தொடரும் போர் பதற்றம்: பள்ளி, கல்லூரிகள் மூடப்படுவதாக அறிவிப்பு!

பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வருவதால், ஜம்மு காஷ்மீரில் உள்ள பள்ளி, கல்லூரிகள் மூடப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

Written by - R Balaji | Last Updated : May 9, 2025, 11:48 PM IST
  • இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம்
  • பள்ளி, கல்லூரிகள் மூடப்படுவதாக அறிவிப்பு
தொடரும் போர் பதற்றம்: பள்ளி, கல்லூரிகள் மூடப்படுவதாக அறிவிப்பு!

இந்தியாவின் முக்கிய எல்லை பகுதியான ஜம்மு காஷ்மீரின் பாகிஸ்தான் டிரோன் தாக்குதலை தொடங்கி இருக்கிறது இதன் காரணமாக ஜம்மு காஷ்மீரில் மறு அறிவிப்பு வரும் வரை பள்ளி கல்லூரிகள் என அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்படுவதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. 
நேற்றைய தினம் பாகிஸ்தான் வான் வழி தாக்குதலை தொடங்கியது. ஆனால் இந்திய ராணுவம் அவர்களின் டிரோன் தாக்குதலை வீழ்த்தி வருகிறது. இந்த நடவடிக்கைக்கு 'ஆகாஷ்' எனப்படும் ஏர் டிபன்ஸ் பெரிதும் கை கொடுத்தது. தொடர்ந்து இன்றும் பாகிஸ்தான் வான் வழி தாக்குதலை கையில் எடுத்து இருக்கும் நிலையில், இந்திய ராணுவம் பதில் நடவடிக்கைகளை தொடங்கி உள்ளது. 

Add Zee News as a Preferred Source

இந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் லடாக் பகுதிகளில் உள்ள கல்வி நிறுவனங்களை மூட அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். தொடக்கத்தில் கல்வி நிறுவனங்கள் சனிக்கிழமை வரையே மூடப்பட்டு இருக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது ஆனால் நிலைமை மோசமாக மாறி வருவதால் மறு அறிவிப்பு வரும் வரை கல்வி நிறுவனங்கள் மூடப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

அதேபோல் சண்டிகரில் உள்ள பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் மே 9, 10 மற்றும் 12ஆம் தேதிகளில் தேர்வுகள் நடைபெற இருந்தன. ஆனால் போர் பதற்றம் காரணமாக இந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு இருக்கின்றன. அதேசமயம் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து பல்கலைக்கழகத்திலும் தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த தகவலை யுஜிசி மறுத்துள்ளது. மேலும்,  போலியான மற்றும் உறுதி செய்யப்படாத தகவல்களை நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டிருக்கிறது.

மேலும் படிங்க: பஞ்சாப்பில் பாகிஸ்தான் டிரோன் தாக்குதல்.. 3 பேர் காயம்!

மேலும் படிங்க: 1971 IND PAK போர்: காணாமல் போன 54 இந்திய வீரர்கள்... இன்று வரை விலகாத மர்மம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News