Maha Kumbh Monalisa Transformation : இணையதளத்தின் பரிணாம வளர்ச்சி காரணமாக, உலகின் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் சிறு துரும்பும் கூட மக்கள் மத்தியில் பிரபலமாவது வைரலாகி வருகிறது. இதனால், வைரலாக வேண்டும் என்பதற்காகவே சிலர் சில விஷயங்களை செய்து வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்பு, பல கோடி பேர் பங்கேற்ற மஹா கும்பமேளா விழா பிராக்யராஜ்ஜில் நடந்தது.
மஹா கும்பமேளா விழாவில் கலந்து கொள்ள வந்த பக்தர்கள் செய்த விஷயமும், இங்கு வித்தியாசமாக நடைப்பெற்று லாபம் பார்த்த வியாபாரங்கள் குறித்த விவரங்களும் செய்திகளாக மாறியது. அப்படி, பலரது கவனத்தை ஈர்த்த ஒரு பெண், மோனலிசா.
மஹா கும்பமேளாவில் மோனலிசா:
இந்தூரை சேர்ந்த மோனலிசா, தனது தந்தையின் வியாபராத்திற்கு உதவுவதற்காக கும்பமேளாவிற்கு வந்தார். கவரும் நிறம், வசீகரிக்கும் கண்கள் என இருந்த இவரை பார்த்தவுடன் அசந்து போய் இவரிடம் நெக்லஸ் வாங்கியதை வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டார். இது வைரலாக, மஹா கும்பமேளாவில் சாமி கும்பிட கூட்டம் கூடியதோ இல்லையாே, இவரை பார்க்க வேண்டும் என்றே ஒரு கூட்டம் கூடியது. இதையடுத்து, தனது மகளை இப்படி நிறைய ஆண்கள் சூழ்ந்து கொள்வதை விரும்பாத அவரது தந்தை, அவரை சொந்த ஊருக்கே வண்டியேற்றி அனுப்பி வைத்துவிட்டார்.
படத்தில் நடிக்க வாய்ப்பு…
மஹா கும்பமேளா மூலம் வைரலான மோனலிசாவை எப்படியோ கண்டுபிடித்த ஒரு பாலிவுட் இயக்குநர், அவரை தனது படத்தில் நடிக்க வைப்பதாக கூறினார். அந்த இயக்குநரின் பெயர், சனோஜ் மிஷ்ரா. இந்த அறிவிப்பை அவர் வெளியிட்ட சில நாட்களிலேயே அவர் பாலியல் வன்புணர்வு வழக்கில் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, மோனலிசாவை தேடி பல மாடலிங் வாய்ப்புகள் வர ஆரம்பித்ததாக கூறப்படுகிறது.
வைரலாகும் வீடியாே..
சமீபத்தில் மோனலிசாவின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவரது உடல் மேக்-அப் போட்டு, கை-கால், கழுத்து கைகள் என அணிகலன்களால் பூட்டப்பட்டிருக்கிறது. மேலும், அவரது நிறத்திற்கு எடுப்பாக சிகப்பு நிற காக்ரா ஆடையையும அணிந்திருக்கிறார்.
இதை பார்த்த நெட்டிசன்கள், “எப்படி இருந்த மோனலிசா-இப்படி ஆகிட்டாரே” என ஆச்சரியப்பட்டு வருகின்றனர். இன்னும் சிலர், முன்னர் இருந்ததை விட அவருக்கு இப்போது அழகு மேலும் கூடிவிட்டதாக கூறி வருகின்றனர்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
ஆளே மாறிப்போன மோனலிசா..
இயக்குநரின் கைதுக்கு முன்பு, படத்தில் நடிக்க வேண்டும் என்பதற்காக மோனலிசாவிற்கு நடிப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. மேக்-அப், ஆடை டெஸ்டிங்கும் நடந்தது. ஆனால், படத்தின் இயக்குநர் இப்போது ஜெயிலில் இருக்கும் நிலையில் மோனலிசா என்ன செய்யப்போகிறார் எனும் கேள்வி எழுந்தது. அவரோ இப்போது சில ஆடை விளம்பரங்களில் மாடலாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
மேலும் படிக்க | 3 முறை கருக்கலைப்பு... பலமுறை பாலியல் வன்புணர்வு - பிரபல இயக்குநர் கைது!
மேலும் படிக்க | பிரமிக்க வைக்கும் கும்பமேளாவின் பேரழகி சமூக ஊடகங்களில் வைரலாகும் இந்த மோனாலிசா யார்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









