20 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த பள்ளி கரஸ்பாண்டண்ட்!!
பள்ளிக்கு இடமாற்றச் சான்றிதழை வாங்க சென்ற போது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த பள்ளி கரஸ்பாண்டண்ட்!!
பள்ளிக்கு இடமாற்றச் சான்றிதழை வாங்க சென்ற போது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த பள்ளி கரஸ்பாண்டண்ட்!!
உத்தரபிரதேசத்தில் 20 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக தனியார் பள்ளியின் தலைவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் கிரேட்டர் நொய்டா பகுதியில் இருந்து பதிவாகியுள்ளதாக போலீசார் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து பொலிசார் மேலும் கூறுகையில், பாதிக்கப்பட்டவரின் சகோதரருக்கு இடமாற்ற சான்றிதழ் வழங்குவதற்கான போலிக்காரணத்தில் குற்றம் சாட்டப்பட்டவர் இந்தக் குற்றத்தைச் செய்துள்ளார்.
ALSO READ | பணம் மூலம் பரவுகிறதா கொரோனா?... தெளிவுபடுத்துமாறு CAIT கோரிக்கை!!
கிரேட்டர் நொய்டாவின் ஈகோடெக் -3 பகுதியில் 20 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஒரு தனியார் பள்ளியின் தலைவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவரிடமிருந்து தனது சகோதரரின் இடமாற்றச் சான்றிதழை வாங்க சென்றபோது அவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் ”என்று கௌதம் புத்த நகர் காவல்துறை துணை ஆணையர் பிருந்தா சுக்லா தெரிவித்தார். மேலும், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் சுக்லா கூறினார்.