வங்கி வைப்பு விகிதங்களைக் குறைக்க ரெப்போ வட்டி வீதம் குறைப்பு...

முன்னாள் SBI தலைவர்.. 

Last Updated : May 26, 2020, 08:54 PM IST
வங்கி வைப்பு விகிதங்களைக் குறைக்க ரெப்போ வட்டி வீதம் குறைப்பு...  title=

ரெப்போவிகிதக் குறைப்பினால், வங்கி முதலீடுகளுக்கான விகிதங்கள் குறையும் என்பதால், வாடிக்கையாளர்கள் பொதுத்துறை வங்கிகளை தவிர்த்து தனியார் வங்கிகளுக்கு  செல்லக்கூடும்: முன்னாள் SBI தலைவர்.. 

ரெப்போ வீதத்தை 40 புள்ளிகள் குறைக்கும் இந்திய ரிசர்வ் வங்கியின் முடிவினால்,  பொதுத்துறைவங்கிகள், முதலீடுகளுக்கான வட்டி விகிதங்களை குறைக்கும் நிலை ஏற்படும்.  இதனால், அதிக வட்டி விகிதங்களுக்காக, மக்கள் தனியார் வங்கிகள் நோக்கி செல்லக்கூடும் என்று  ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) ) முன்னாள் தலைவர் பிரதீப் சவுத்ரி,  ஜீ பிஸினஸ் சேனலின் நிர்வாக ஆசிரியர் அனில் சிங்வியிடம் தெரிவித்தார்.

இது யெஸ் வங்கிக்கு ஏற்பட்ட நெருக்கடியை போன்ற நிலை ஏற்பட  வழிவகுக்கும்  என்று சவுத்ரி கருத்து தெரிவித்தார். இந்த நடவடிக்கையை விமர்சித்த எஸ்பிஐ முன்னாள் தலைவர்,  சந்தைகள்   வீழ்ச்சி அடைந்ததற்கான காரணங்களை பட்டியலிட்டார்.

ரெப்போ விகிதத்தினால் கடன் விகிதங்கள் குறைந்துவிட்டதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சொல்வது தவறு என்று சவுத்ரி கூறினார். சி.ஆர்.ஆர் காரணமாக கடன் விகிதங்கள் குறைந்துவிட்டன என்றும், ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களைக் குறைக்க விரும்பினால்,  சி.ஆர்.ஆரைக் குறைக்க வேண்டும் என்று அவர் கூறினார். ரெப்போ வீதக் குறைப்பு காரணமாக வட்டி விகிதங்களில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் அவர் தெரிவித்தார்.

ரிசர்வ் வங்கியின் நிலைப்பாடு இயல்புக்கு முரணானது என்றும் சவுத்ரி கூறினார். பணவீக்கம் அதிகம் உள்ளது என கூறி ரெப்போ விகிதங்களை குறைக்க வேண்டும் என வங்கிகள் கோரிய போது குறைக்கவில்லை, இப்போது பணவீக்கம் சுமார் "8 சதவிகிதம்" என இருக்கும் போது, ரெப்போ வீதத்தைக் குறைத்துள்ளது என்று அவர் கூறினார். இந்த நடவடிக்கைக்கு  எந்த வித நியாயமான காரணமும் இல்லை எனஅவர் மேலும் கூறினார்.

ஏற்றுமதிக்கான தேவைகள் குறைந்திருப்பதால், ஏற்றுமதிக்கான கடன்களை வழங்குவதற்காக வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அதிக நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்தார். வங்கிகளிடம் டாலர் வடிவில் நிதி இல்லை என்பது  வங்கிகளின் பிரதான பிரச்சினையாகும் என்று எஸ்.பி.ஐ முன்னாள் தலைவர் பிரதீப் சவுத்ரி தெரிவித்தார்.

Trending News