)
Online Gaming Bill In Lok Sabha: ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குப்படுத்தும் மசோதா தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. ஒரு கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கக்கூடிய வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளதாக இந்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதே போன்று விதி மீறலில் ஈடுபட்டால் மூன்று ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்படும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மசோதாவினுடைய முக்கியத்துவம் என்ன? விவரங்களை பார்ப்போம்.
தமிழ்நாட்டில் ஏற்கனவே இந்த ஆன்லைன் விளையாட்டுகள், அதில் குறிப்பாக பணத்தை வைத்து விளையாடக்கூடிய இந்த ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்வதற்கான சட்டங்களானது இயற்றப்பட்டது. ஆனால் அது பெரிதளவில் பலனளிக்கவில்லை. ஏனென்றால் இந்த ஆன்லைன் ஆப் மூலம் விளையாடக்கூடிய இந்த விளையாட்டுகளை தடை செய்வதற்கு மத்திய அரசின் உதவியும் தேவைப்படுகிறது.
ஏனென்றால் இந்த ஆன்லைன் சம்பந்தப்பட்ட ஐபி (IP) எல்லாம் முடக்குவதற்கு மத்திய அரசு நினைத்தால் மட்டும் முடியும். இந்த ஆன்லைன் விளையாட்டு செயலிகளை இயக்குவதற்கான ஐபி மற்றும் அந்த செயலை முடக்குவதற்கான அதிகாரம் அனைத்தும் மத்திய அரசிடம் தான் இருக்கிறது. அதனால் அது பெருமளவில் பலனளிக்காத வகையில் இருந்தது. ஆனால் தற்போது மத்திய அரசு முன்வந்து இந்த சட்டத்தை இயற்றி இருக்கிறது.
இதனால் இனி இந்த ஆன்லைன் சூதாட்டங்கள், அதாவது ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் மசோதா என்பது பணத்தை வைத்து விளையாடக்கூடிய ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்கிறது. இது தடையை மீறி இந்த சூதாட்டத்தில் ஈடுபடுவதற்கு மூன்று ஆண்டுகள் சிறை மற்றும் ஒரு கோடி ரூபாய் வரை அபராதம் வசூலிப்பதற்கான அந்த நடைமுறைகளுக்கு தற்போது வழிவகை செய்யப்பட்டிருக்கிறது. மிக முக்கியமாக இது சில முக்கியமான காரணங்களை கருத்தில் கொண்டுதான் இந்த மசோதாவானது தற்போது தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
அதில் மிக முக்கியமான ஒன்று தமிழகம் மட்டுமில்லாது, நாடு முழுவதும் இருக்கக்கூடிய பல அரசியல் கட்சிகள் ஒருமித்த கருத்தில், இந்த பணத்தை வைத்து விளையாடக்கூடிய இந்த ஆன்லைன் விளையாட்டு செயலிகளை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசிடம் வைத்தனர்.
மறுபுறம் என்னதான் இந்த ஆன்லைன் செயலிகள் மூலம் எம்ப்ளாய்மெண்ட் கொடுக்கப்பட்டு வந்தாலும், சுமார் 450 மில்லியன் இந்தியர்கள் இந்த விளையாட்டில் ஈடுபடுகின்றனர். இதனால் அவர்கள் பொருளாதாரத்தில் பெரிய பிரச்சனை ஏற்படுகிறது என்பதை கருத்தில் கொண்டு இந்த சட்டமானது கொண்டுவந்த கொண்டு வரப்பட்டிருக்கிறது.
மிக முக்கியமாக இந்த பணத்தை வைத்து சூதாட்டத்தில் ஈடுபடும்போது, லோ இன்கம் குரூப்ஸ் எனச் சொல்லப்படும் விலும்பு நிலை மக்களையே அவர்கள் டார்கெட் செய்து அவர்களுக்கு ஏற்றவாறு அவர்களிடமிருந்து இந்த பணத்தை பறிக்கும் வகையில் தான் இந்த செயலி வடிமைக்கப்பட்டிருக்கிறது. அதனால் இது போன்ற பல காரணங்களை கருத்தில் கொண்டுதான் இந்த சட்டமானது கொண்டுவரப்பட்டிருக்கிறது.
அதேபோல ஏப்ரல் அதாவது ஏப்ரல் 2023ல் ஒரு சட்டமானது கொண்டுவரப்பட்டது. 2023ல் கொண்டுவரப்பட்ட அந்த சட்டம்தான் இந்த பணத்தை வைத்து விளையாடக்கூடிய இந்த ஆன்லைன் செயலிகளுக்கு வலிவகை செய்கிறது. அந்த சட்டம் அந்த சட்டத்தை ஒரு தவறாகவே மத்திய அரசு உணர்கிறது. அதேபோல இந்த செயலிகளுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டிருந்தது.
வெளிநாட்டில் இருக்கக்கூடிய நிறுவனங்கள் நேரடியாக இந்தியாவில் அவர்கள் இந்த தொழிலை செய்யலாம். என்னதான் இந்த இது போன்ற வசதிகள் மத்திய அரசு செய்து கொடுத்தாலும் அது அரசுக்கோ இல்லை மக்களுக்கோ எந்த வகையிலும் அது ஒரு நன்மை பயக்கவில்லை என்பதையும் மத்திய அரசு கதத்தில் கொண்டுதான் தற்போது இந்த சட்டத்தை கொண்டு வந்திருக்கிற கொண்டு வந்திருக்கின்றனர்.
இனி இந்த பணத்தை வைத்து இந்த சூதாட்டங்கள் ஈடுபட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கான வழிவகை தற்போது செய்யப்பட்டிருக்கிறது. மிக முக்கியமாக நாம் பார்க்க வேண்டியது தமிழ்நாட்டில் ஏற்கனவே இந்த சட்டமானது அமலில் இருக்கிறது. தற்போது இந்த மத்திய அரசும் இந்த சட்டத்தை கொண்டு வந்திருப்பதை அடுத்து இந்த பணத்தை வைத்து விளையாடக்கூடிய இந்த சூதாட்டங்களில் ஒரு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ