National News: காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் ஷாமா முகமது, இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா குறித்து பெரும் சர்ச்சையான கருத்தை தெரிவித்த நிலையில், தற்போது இந்த விவகாரம் பூதாகரம் ஆகி உள்ளது. ரோஹித் சர்மாவை விளையாட்டு வீரராக குண்டாக இருக்கிறார் எனவும், இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மோசமான கேப்டன் என அவர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டதே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
National News:'ரோஹித் சர்மா உடல் எடையை குறைங்க'
அவரது கூற்றுக்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்து கண்டனங்கள் எழுந்தது. உடனே காங்கிரஸ் கட்சியும் இந்த விவகாரத்தில் தலையிட்டு அந்த பதிவை நீக்கும்படி கூறியிருக்கிறது. இதையடுத்து, அந்த பதிவை ஷாமா முகமது நீக்கிவிட்டார். ஷாமா முகமது நீக்கிய அவரது சமூக வலைதளப் பகுதியில்,"விளையாட்டு வீரராக பார்த்தால் ரோஹித் சர்மா உடல் பருமனுடன் இருக்கிறார். அவர் உடல் எடையை குறைக்க வேண்டும். அதுமட்டுமின்றி, இந்தியா இதுவரை கண்டிராத அளவுக்கு மிகவும் தகுதியற்ற கேப்டன் ஆவார்" என பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
National News: ரோஹித் சர்மா உலகத்தர வீரர் இல்லை
அவரின் கருத்திற்கு பாஜக தலைவர்கள் மற்றும் கிரிக்கெட் ரசிகர்கள் தரப்பில் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்தன. இதற்கு பதிலளித்து ஒரு பயனர், ரோஹித் சர்மா உலகத் தர வீரர் என குறிப்பிட்டிருந்தார். அதற்கு ஷாமா முகமது,"அவரது முன்னோடிகளுடன் ஒப்பிடும்போது அவர் உலகத் தரம் வாய்ந்த வீரர் என்று எப்படி சொல்ல முடியும்? அவர் ஒரு சாதாரணமான கேப்டன், அதே போல் இந்தியாவின் கேப்டனாக இருக்கும் அதிர்ஷ்டம் பெற்ற ஒரு சாதாரண வீரர்" என தெரிவித்திருந்தார்.
National News: 'விளையாட்டு வீரர்களை அவமானப்படுத்தும் காங்கிரஸ்'
ஷாமா முகமது தொடர்ந்து ரோஹித் சர்மா குறித்து பதிவிட்டது கடும் விமர்சனங்களை எழுப்பியது. பாஜக தலைவரான ராதிகா கெரா ஷாமா முகமது மற்றும் காங்கிரஸ் கட்சி இரண்டையும் கடுமையாக கண்டித்து பதிலளித்தார். ராதிகா கூறுகையில்,"பல ஆண்டுகளாக விளையாட்டு வீரர்களை அவமானப்படுத்திய, அவர்களுக்கு அங்கீகாரம் மறுத்த அதே காங்கிரஸ் கட்சிதான், இப்போது ஒரு கிரிக்கெட் ஜாம்பவானை கேலி செய்யத் துணிந்திருக்கிறது... குடும்ப முறையில் செழித்து வளரும் கட்சி, தன்னைத்தானே உருவாக்கிக் கொண்ட ஒரு சாம்பியனுக்கு உபதேசம் செய்கிறதா?" என சாடியிருந்தார். ராதிகா கெரா கடந்தாண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து பாஜகவில் இணைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், உலகக் கோப்பையை வென்றுக்கொடுத்த கேப்டனை உருவக்கேலி செய்வது ஏற்றுக்கொள்ள இயலாது எனவும் ராதிகா கெரா குற்றஞ்சாட்டினயிருந்தார். காங்கிரஸ் கட்சி அதன் உட்கட்சி பிரச்னைகளை முதலில் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் சாடினார்.
National News:'உருவக்கேலி செய்யவில்லை'
இருப்பினும், ஷாமா முகமது தான் தெரிவித்த கருத்தின் மீது உறுதியாய் நின்றார். குறிப்பாக,"நான் அவரை உருவக்கேலி செய்து பதிவிடவில்லை. ஒரு விளையாட்டு வீரர் எப்போதுமே உடற்தகுதியுடன் இருக்க வேண்டும் என நான் நம்புகிறேன். அவர் சிறிது உடல் எடை அதிகமாக இருக்கிறார், அதுகுறித்துதான் நான் பதிவிட்டேன்" என விளக்கம் அளித்திருந்தார்.
National News: காங்கிரஸ் கட்சி எச்சரிக்கை
ஆனால், காங்கிரஸ் கட்சி ஷாமா முகமதின் கருத்தில் இருந்து வேறுபட்டது. இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் பவன் கெரா கூறுகையில்,"ஷாமா முகமதுவின் பதிவை நீக்குமாறு கட்சி கேட்டுக் கொண்டது. எதிர்காலத்தில் அதிக எச்சரிக்கையுடன் இருக்குமாறு அவருக்கு அறிவுறுத்தப்பட்டது" என்றார்.
மேலும் அவர்,"விளையாட்டு வீரர்களின் பங்களிப்புகளை இந்திய தேசிய காங்கிரஸ் மிக உயர்ந்த மதிப்பாகக் கருதுகிறது. அவர்களை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் எந்த அறிக்கைகளையும் காங்கிரஸ் கட்சி ஆதரிக்காது" என்று பவன் கெரா கூறினார்.
National News: கலக்கும் ரோஹித் சர்மா
2024 டி20 உலகக் கோப்பை ரோஹித் சர்மாவின் தலைமையில் இந்திய அணி சுமார் 17 ஆண்டுகளுக்கு பிறகு வென்றது. 11 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணி வென்ற ஐசிசி கோப்பையும் அதுதான். 2023 ஐசிசி உலகக் கோப்பை இறுதிப்போட்டி வரை ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி முன்னேறியிருந்தது. தற்போது நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஹாட்ரிக் வெற்றி பெற்று அரையிறுதியில் நாளை ஆஸ்திரேலியாவுடன் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி மோத உள்ளது.
மேலும் படிக்க | பெண்களுக்கு ரூ.2,500 மாதந்தோறும்... மார்ச் 8 மகளிர் தினத்தில் வருது நல்ல செய்தி!
மேலும் படிக்க | த.வெ.க. வியூகத்தை போட்டு உடைத்த பிரசாந்த் கிஷோர்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









