை, ரத்தன் டாடா எண்டோவ்மென்ட் ஃபவுண்டேஷன் மற்றும் ரத்தன் டாடா எண்டோவ்மென்ட் அறக்கட்டளை ஆகியவற்றுக்கு ஒதுக்கி உள்ளார். தொண்டு நிறுவனங்களான இவை இந்த நிதியை கொண்டு மனிதநேய செயல்பாடுகளில் ஈடுபடும்.

டாடா சன்ஸ் நிறுவனத்தில் அவரது பங்குகளை தவிர்த்து, ரத்தன் டாடா பல்வேறு பங்குகளில், சொத்துக்களில் முதலீடு செய்துள்ளார். இதில் ஒதுக்கப்படாத பங்குகள், முதலீடுகள் அல்லது சொத்துக்கள் இந்த அறக்கட்டளைகளுக்கு விநியோகிக்கப்படும் என உயிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Ratan Tata Will: சகோதரிகளுக்கு ரூ.800 கோடி சொத்துக்கள்

மேலும், அவரது சொத்துக்களின் மூன்றில் ஒரு பங்கை, அதாவது ரூ.800 கோடி மதிப்புள்ள வங்கி FD-க்கள், பங்குகள், மதிப்புமிக்க பொருட்களை அவரது ஒன்றுவிட்ட சகோதரிகளான ஷிரீன் ஜெஜீபாய் மற்றும் டீனா ஜெஜீபாய் ஆகியோருக்கு ஒதுக்கி உள்ளார். அவரது சொத்துக்களில் மற்றொரு மூன்றில் ஒரு பங்கை ரத்தன் டாடாவுக்கு நெருக்கமானவரும், முன்னாள் டாடா குழு பணியாளருமான மோகினி எம் தத்தாவுக்கு ஒதுக்கி உள்ளார்.

Ratan Tata Will: நண்பர்களுக்கும், செல்லப் பிராணிகளுக்கும்... 

ரத்தன் டாடாவின் மும்பையில் உள்ள ஜூஹூ சொகுசு பங்களா, வெள்ளி பொருள்கள், ஆபரணங்களை அவரது 82 வயது இளைய சகோதரரான ஜிம்மி நேவல் டாடாவுக்கு ஒதுக்கி உள்ளார். ரத்தன் டாடாவின் நெருங்கிய நண்பர் மெஹ்லி மிஸ்திரிக்கு, அவரின் அலிபாக் சொத்து மற்றும் 0.25 பிஸ்டல் உட்பட மூன்று துப்பாக்கிகளை வழங்கி உள்ளார். 

ரத்தன் டாடாவின் விலங்குகள் மீதான அன்பு அனைவருக்கும் தெரியும். அவர் தனது செல்லப்பிராணிகளுக்காக ரூ.12 லட்ச நிதியாக ஒதுக்கி உள்ளார். அவற்றின் பராமரிப்புக்காக ஒவ்வொரு காலாண்டிற்கும் ரூ.30,000 பெறுவதையும் உறுதி செய்தார்.

மேலும் படிக்க | ரத்தன் டாடாவின் நம்பிக்கைக்குரிய தமிழ்நாட்டின் பிரியர் யார் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News