டிரைவர்களை குறிவைத்த கொன்ற டெல்லி சீரியல் கில்லர்... 24 ஆண்டுகளுக்கு பின் கைதானது எப்படி?

Crime News: 24 ஆண்டுகளுக்கு முன்னர் 4 டாக்ஸி ஓட்டுநர்களை கொலை செய்து அவர்களின் வாகனங்களை அபகரித்து விற்ற வழக்கின் முக்கிய குற்றவாளி தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

Written by - Sudharsan G | Last Updated : Jul 6, 2025, 03:39 PM IST
  • 24 ஆண்டு காலம் தலைமறைவு வாழ்க்கையை வாழ்ந்துள்ளார்.
  • போலீசார் இவரை தீவிரமாக தேடியிருக்கின்றனர்.
  • குற்றப்பிரிவு போலீசார் இவரையும் இவரின 2 கூட்டாளிகளையும் கைது செய்தனர்.
டிரைவர்களை குறிவைத்த கொன்ற டெல்லி சீரியல் கில்லர்... 24 ஆண்டுகளுக்கு பின் கைதானது எப்படி?

Crime News, Serial Killer Case: சீரியல் கில்லர்கள் பலரை செய்திகளில் கடந்து வந்திருப்பீர்கள். சமீபத்தில் கூட, ஜப்பானில் தூக்கிலிடப்பட்ட ட்விட்டர் கில்லர் குறித்த பதிவுகளையும், சம்பவங்களையும் வாசித்திருப்பீர்கள். 

Add Zee News as a Preferred Source

அந்த வகையில், டெல்லி போலீசார் தற்போது 24 ஆண்டுகள் கழித்து ஒரு சீரியல் கில்லரை கொலை செய்திருக்கிறார்கள். யார் அவர்?, அவர் கொலை செய்தவர்களின் பின்னணி என்ன?, ஏன் அவரை 24 ஆண்டுகள் கழித்து போலீசார் எப்படி கைது செய்தனர்? உள்ளிட்ட தகவல்களை இங்கு காணலாம்.

Serial Killer Case: 24 ஆண்டுகள் தலைமறைவு

அஜய் லம்பா என்ற இந்த கொலை குற்றவாளி டாக்ஸி ஓட்டுநர்களை குறிவைத்து கொன்றுள்ளார். அவர்களை கொன்றது மட்டுமின்றி, அவர்களின் காரையும் அபகரித்து அதனை விற்றுள்ளார். இவர் 24 ஆண்டுகளாக போலீசாரின் கண்களில் மண்ணை தூவி வந்த நிலையில், தற்போது டெல்லி குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அஜய் லம்பா 4 ஓட்டுநர்களை கொலை செய்து, அவர்களின் வாகனங்களை அபகரித்து விற்றுள்ளார், 24 ஆண்டுகளாக தலைமறைவாகவும் இருந்தார்.

Serial Killer Case: 4 பேரையும் கொன்றது எப்படி?

அஜய் லம்பா மற்றும் அவரது கூட்டாளிகள் முதலில் டாக்ஸி ஒன்றை வாடகைக்கு எடுப்பார்கள். அந்த டாக்ஸியில் அவர்கள் உத்தரகாண்ட் செல்வார்கள். அப்போது ஓட்டுநருக்கு மயக்க மருந்து கொடுத்து, ஓட்டுநரை மூச்சுத் திணறவைத்து கொலை செய்து,  மலைப்பகுதியில் ஓட்டுநரின் உடலை வீசியிருக்கிறார்கள். அந்த டாக்ஸியை அப்படியே நாடு கடத்தி, நேபாளத்தில் அந்த டாக்ஸியை விற்றுவிடுவார்களாம். 

Serial Killer Case: இன்னும் பல கொலைகளுக்கு வாய்ப்பு?

இந்த கொடூர கொலை குற்றவாளியான அஜய் லம்பாவை கைது செய்தது குறித்து துணை காவல் ஆணையர் ஆதித்யா கௌதம் கூறுகையில், "குற்றவாளி கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர். இவர் 2001ஆம் ஆண்டில் டெல்லி, உத்தர பிரதேசம், உத்தரகாண்டில் 4 கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடையவர்" என்றார். அதுமட்டுமின்றி, அஜய் லம்பா மற்றும் அவரது கூட்டாளிகள் இன்னும் பல கொலை குற்றங்களில் ஈடுபட்டிருக்க வாய்ப்புள்ளதாகவும் போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்த 4 வழக்குகளிலும், ஒரே ஒரு ஓட்டுநரின் உடல் மட்டுமே போலீசாருக்கு கிடைத்திருக்கிறது. அஜய் லம்பா தற்போது கைதாகினாலும் முன்னரே கூட்டாளிகளில் 2 பேர் போலீசார் பிடித்தனர். தற்போது போலீசார் மூவரிடமும் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். 

48 வயதான அஜய் லம்பா டெல்லியைச் சேர்ந்தவர். இவர் 6ஆம் வகுப்பிலேயே பள்ளிப்படிப்பில் இருந்து விடைபெற்றுள்ளார். தொடர்ந்து உத்தரபிரதேசத்தின் பரேலிக்கு குடிபெயர்ந்தார். அங்குதான் அஜய்க்கு திரேந்திரா, திலிப் நேகி ஆகியோருடன் கூட்டு சேர்ந்து டாக்ஸி டிரைவர்களை கொலை செய்துள்ளனர். அஜய் லம்பா மீது திருட்டு முதல் சட்டவிரோதமாக ஆயுதம் வைத்திருந்தது வரை பல்வேறு வழக்குகள் பதிவாகி உள்ளன என போலீசார் தெரிவிக்கின்றனர்.

Serial Killer Case: தலைமறைவும்... கைதும்... 

குற்றப்பிரிவு காவல்துறை குழு ஒன்று லம்பாவை நேரிலும், தொழில்நுட்ப ரீதியாகவும் கண்காணித்து வந்துள்ளனர். அஜய் லம்பா 2008ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரை நேபாள் நாட்டில் குடும்பத்துடன் வாழ்ந்து வந்துள்ளார் என்றும் அதன்பின், உத்தரகாண்ட் தலைநகர் டேராடூனுக்கு குடும்பத்துடன் குடிபெயர்ந்துள்ளார். 

போலீசார் மேலும் கூறுகையில், "2020 ஆம் ஆண்டில், அஜய் லம்பா ஒடிசாவில் இருந்து டெல்லி உட்பட இந்தியாவின் பிற பகுதிகளுக்கு கஞ்சா விநியோகத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. சமீபத்தில் 2021ஆம் ஆண்டு டெல்லியின் சாகர்பூரில் NDPS சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட ஒரு வழக்கிலும், 2024ஆம் ஆண்டு ஒடிசாவின் பெஹ்ராம்பூரில் நடந்த ஒரு நகைக் கடை கொள்ளை வழக்கிலும் அவர் (அஜய் லம்பா) கைது செய்யப்பட்டார். இந்த வழக்குகளில் அவர் ஜாமீனில் இருந்தார். அவர் 2001 கொலைகளில் ஈடுபட்டது குறித்தும், அதைத் தொடர்ந்த தலைமறைவு வாழ்க்கை குறித்து யாரிடமும் வெளிப்படுத்தவில்லை" என்கின்றனர்.

மேலும் படிக்க |  16 வயது மாணவனிடம் பாலியல் அத்துமீறல்... பெண் ஆசிரியை செய்த சேட்டைகள் - அதுவும் ஓராண்டாக!

மேலும் படிக்க | பெண்களை குறிவச்சு சீரழித்த ராட்சசன்; 9 பேரை கொன்ற கொடூரன் - தூக்கிலிடப்பட்ட 'ட்விட்டர் கில்லர்'

மேலும் படிக்க |  துடிதுடித்த 80 வயது மூதாட்டி.... கூட்டு பாலியல் வன்கொடுமை - தமிழகத்தையே உலுக்கிய சம்பவம்
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News