இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா திங்களன்று தனது வாடிக்கையாளர்களை சமூக ஊடகங்களில் தவறாக வழிநடத்தும், போலி செய்திகளுக்கு பலியாகக்கூடாது என்று எச்சரிக்கும் வகையில் ஒரு ட்வீட்டை வெளியிட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

"ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) வாடிக்கையாளர்கள் சோஷியல் மீடியாவில் (Social Media) எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளது. எஸ்பிஐ சார்பாக சமூக ஊடகங்களில் பரப்பப்படும் போலி / தவறான செய்திகளில் எங்கள் வாடிக்கையாளர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம், ”என்று எஸ்பிஐ ட்வீட் செய்துள்ளது.


ALSO READ | SBI-யில் சேமிப்பு கணக்கு இருக்கா? - அதிக வட்டி கிடைக்க இதை செய்யுங்கள்!


 



 


முன்னதாக, நாட்டின் மிகப்பெரிய கடன் வழங்குபவர் தனது வாடிக்கையாளர்களுக்கு ரகசிய விவரங்களை ஆன்லைனில் பகிர்வதைத் தவிர்க்குமாறு 20 விநாடி வீடியோ கிளிப்பைப் பகிர்ந்துள்ளது. “விழிப்புடன் இருங்கள், பாதுகாப்பாக இருங்கள். சமூக ஊடகங்களில் எங்களுடன் உரையாடும்போது, தயவுசெய்து கணக்கு சரிபார்ப்பைச் சரிபார்த்து, ரகசிய விவரங்களை ஆன்லைனில் பகிர வேண்டாம் ”என்று எஸ்பிஐ வீடியோவுடன் ட்வீட் செய்திருந்தது.


 



 


எஸ்பிஐ தனது வாடிக்கையாளர்களை எச்சரிப்பது இது முதல் முறை அல்ல. இதுபோன்ற மோசடிகளுக்கு எதிராக அவர்களைப் பாதுகாக்கும் முயற்சியில் அவ்வப்போது வங்கி தனது வாடிக்கையாளர்களை எச்சரிக்கிறது.


ALSO READ | ஜனவரி 1 முதல் காசோலை பணபரிவர்தனை முறையில் மாற்றம் - இதோ முழு விவரம்!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR