பெண்ணின் வயிற்றில் 17 வருடங்களாக இருந்த 2 கத்தரிக்கோல்கள்! விநோத வைரல் செய்தி..

Scissors Left In Woman's Stomach For 17 Years : ஒரு பெண்ணின் வயிற்றில் இருந்த கத்தரிக்கோல்கள்17 ஆண்டுகளுக்கு பிறகு அறுவை சிகிச்சை மூலம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம்.  

Written by - Yuvashree | Last Updated : Mar 31, 2025, 04:48 PM IST
  • 17 வருடங்களாக பெண்ணின் வயிற்றில் இருந்த கத்திரிக்கோல்!
  • மருத்துவரின் கவனக்குறைவால் வந்த பிரச்சனையா?
  • அந்த கத்திரிக்கோல் எடுக்கப்பட்டதா?
பெண்ணின் வயிற்றில் 17 வருடங்களாக இருந்த 2 கத்தரிக்கோல்கள்! விநோத வைரல் செய்தி..

Scissors Left In Woman's Stomach For 17 Years : தினம்தோறும் நாம் செய்தித்தாள்களிலும் சேனல்களிலும் பார்க்கும் சில சம்பவங்கள், நம்மை “உண்மையாகவே நடந்துள்ளதா?” என கேட்க தூண்டும். இவை சில சமயங்களை நம்புவதற்கு கடினமாகவும் இருக்கும். அப்படிப்பட்ட ஒரு சம்பவம்தான் இந்தியாவில் நடந்திருக்கிறது. இது குறித்த முழுவிவரத்தை இங்கு பார்க்கலாம்.

Add Zee News as a Preferred Source

பெண்ணின் வயிற்றில் இருந்த கத்தரிக்கோல்கள்! 

லக்னோவில் இருக்கும் ஒரு பெண்ணின் வயிற்றிலிருந்து 17 வருடங்களுக்கு பிறகு 2 கத்தரிக்கோல்கள் எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த சம்பவம்தான் தற்போது கேட்போருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தற்போது வெளியாகியிருக்கும் தகவல்களின்படி, அந்த கத்தரிக்கோல்கள் அவரது வயிற்றில் குழந்தை பிறப்பின் போது வைக்கப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.

லக்னோவில் இருக்கும் சந்தியா பாண்டே என்ற பெண்2008 ஆம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதி She Medical Care எனும் மகப்பேறு மருத்துவமனையில் குழந்தை பெற்றெடுத்திருக்கிறார். இந்த குழந்தை C-section அதாவது அறுவை சிகிச்சை மூலம் பிறந்திருக்கிறது. குழந்தை பிறப்பு- 
அறுவை சிகிச்சைக்கு பிறகு தனது மனைவி அடி வயிற்று வலி காரணமாக அவஸ்தை பட்டதாக அவரது கணவர் அரவிந்த் குமார் பாண்டே தெரிவித்திருக்கிறார். 

எப்படி கண்டுபிடிக்கப்பட்டது? 

வயிற்று வலி தாங்க முடியாததால், லக்னோவில் இருக்கும் ஒரு பிரபல மருத்துவ கல்லூரியில் அவர் மருத்துவ பரிசோதனைக்காக சென்று இருக்கிறார். அங்கு அவரது வயிற்றை X-Ray செய்து பார்த்த போது தான் வயிற்றில் கத்தரிக்கோல் இருக்கும் விஷயம் தெரியவந்துள்ளது. இதன் மூலம் அவரது மார்புக்கும் வயிற்றுக்கும் இடையில் இருக்கும் பகுதியில் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. 

இத எடுத்து மார்ச் மாதம் 26ஆம் தேதி ஒரு பிரபல மருத்துவமனையில் இவர் அனுமதிக்கப்பட்டு, அறுவை சிகிச்சை மூலமாக அந்த கத்திரிக்கோல்கள் அகற்றப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த மருத்துவமனையின் செய்து தொடர்பாளர் இது குறித்து பேசுகையில், இந்த சம்பவத்தை உறுதி செய்ததோடு, அந்த கத்திரிக்கோல்களை வயிற்றிலிருந்து வெற்றி தரமாக அகற்றி விட்டதாகவும் இதற்கான அறுவை சிகிச்சை மிகவும் சவாலானதாக இருந்ததாகவும் தெரிவித்தார். மேலும், அறுவை சிகிச்சைக்கு உள்ளான அந்த பெண், தற்போது நலமுடன் இருப்பதாகவும் அவரை வீட்டிற்கு அனுப்பி விட்டதாகவும் அவர் கூறியிருந்தார். 

யார் மீது புகார் கொடுத்திருக்கின்றர்?

தனது மனைவியின் வயிற்றில் கத்தரிக்கோல் இருந்த சம்பவம் குறித்து அவரது கணவர் புகார் கொடுத்திருக்கிறார். அதில் மருத்துவர் புஷ்பா ஜெயசுவால் என்பவர்தான் அந்த C-section அறுவை சிகிச்சையை செய்ததாகவும், அவரது கவனக்குறைவின் காரணமாக இந்த சம்பவம் நிகழ்ந்திருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். மேலும், இது குறித்து தீவர விசாரணை நடத்திய பிறகு, சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

மேலும் படிக்க | மனைவியின் காதலை சேர்த்து வைத்த கணவன்! யாரு சாமி நீ? வைரல் செய்தி..

மேலும் படிக்க | ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய நபர்! வைரலாகும் வீடியோ..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News