கல்லூரி மாணவிகளுக்கு ரூ.36,000 உதவித்தொகை! ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

Post Graduate Indira Gandhi Scholarship for Single Girl Child: இந்திரா காந்தி உதவி தொகை திட்டத்தின் மூலம் மாணவிகளுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ரூபாய் 36, 200 கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. 

Written by - RK Spark | Last Updated : Jun 19, 2025, 07:32 AM IST
  • மாணவிகளுக்கு உதவித் தொகை.
  • ரூ.36200 உதவித்தொகை கிடைக்கும்.
  • வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.
கல்லூரி மாணவிகளுக்கு ரூ.36,000 உதவித்தொகை! ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

பெண் குழந்தைகளின் கல்வியை மேம்படுத்தவும், இடைநிற்றலை தவிர்க்கவும் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். உயர்கல்வி வரை தொடர்ந்து படிக்க மாதாந்திர அல்லது வருடாந்திர உதவித் தொகையும் மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்திரா காந்தி உதவி தொகை திட்டம் பல பெண்களுக்கும் உதவிகரமாக இருந்து வருகிறது. ஒற்றை பெண் குழந்தைகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த திட்டத்தின் மூலம் மாணவிகளுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ரூபாய் 36,200 கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. தங்கள் வீடுகளில் ஒரே ஒரு பெண் குழந்தையாக இருக்கும் பட்சத்தில் இந்த உதவி தொகையை மாணவிகள் பெற்றுக் கொள்ளலாம். 

மேலும் படிக்க - இஸ்ரேல்-ஈரான் போர் இந்தியாவையும் பாதிக்குமா? பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயருமா?

இந்திரா காந்தி உதவி தொகை திட்டம் 

மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் பல்கலைக்கழக மாநில ஆணையம் இந்த உதவித்தொகையை வழங்கி வருகிறது. குடும்ப சூழ்நிலை காரணமாக உயர் கல்வியை தொடர முடியாத ஏழை குடும்பங்களை சேர்ந்த மாணவிகளுக்கு இந்த இந்திரா காந்தி உதவி தொகை திட்டம் நிச்சயம் உதவியாக இருக்கும். இத்திட்டத்திற்கு தகுதி பெற மாணவிகள் 30 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.  அதே சமயம் தங்கள் குடும்பத்தில் ஒரு ஒரே பெண்ணாக இருக்க வேண்டும். அதே போல பல்கலைக்கழகங்கள் அல்லது கல்லூரிகளில் முதலாம் ஆண்டு முதுகலை பட்ட படிப்பில் சேர்ந்து இருக்க வேண்டும். 

தொலைதூரக் கல்வியோ அல்லது வேறு எந்த திட்டத்திலும் சேர்ந்து இருக்க கூடாது. நேரடியாக இரண்டு ஆண்டுகள் கல்லூரிக்கு சென்று படித்தால் மட்டுமே இந்த திட்டத்தின் மூலம் உதவி தொகை கிடைக்கும். அதே போல உதவித்தொகை பெறும் பெண்களுக்கு அண்ணன் அல்லது தம்பி யாரும் இருக்கக்கூடாது. ஒரு வீட்டில் இரண்டு பெண்கள் இருக்கும் பட்சத்தில் ஒரு பெண்ணிற்கு இந்த உதவி தொகை கிடைக்கும். ஒரு குடும்பத்தில் ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருந்தால் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியாது. இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 3 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவிகள் பயன் பெற்று வருகின்றனர். முதுகலை பட்டப்படிப்பை முடிக்கும் காலத்திற்குள் ரூபாய் 36200 உதவித்தொகை வழங்கப்படும். இதில் விடுதி மற்றும் பிற கட்டணங்கள் வழங்கப்படாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

தேவையான ஆவணங்கள்

இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், இளங்கலை பட்டப்படிப்பு முடித்ததற்கான சான்றிதழ், முதுகலை பட்ட படிப்பிற்கான கல்வி கட்டணம், ஆதார் கார்டு,  வங்கி பாஸ்புக், குடும்ப வருமானச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், முதுகலை படிப்பில் சேர்ந்ததற்கான சான்றிதழ் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் யுஜிசியின் இணையதளத்தில் இந்த உதவித்தொகை தொடர்பாக தகவல்கள் அறிவிக்கப்படும், கடைசி தேதிக்கு முன்னர் ஆன்லைன் மூலம் உதவித்தொகைக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம். தகுதியான மாணவிகளுக்கு வங்கி கணக்கில் நேரடியாக உதவித்தொகை வரவு வைக்கப்படும். அதே போல இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும்போது இந்த திட்டத்திற்கான Renewal செய்ய வேண்டும்.

மேலும் படிக்க - முடிவுக்கு வராத இஸ்ரேல்-ஈரான் மோதல்! பஞ்சாயத்து செய்ய வந்த ட்ரம்ப்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News