ஓய்வுபெற்ற இராணுவ வீரர் ஒருவர், இரவில் TV-யை அணைக்க மறுத்ததற்காக, அவரது 80 வயதான தந்தையை சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஓய்வுபெற்ற இராணுவ ஊழியர்கள் அவரது 80 வயதான தந்தையை சுட்டுக் கொன்றதாகக் கூறப்படுகிறது, அவர் இரவு நேர நிகழ்ச்சியின் போது டிவியை அணைக்க மறுத்துவிட்டார். டி.வி.யை அணைக்கும் முயற்சியில், ஓய்வுபெற்ற சிப்பாய் அசோக் கதிஹார் மற்றும் அவரது தந்தை லாலா ராம் ஆகியோருக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தெரிகிறது.


இந்த சம்பவம் கடந்த வியாழக்கிழமை இரவு உத்தரபிரதேசத்தில் உள்ள நசீர்பூர் கிராமத்தில் நடந்துள்ளது. இரவில் நீண்ட நேரமாக டிவி பார்த்துக் கொண்டிருந்த தந்தை லாலா ராமிடம் மகனும் ஓய்வுபெற்ற ராணுவ வீரருமான அசோக் கதிஹார், டிவியை அணைக்க வலியுறுத்தியுள்ளார்.


ALSO READ | SBI பயன்ர்களுக்கு ஒரு நற்செய்தி... IFFCO E-பஜருடன் கைகோர்த்த SBI YONO..!


அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, ​​அசோக் தந்தையைக் கீழே தள்ளி, பின்னர் உரிமம் பெற்ற தனது இரட்டைக் குழல் துப்பாக்கியிலிருந்து துப்பாக்கியால் சுட்டுவிட்டு தலைமறைவாகி விட்டார். அவரது தந்தை கடுமையான புல்லட் காயங்களுக்கு ஆளாகி பின்னர் உயிரிழந்து விட்டார்.


அசோக் ஒரு குடிகாரர் என்றும், சிறிய பிரச்சினைகளுக்காக அடிக்கடி சண்டையிடுவார் என்றும் குடும்ப வட்டாரங்கள் தெரிவித்தன. இந்நிலையில் அசோக் மீது FIR பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவத்தை அடுத்து, அவரது துப்பாக்கியுடன் தலைமறைவாக உள்ள அசோக்கை கைது செய்ய தனி குழுக்கள் அமைக்கத்து போலீசார் தேடி வருகின்றனர்.