மயான பூமியான சின்னசாமி மைதானம்! உள்ளே கொண்டாட்டம்-வெளியே மக்கள் பலி-வைரல் வீடியோ..

RCB Victory Parade Stampede Death Footages Viral : ஆர்சிபி அணியின் வெற்றியை கொண்டாட, சின்னசாமி மைதானம் அருகே வெற்றி பேரணி நடத்தப்பட்டது. இதில், கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.  

Written by - Yuvashree | Last Updated : Jun 4, 2025, 06:36 PM IST
  • காவு வாங்கிய ஆர்சிபி வெற்றிப்பேரணி!
  • 11 பேர் பலி
  • வைரலாகும் வீடியோக்கள்..
மயான பூமியான சின்னசாமி மைதானம்! உள்ளே கொண்டாட்டம்-வெளியே மக்கள் பலி-வைரல் வீடியோ..

RCB Victory Parade Stampede Death Footages Viral : ஐபிஎல் 2025 போட்டியில், 18 வருடங்களுக்கு பிறகு ஆர்சிபி அணி, முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி இருக்கிறது. இதை கொண்டாடும் வகையில், கோப்பையுடன் வீரர்கள் பெங்களூருவில் இருக்கும் சின்னசாமி மைதானத்திற்கு அருகே கோப்பையுடன் வெற்றிப்பேரணி வந்தனர். அவர்களை காண, பல லட்ச ரசிகர்கள் திரண்டிருந்தனர். இந்த நிலையில், இதில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதால் கிட்டத்தட்ட 11 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Add Zee News as a Preferred Source

ஆர்.சி.பி பேரணி-11 பேர் உயிரிழப்பு!

18 வருடங்களுக்கு பின் முதன்முறையாக ஆர்சிபி அணி வெற்றி பெற்றது, கர்நாடக மக்களிடையே பெரும் கொண்டாட்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கான கொண்டாட்டங்கள் நேற்றிலிருந்தே தொடங்கிவிட்ட நிலையில், இன்று அணியின் வீரர்கள் விராட் கோலி, ரஜத் படிதார் உள்ளிட்டோர் சின்னசாமி மைதானம் அருகே வெற்றிப்பேரணி நடத்தினர். இதில் அனுஷ்கா ஷர்மாவும் கலந்து கொண்டார்.

இவர்களை காணவும், கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளவும் லட்சக்கணக்கான ரசிகர்கள் சின்னசாமி மைதானத்திற்கு அருகில் திரண்டனர். இதனால், கூட்ட நெரிசல் ஏற்பட்டு, மூச்சுத்திணறி கிட்டத்தட்ட 11 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. 27 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

மைதானத்தில் கொண்டாட்டம்..!

வீரர்களையும் அவர்களின் குடும்பத்தினரையும், பாதுகாவலர்களும், போலீஸாரும் பத்திரமாக மைதானத்திற்குள் அழைத்து சென்ற காட்சிகள் இணையத்தில் வைரலானது. அவர்கள் மைதானத்திற்குள் சென்று, வெற்றியை கொண்டாடி கொண்டிருக்க, வெளியில் மக்கள் பலர் உயிரிழந்திருப்பதும் உயிருக்கு போராடி வரும் காட்சிகளும் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

பதைபதைக்க வைக்க காட்சிகள்..

ஆர்சிபி வெற்றிப்பேரணி கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களை தூக்கிக்கொண்டு செல்லும் வீடியோக்களும், அடிப்பட்டவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கும் வீடியோக்களும தற்போது  இணையத்தில் வைரலாகி வருகிறது.

கூடவே, கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மாவின் சமீபத்திய பதிவு ஒன்றும் இணையத்தில் வைரலாகி வருகிறது. அவர், வெளியே என்ன நடக்கிறது என்று தெரியாமல், மக்கள் மைதானத்திற்குள் இருக்கும் போட்டோவை பதிவிட்டிருக்கிறார். இதை தற்போது இணையவாசிகள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

உயிரிழந்தவர்கள்..

இந்த கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களில் 2 பேர் குழந்தைகள் என்று கூறப்படுகிறது. வெற்றிக்கெண்டாட்டம், இப்படி 11 பேரை காவு வாங்கிய சம்பவம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

அலட்சியம் காரணமா?

ஆர்சிபி வெற்றிக்கொண்டாட்டத்தில் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் குறித்து பலர் தங்கள் கருத்துகளை தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர். அதில் சிலர், “இவ்வளவு சீக்கிரம் இந்த வெற்றிப்பேரணியை நடத்தியது ஏன்? இதற்கென்று சரியான திட்டம் போட்டிருக்க கூடாதா? பாதுகாப்பு ஏற்பாடுகளை வலுப்படுத்தி இருக்க கூடாதா?” என்று கேட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க | திருப்பதி கோவில் கூட்ட நெரிசல்: உயிர் போராட்டம், சிதறியடித்து ஓடிய பக்தர்கள்.... பீதியை கிளப்பும் வீடியோ

மேலும் படிக்க | ஆர்சிபி வெற்றி பேரணி.. கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழப்பு?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News