Reserve Bank of India Latest News: புதிய ரூ.100 மற்றும் ரூ.200 நோட்டுகள் வரப்போறதாக ஆர்பிஐ ஒரு அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. அதாவது புதிய ரூ.100, ரூ.200 நோட்டுகள் வரப்போகிறது என்றால், தற்போது புழக்கத்தில் இருக்கும் பழைய ₹100 மற்றும் ₹200 நோட்டுகள் பயன்படுத்த முடியுமா? அல்லது பயன்படுத்த முடியாத? என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. அதுக்குறித்து முழுத் தகவலையும் தெரிந்துக்கொள்ளுவோம்.
இந்தியாவை பொறுத்த வரை, 1 ரூபாய் தாள் முதல் 2 ஆயிரம் ரூபாய் தாள்கள் வரை புழக்கத்தில் இருந்தது. காலத்திற்கு ஏற்ப சில ரூபாய் நோட்டுகள் திரும்ப பெற்றுக்கொள்ளப்பட்டன. சில ரூபாய் நோட்டுகள் திரும்ப மாற்றி அச்சடிக்கப்பட்டன. அந்த வரிசையில், ரூ.2000 நோட்டு, ரூ.1000 நோட்டுக்கள் என புதிய இந்திய ரூபாய் அறிமுகப்படுத்தப்பட்டன. தற்போது இந்த ரூபாய் நோட்டுகளை ஆர்பிஐ திரும்ப பெற்றுக்கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது ₹500, ₹100, ₹200, ₹50, ₹20 ₹10 ரூபாய் மாதிரியான நோட்டுகள் மட்டும்தான் புழக்கத்தில் இருக்கிறது. இதன் அடிப்படையில் பார்க்கும்போது ₹500 மட்டும்தான் அதிக மதிப்பு இருக்கக்கூடிய ரூபாய் நோட்டுகளில் ஒன்றாக இருக்கிறது.
தற்போது திடீரென ₹100 மற்றும் ₹200 நோட்டுகள் அனைத்தும் புதிதாக அறிமுகப்படுத்தப்படும் என்ற அறிவிப்பை ஆர்பிஐ வெளியிட்டுள்ளது. இதற்கு முக்கியக் காரணம் என்னவென்றால், பொதுவாவே இந்திய ரூபாய் நோட்டுகளை பொறுத்த வரை, அதாவது அனைத்து ரூபாய் நோட்டுகளில் ஆர்பிஐ கவர்னர் அவர்கள் கையொப்பம் இருக்கும்.
சமீபத்தில் இந்தியாவில் 26வது புதிய ஆர்பிஐ கவர்னராக சஞ்சய் மல்ஹோத்ரா நியமிக்கப்பட்டார். இதற்கு முன்னதாக 25வது ஆர்பிஐ கவர்னரா சக்திகாந்த் தாஸ் இருந்தார். அவரின் கையொப்பம் தான் தற்போது ரூபாய் நோட்டுகளில் உள்ளது. எனவே புதிய கவர்னராக சஞ்சய் மல்ஹோத்ரா நியமிக்கப்பட்டு இருப்பதால், அவரின் கையொப்பம் இருக்கும் ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடவேண்டும் என்பது மரபு மற்றும் விதியாகும்.
அதன் அடிப்படையில் தற்போது புதிய ஆர்பிஐ கவர்னராக இருக்கும் சஞ்சய் மல்ஹோத்ராவின் கையொப்பமிட்ட புதிய ₹100 மற்றும் ₹200 நோட்டுகள் வெளியிடப்படும்.
புதிய ₹100 மற்றும் ₹200 நோட்டுகள் வெளியிடப்பட்டால், தற்போது புழக்கத்தில் இருக்கும் பழைய ₹100, ₹200 மற்றும் ₹50 நோட்டுகள் தடை செய்யப்படுமா? என்ற கேவிக்கும் ஆர்பிஐ விளக்கம் அளித்துள்ளது. அதாவது "பழைய ரூபாய் நோட்டுகள் எதையும் தடை செய்ய மாட்டோம். பழைய நோட்டுகளும் புழக்கத்தில் இருக்கும், அதேவேளையில் இனி வரக்கூடிய புதிய ரூபாய் நோட்டுகளும் புழக்கத்தில் இருக்கும்" என ஆர்பிஐ விளக்கம் அளித்துள்ளது.
அதேநேரம் இந்த புதிய ரூபாய் நோட்டுகள் எப்பொழுது அறிமுகப்படுத்தப்படும்? அந்த புதிய ரூபாய் நோட்டுகள் எந்த வண்ணத்தில் இருக்கும்? புதிய ரூபாய் நோட்டுளில் என்னென்ன மாதிரியான விஷயங்கள் எல்லாம் இருக்கும்? போன்ற விவரங்கள் குறித்து ஆர்பிஐ தரப்பில் எந்தவொரு தகவலும் வெளியிடப்படவில்லை.
மேலும் படிக்க - பழைய 20 ரூபாய் நோட்டு உங்ககிட்ட இருக்கா... நீங்களும் லட்சாதிபதி ஆகலாம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ