ஆப்ரேஷன் சிந்தூருக்கு முன்பும்-பின்பும் பாகிஸ்தான்! வைரலாகும் புகைப்படம்..

Satellite Images Pakistan Before After Operation Sindoor : இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் அதிகரித்திருக்கும் நிலையில், போருக்கு முன்பும் பின்பும் எப்படியிருக்கிறது என்பது குறித்த செயற்கைகோள் புகைப்படம் தற்போது வெளியாகி இருக்கிறது.  

Written by - Yuvashree | Last Updated : May 8, 2025, 02:07 PM IST
  • பாகிஸ்தானை கதிலங்க வைத்த ஆப்ரேஷன் சிந்தூர்!
  • போருக்கு முன்பும் பின்பும் பாகிஸ்தான்!
  • வெளியான புகைப்படங்கள்..
ஆப்ரேஷன் சிந்தூருக்கு முன்பும்-பின்பும் பாகிஸ்தான்! வைரலாகும் புகைப்படம்..

Satellite Images Pakistan Before After Operation Sindoor : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய ராணுவனம் ‘ஆப்ரேஷன் சிந்தூர்’ எனும் பெயரில் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியது. இதற்கு பாகிஸ்தானும் தங்களின் ராணுவத்தை வைத்து பதிலடி காெடுத்து வருகிறது. இந்த போரால் இரு பக்கமும் பொது மக்கள் உயிரிழந்திருக்கும் தகவல்களும் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், பாகிஸ்தான் போருக்கு முன்பும்-பின்பும் இருக்கும் நிலையை செயற்கைக்கோள் படம் பிடித்துள்ளது.

Add Zee News as a Preferred Source

ஆப்ரேஷன் சிந்தூர்:

ஏப்ரல் 22ஆம் தேதி, ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பள்ளத்தாக்கில் சுற்றுலா பயணிகள், உள்ளூர்வாசிகள் உள்பட 26 பேர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆரம்பித்ததுதான், ஆப்ரேஷன் சிந்தூர். இதில் முதல் நடவடிக்கையாக மே 7ஆம் தேதி நள்ளிரவு 1.05 மணிக்கு இந்தியா தாக்குதலை ஆரம்பித்தது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பிற்கு உள்ளான ஜம்மு காஷ்மீர் பகுதிகளில் இந்தியா தாக்குதலை  நடத்தியது. பயங்கரவாதிகள் முகாமிட்டிருந்த 9 இடங்களில் இந்தியாவின் தாக்குதலானது நடந்தது.

வெளியான புகைப்படங்கள்: 

ஆப்ரேஷன் சிந்தூருக்கு பின்பு பாகிஸ்தானின் நிலை எப்படியிருக்கிறது என்பதை செயற்கைக்கோள் படம் பிடித்துள்ளது. இந்தியா விமானப்படை மற்றும் தரைப்படை ஆகியவற்றை உபயோகித்து தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாத அமைப்புகளான லஷ்கர்-இ-தொய்பா (LeT), ஜெயிஷ்-இ-முகம்மது (JeM) மற்றும் ஹிச்புல் முஜாஹிதின் ஆகியவற்றின் முகாமை அழிக்கும் நோக்கில் நடத்தப்பட்டது.

இந்த நிலையில், செயற்கைக்கோள் புகைப்படம் பாகிஸ்தானின் போருக்கு முந்தைய மற்றும் அதன் பிறகான நிலையை விவரிக்கும் வகையில் வெளியாகி இருக்கிறது. இந்த புகைப்படங்களில் இந்தியா தாக்குதல் நடத்திய இரு மையங்கள் முக்கியமாக காண்பிக்கப்பட்டுள்ளன. ஒன்று, மர்காஸ் சுபான் அல்லாஹ் காம்பவுண்ட், இது பவல்பூர் அருகே உள்ளது. இன்னொன்று மர்காஸ் தாய்பா காம்ப்ளெக்ஸ். இது, நாங்கல் சாதன் முரிட்கேவில் உள்ளது. இரண்டுமே JeM மற்றும் LeT அமைப்புகள் முகாமிட்டிருந்த இடம் என கூறப்படுகிறது. மே 7ஆம் தேதி நடந்த தாக்குதலுக்கு பிறகு, அந்த இடங்கள் சின்னா பின்னம் ஆகியிருப்பதை இந்த போட்டோக்கள் காண்பிக்கிறது.

தீவிரவாதிகளின் பயிற்சி மையம்!

தாக்குதல் நடத்தப்பட்ட இரு மையங்களும், பயங்கரவாதிகளின் பயிற்சி மையங்களாக செயல்பட்டு வந்தனவாம். 2015ஆம் ஆண்டு முதல், மர்காஸ் சுபான் அல்லாஹ் காம்பவுண்டு, JeM அமைப்பின் சார்பில் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வந்த மையமாக இருந்ததாக கூறப்படுகிறது. 2019ஆம் ஆண்டில் நடந்த புல்வாமா தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள், இங்கிருந்து பயிற்சி பெற்றதாக கூறப்படுகிறது. இதற்கு மசூத் அசார் மற்றும் அப்துல் ரவுஃப் அச்கர் என்ற இரு பயங்கரவாத அமைப்பின் தலைவர்கள் தலைமை தாங்கியதாக கூறப்படுகிறது. இதனால், தாக்குதல் நடத்த இந்த இடத்தினை இந்திய ராணுவம் தேர்வு செய்திருக்கிறது.

முர்டிகேவில் தகர்க்கப்பட்ட மர்காஸ் தாய்பாவில், 2000ஆம் ஆண்டு முதல் பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அவர்களுக்கு இங்கு துப்பாக்கிச்சூடு பயிற்சி, ஃபிட்னஸ் பயிற்சி உள்ளிட்டவை கொடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவை, LeT அமைப்பின் கீழ் நடந்துள்ளது. இங்கு பயிற்சி பெற்றவர்கள் மும்பை தாக்குதல் உள்ளிட்ட முக்கிய தாக்குதலுக்காக பயிற்சி பெற்றதாக இந்தியா சந்தேகிக்கிறது.

மேலும் படிக்க | ஆபரேஷன் சிந்தூர்: எங்கெல்லாம் தாக்குதல் நடத்தப்பட்டது? 9 பயங்கரவாத முகாம்களின் புகைப்படங்கள்

மேலும் படிக்க | இன்னும் ஆதாரம் தேவையா? பயங்கரவாதிகளின் இறுதிச் சடங்கில் இராணுவம்! அம்பலமான பாகிஸ்தான்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News