ஜம்மு காஷ்மீர் அருகே உள்ள பிரபல சுற்றுலா தளமான பகல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த பயங்கரவாத தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் சூட்டுக்கொல்லப்பட்டனர். 18 பேர் படுகாயம் அடைந்தனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலை பாகிஸ்தானின் ஆதரவு பயங்கரவாத அமைப்பான 'தி ரெசிஸ்டண்ட் ஃப்ரண்ட்' மேற்கொண்டுள்ளது.
இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக இந்தியா சில உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி சிந்து நதி நீர் நிறுத்தம், பாகிஸ்தானியர்களை வெளியேற்றுதல், அட்டாரி - வாகா எல்லை மூடல், பாகிஸ்தானியர்களுக்கு விசா வழங்குவதை ரத்து செய்தல் உள்ளிட்ட அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டது. அதேசமயம் இருநாடுகளும் மோதலுக்கு தயாராகி வரும் நிலையில், எல்லை பகுதிகளில் ஆயுத சோதனைகளை நடத்தி வருகிறது. நேற்று கூட இந்திய கடற்படை அரபிக்கடல் பகுதியில் ஏவுகணை தாக்குதல்களை முறியடிக்க ஒத்திகையில் ஈடுப்பட்டது.
பாகிஸ்தானை சேர்ந்த அமைச்சர் ஹனிப் அப்பாஸி, இந்தியாவை நோக்கி சுமார் 130 அணுஅயுதங்களை வைத்துள்ளதாக கூறினார். இந்த நிலையில், இந்தியாவில் ரத்த ஆறு ஓடும் என பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் பிலாவல் பூட்டோ சர்தாரி தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இந்தியா எடுத்த நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்து பேசி இருக்கிறார். குறிப்பாக சிந்து நதி நீரை இந்தியா நிறுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவர், இதனால் இந்தியாவில் ரத்த ஆறு ஓடும் என்ற கடிண வார்த்தைகளை பேசி உள்ளார். இது இரு நாடுகளுக்கும் இடையே கூடுதல் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இவரது பேச்சுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர், இது வெறுப்பு பேச்சு. இந்தியர்கள் மீது தாக்குதல் நடத்தி கொலை செய்தால் அதன் விளைவுகள் மிக மோசமானதாக இருக்கும். கண்டிப்பாக எதிர் விளைவுகள் இரட்டிப்பாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. நாம் யாரையும் காயப்படுத்த தேவையில்லை. ஆனால் நம் மீது தாக்குதல் நடத்தினால், பதிலடி மிக கடுமையாக இருக்கும். பாகிஸ்தானில் பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளித்து இந்திய எல்லைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
தாக்குதல் நடத்திவிட்டு எங்களுக்கு தாக்குதலுக்கு எவ்வித சம்பந்தமும் இல்லை என்று கழன்றுக்கொள்கிறது. ஆனால் விசாரணையில் பாகிஸ்தானுக்கும் இந்த தாக்குதல்களுக்கும் தொடர்பு இருக்கிறது என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த தாக்குதலுக்கு பிறகு இந்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக் - ஐ நடத்தியது. 2019 ஆம் ஆண்டு புல்வாமா தாக்குதலுக்கு பிறகு பாலக்கோட் விமான தாக்குதல் நடந்தது. இப்போது அதைவிட பெரிய தாக்குதலை பாகிஸ்தான் மீது இந்தியா நடத்த வாய்ப்பு இருக்கிறது. ஏற்கனவே சில நடவடிக்கைகளை இந்தியா எடுத்து வருகிறது. டிப்ளமாட்டிக் நடவடிக்கைகள், பொருளாதார தடைகள், மறைமுக ராணுவ நடவடிக்கை என பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என சசிதரூர் கூறி உள்ளார்.
மேலும் படிங்க: இந்தியாவில் வசிக்கும் பாகிஸ்தான் பெண்! மோடிக்கு வைத்த வேண்டுகோள்..வைரல் வீடியாே..
மேலும் படிங்க: பதஞ்சலியின் அற்புத ஆராய்ச்சி: சொரியாசிஸுக்கு ஒட்டுமொத்த தீர்வு தரும் மருந்துகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









