)
Reason Behind Kurnool Bus Accident: தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் இருந்து கர்நாடகா தலைநகர் பெங்களூரு நோக்கி சென்றுகொண்டிருந்த தனியார் சொகுசு பேருந்து, நேற்று நள்ளிரவில் தீ விபத்துக்கு உள்ளானது.
நேற்று நள்ளிரவு 3 மணியளவில் இருச்சக்கரம் வாகனம் அந்த பேருந்தில் மோதி விபத்துக்குள்ளாகி, பேருந்துக்கு அடியில் சிக்கிக்கொண்டது. அதன் பெட்ரோல் டேங்கில்பட்டு தீப்பிடித்து, மளமளவென பேருந்து முழுவதும் வேகமாக தீப்பிடித்ததாக கூறப்படுகிறது. இதில் 41 பேர் பயணித்த நிலையில், 22 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். 19 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், கர்னூல் பேருந்து விபத்து குறித்த புதிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது. விபத்துக்குள்ளான பேருந்தில் 234 ஸ்மார்ட்போன்கள் அடங்கிய பெட்டி ஒன்று இருப்பதாகவும், நேற்று காலை தீ விபத்து ஏற்பட்டபோது இந்த மொபைல்களும் வெடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த ஸ்மார்ட்போன்களின் பேட்டரிகள் வெடித்ததே பேருந்தில் தீ, தீவிரமாக எரிந்ததற்கு காரணமாக அமைந்து, 19 பயணிகளின் உயிரிழப்புக்கு காரணம் என்றும் தடயவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. 234 ஸ்மார்ட்போன்கள் அடங்கிய அந்த பார்சல் பெட்டி ஹைதராபாத்தைச் சேர்ந்த மங்கநாத் என்ற தொழிலதிபரின் பெயரில் பதிவு செய்யப்பட்டு, பெங்களூருக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த 234 மொபைல்களின் மொத்த மதிப்பு ரூ.46 லட்சம் என்றும் கூறப்படுகிறது. பெங்களூரில் உள்ள இ-காமர்ஸ் நிறுவனத்திற்கு இந்த பார்சல் அனுப்பப்பட்டது. அங்கிருந்து வாடிக்கையாளர்களுக்கு போன்கள் விற்பனைக்கு வழங்கப்படும் என கூறப்படுகிறது.
பேருந்தின் வடிவமைப்பில் இருக்கும் பிரச்னைகளையும் வெங்கட்ராமன் விவரித்தார். பேருந்து வடிவமைப்பில் பொதுவாக இரும்பு பயன்படுத்தப்படும். ஆனால், வாகன எடையைக் குறைப்பதற்காகவும், வேகத்தை அதிகரிப்பதற்காகவும் இரும்பிற்குப் பதிலாக இலகுரக அலுமினியத்தைப் பயன்படுத்தி உள்ளனர். இதனால், அவசரகாலத்தின் போது இறுதியில் தீயை தீவிரப்படுத்தி இது தீங்கு விளைவித்துள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ