2000 - 2025: ஜம்மு காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் - ஒரு மீள் பார்வை

Jammu Kashmir Terrorist Attack: ஜம்மு காஷ்மீரில் கடந்த 2000ஆம் ஆண்டில் இருந்து பயங்கரவாதிகள் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள்...

Written by - Sudharsan G | Last Updated : Apr 23, 2025, 09:11 AM IST
  • நேற்றிரவு நடந்த தாக்குதலில் 26 பேர் உயிரிழந்துள்ளனர்.
  • Resistance Front என்ற பயங்கரவாத குழு தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது.
  • இதில் பலரும் படுகாயம் அடைந்துள்ளனர்.
2000 - 2025: ஜம்மு காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் - ஒரு மீள் பார்வை

Jammu Kashmir Terrorist Attack Since 2000: ஜம்மு காஷ்மீரின் பஹல்கம் நகரில் நேற்று பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் (Pahalgam Attack)  26 பேர் உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 2000ஆம் ஆண்டில் இருந்து பயங்கரவாதிகள் பொதுமக்கள் மீது நடத்திய தாக்குதல்களை இங்கு நினைவுக்கூர்வது அவசியமாகிறது.

Add Zee News as a Preferred Source

2000ஆம் ஆண்டு மார்ச் 21 

அன்றிரவு அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள சட்டிசிங்போரா கிராமத்தில் சிறுபான்மையினரான சீக்கிய சமூகத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர், இந்த தாக்குதலில் 36 பேர் உயிரிழந்தனர். 

2000ஆம் ஆண்டு ஆகஸ்ட்

முந்தைய தாக்குதல் நடந்து சில மாதங்களில், நுன்வான் அடித்தள முகாமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 24 அமர்நாத் யாத்ரீகர்கள் 32 பேர் கொல்லப்பட்டனர்.

2001ஆம் ஆண்டு ஜூலை

மீண்டும் ஒருமுறை அமர்நாத் யாத்ரீகர்கள் மீண்டும் குறிவைக்கப்பட்டனர். கடந்த முறை நுன்வான் அடித்தள முகாமில் நடந்த தாக்குதல் இம்முறை அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள சேஷ்நாக் அடித்தள முகாமில் 13 பேர் கொல்லப்பட்டனர்.

2001ஆம் ஆண்டு அக்டோபர் 1

ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள மாநில சட்டமன்ற வளாகத்தில் பயங்கரவாதிகளால் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 36 பேர் கொல்லப்பட்டனர். 

2002ஆம் ஆண்டு

2000, 2001ஆம் ஆண்டுகளை போலவே 2002ஆம் ஆண்டிலும் அமர்நாத் யாத்ரீகர்களை குறிவைத்து பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. 2002ஆம் ஆண்டு சந்தன்வாரி அடித்தள முகாமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 11 அமர்நாத் யாத்ரீகர்கள் கொல்லப்பட்டனர்.

2002ஆம் ஆண்டு நவம்பர் 23

அன்று தெற்கு காஷ்மீரில் உள்ள லோயர் முண்டா எனும் பகுதியில் ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்த்தப்பட்டது. இதில் மேம்படுத்தப்பட்ட வெடிபொருள் (IED) பயங்கரவாதிகளால் பயன்படுத்தப்பட்டது. ஒன்பது பாதுகாப்புப் படை வீரர்கள், மூன்று பெண்கள் மற்றும் இரண்டு குழந்தைகள் உட்பட மொத்தம் 19 பேர் இந்த பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தனர்.

2003ஆம் ஆண்டு மார்ச் 23: அன்று புல்வாமா மாவட்டத்தில் உள்ள நந்திமார்க் கிராமத்தில் 11 பெண்கள் மற்றும் 2 குழந்தைகள் உட்பட 24 காஷ்மீர் பண்டிதர்களை பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
 
2005ஆம் ஆண்டு ஜூன் 13

அன்று புல்வாமா மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றின் முன்னால் அமைக்கப்பட்டிருந்த மக்கள் நடமாட்டம் அதிகம் இருந்த சந்தையில், வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட கார் பயங்கரவாதிகள் வெடிக்கவைக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் 13 பொதுமக்கள் மற்றும் மூன்று CRPF அதிகாரிகள் கொல்லப்பட்டனர். மேலும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

2006ஆம் ஆண்டு ஜூன் 12

குல்காம் நகரில் நடத்தப்பட்ட தாக்குதலில் நேபாள நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்கள், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் என 9 பேர் கொல்லப்பட்டனர். 

2017ஆம் ஆண்டு ஜூலை 10

குல்காம் நகரில் அமர்நாத் யாத்திரை பேருந்து மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டனர்.

மேலும் படிக்க | Pahalgam Terror Attack : பகல்காம் தீவிரவாத தாக்குதல் தீவிரவாதிகள் பின்னணி - என்ன நடந்தது?

மேலும் படிக்க | ஜம்மு காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்.. 25 பேர் பலி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News