போதுமான அளவு நோட்டுகள் உள்ளது- அருண் ஜெட்லி

நாடு முழுவதும் கருப்பு பணத்தை ஒழிக்கும் நோக்கத்தில் மத்திய அரசு 500, 1000 ரூபாய் நோட்டுகளுக்கு கடந்த மாதம் 8-ம் தேதி தடை செய்தது.

Last Updated : Dec 20, 2016, 04:33 PM IST
போதுமான அளவு நோட்டுகள் உள்ளது- அருண் ஜெட்லி title=

புதுடெல்லி: நாடு முழுவதும் கருப்பு பணத்தை ஒழிக்கும் நோக்கத்தில் மத்திய அரசு 500, 1000 ரூபாய் நோட்டுகளுக்கு கடந்த மாதம் 8-ம் தேதி தடை செய்தது.

 
இந்த அறிவிப்பிற்கு பிறகு போது மக்கள் தங்களிடம் இருந்த 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றி வருகின்றார்கள். மேலும் ரூ.500, 1000 நோட்டுகள் வங்கிகளில் வரும் 30-ம் தேதி வரை டிபாசிட் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று ரிசர்வ் வங்கி வெளியிட்ட செய்தியில், ஒருவருடைய வங்கிக்கணக்கில் அதிகபட்சம், ரூ.5000 மட்டுமே செலுத்த முடியும். அதற்கு மேற்பட்ட தொகையை ஒருமுறை மட்டுமே செலுத்த முடியும். அதுவும், இதுவரை அந்த தொகையை செலுத்தாமல் இருந்ததற்கான காரணத்தை தெரிவித்த பின்னரே செலுத்த முடியும். அதை வங்கிகள் பதிவு செய்து, விசாரணை நடத்திய பின்னரே, அந்தத் தொகையானது, வங்கிக் கணக்கில் இருப்பு வைக்கப்படும் என தெரிவித்திருந்தது.

இந்திய ரிசர்வ் வங்கியில் டிசம்பர் 30-ம் தேதிக்கு பிறகு போதுமான புதிய நோட்டுகள் கையிருப்பில் உள்ளது. ரிசர்வ் வங்கியிலிருந்து நாள்தோறும் மற்ற வங்கிகளுக்கு பணம் கொண்டு செல்லப்படுகிறது. பழைய நோட்டுகளை மொத்தமாக டெபாசிட் செய்யாமல் சிறிய தொகைகளாக செலுத்துவது அரசுக்கு சந்தேகத்தை எழுப்புகிறது. பணம் மாற்றும் முறைகேட்டில் சிக்கிய ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம். இவ்வாறு அருண் ஜெட்லி கூறினார்.

Trending News