Ajit Doval Personal Life: நவீன காலகட்டத்தில் தற்போது ஸ்மார்ட்போன், இணையம் ஆகியவை எல்லோர் கைகளுக்கும் சென்றடைந்திருக்கிறது. அதுவும் இந்தியாவில் ஜியோவின் வருகைக்கு பின் தொழில்நுட்பம் இந்தியாவின் மூலைமுடுக்கெல்லாம் சென்றடைந்தது.
அந்த வகையில், பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பகிர்ந்த தகவல் மக்களுக்கு பெரும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது. வளர்ச்சியைடந்த இந்தியாவின் இளம் தலைவர்களுக்கான உரையாடல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அப்போது அவர் தெரிவித்த பதில்தான் தற்போது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
Ajit Doval Personal Life: மொபைல், இணையத்திற்கு நோ...
இளைஞர்கள், மாணவர்கள் மத்தியில் அஜித் தோவால் உரையாற்றியபோது, ஆங்கிலேயே ஆட்சிக் காலத்தில் இந்திய மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள், விடுதலைக்காக செய்த சாதனைகள் உள்ளிட்டவற்றை அடுக்கினார். இந்நிகழ்வில் கேள்வி - பதில் நேரத்தின்போது மொபைல் போனையோ அல்லது இணையத்தையோ தான் பயன்படுத்தவில்லை என அஜித் தோவால் கூறியிருக்கிறார்.
அஜித் தோவாலின் இந்த கருத்து நெட்டிசன்கள் மத்தியில் பெரும் வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்துகொண்டு, இந்த நவீன காலகட்டத்தில் மொபைல், இணையத்தை பயன்படுத்தாமல் எப்படி தவிர்க்கிறார் என வியப்பை ஏற்படுத்தியது. நிதானம் என்பது மிகவும் அத்தியாவசியமானது என்றும் ஒரு தகவலை சொல்லும்போது எவ்வித பிரச்சாரமும் இன்றி சொல்ல வேண்டும் என்றும் மாணவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தலையும் கூறியிருக்கிறார்.
Ajit Doval Personal Life: அஜித் தோவால் சொன்ன பதில்
நாடாளுமன்றத்தின் பாரத் மண்டபத்தில் நடந்த இந்நிகழ்வில் கேள்வி - பதில் அமர்வு ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது அஜித் தோவாலிடம், 'உண்மையிலேயே நீங்கள் மொபைல் மற்றும் இணையத்தை பயன்படுத்தாமல் தவிர்க்கிறீர்களா?' என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் சிரித்துக்கொண்டே, ஆம் என பதிலளித்தார். தகவல் தொடர்புக்கு மொபைல் போன்களும், இணையமும் மட்டுமே இருக்கிறது என்றில்லை, அதை தவிர பொதுமக்கள் அறிந்திராத பல முறைகள் இருக்கின்றன என்று அஜித் தோவால் பதிலளித்தார். குடும்பத்தினருடன் பேசுவதற்கும், வெளிநாட்டில் உள்ளவர்களுடன் தொடர்பு கொள்வதற்கும், இதுபோன்ற சில வழக்கமில்லாத சூழல்களிலும் மட்டுமே தொலைபேசிகள் அல்லது இணையத்தை தான் பயன்படுத்துவதாக அவர் மேலும் கூறினார்.
Ajit Doval Personal Life: அஜித் தோவால் கடந்த கால வாழ்க்கை
அஜித் தோவால் 1945ஆம் ஆண்டில் உத்தரகாண்ட் மாநிலத்தில் பிறந்தவர். இவர் 1968ஆம் ஆண்டில் ஐபிஎஸ் அதிகாரியாக பொறுப்பேற்றார். அப்போது மிசோரம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் அசாதாரண சூழல்களில் பணியாற்றினார். 1999ஆம் ஆண்டில் கந்தஹார் விமான கடத்தல் சம்பவத்தின்போது பயங்கரவாதிகளிடம் சிக்கிய பொதுமக்களை மீட்க, அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்திய மூன்று பேரில் ஒருவர் அஜித் தோவால் ஆவார். 1971ஆம் ஆண்டில் இருந்து 1999ஆம் ஆண்டுவரை 15 விமான கடத்தல் சம்பவங்களில் வெற்றிகரமாக பேச்சுவார்த்தை நடத்தியவர் ஆவார்.
இவர் சுமார் 7 ஆண்டுகள் பாகிஸ்தானில் உளவாளியாக பணியாற்றியதாக கூறப்படுகிறது, அப்போது பயங்கரவாத அமைப்புகள் குறித்த முக்கிய தகவல்களை இவர் சேகரித்து இந்தியாவுக்கு தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஒரு வருடம் ரகசிய அதிகாரியாக இருந்த அவர், இஸ்லாமாபாத் நகரில் உள்ள இந்திய தூதரகத்தில் 6 ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறார்.
கிருத்தி சக்ரா விருதை வென்ற இளம் காவல்துறை அதிகாரி என்ற பெருமை இவருக்கு உண்டு. இந்திய பிரதமருக்கான 5வது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் ஆவர், தற்போது அவரே இப்பொறுப்பில் தொடர்கிறார். 2016 சர்ஜிக்கல் ஸ்ட்ரைக், 2019 பாலகோட் தாக்குதல் போன்ற பாகிஸ்தானுக்கான பதிலடிகள் இவரின் வழிகாட்டுதலின்படி இந்திய பாதுகாப்பு படையால் செயல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









