ராஜ் குந்த்ராவுக்கு ஜாமீன்: 119 ஆபாச வீடியோக்களை ரூ .9 கோடிக்கு விற்க திட்டமா? பகீர் தகவல்!!

தொழிலதிபர் ராஜ் குந்த்ராவுக்கு கிட்டத்தட்ட இரண்டு மாத சிறைவாசத்திற்குப் பிறகு மும்பை நீதிமன்றம் ரூ. 50,000 பிணைத் தொகையுடன் ஜாமீன் வழங்கியது. 

Written by - ZEE Bureau | Last Updated : Sep 21, 2021, 12:48 PM IST
ராஜ் குந்த்ராவுக்கு ஜாமீன்: 119 ஆபாச வீடியோக்களை ரூ .9 கோடிக்கு விற்க திட்டமா? பகீர் தகவல்!!

தொழிலதிபரும் பாலிவுட்டின் பிரபல நடிகையுமான ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவுக்கு, ஆபாச பட வழக்கில் நேற்று மும்பை நீதிமன்றம் ஜாமீன் அளித்தது. அதைத் தொடர்ந்து, ஒன்று (செவ்வாய்க்கிழமை) காலை அவர் சிறையிலிருந்து வெளியேறினார். ரூ .50,000 பிணைத் தொகையின் பேரில் மும்பை நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. குந்த்ராவின் கூட்டாளியான ரியான் தோர்பேவுக்கும் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. அவரும் ஜாமீன் தொகையாக ரூ .50,000 அளிக்க உத்தரவிடப்பட்டது.

முன்னதாக, மும்பை (Mumbai) குற்றப்பிரிவின் சொத்து பிரிவு, தொழிலதிபர் குந்த்ராவுக்கு எதிரான ஆபாச பட வழக்கு தொடர்பாக 1500 பக்க துணை குற்றப்பத்திரிகையை எஸ்ப்ளனேட் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.

மும்பை போலீசார் வியாழக்கிழமை பகிர்ந்த தகவலின் படி, 1500 பக்க குற்றப்பத்திரிகையில் ஷில்பா உட்பட 43 சாட்சிகளின் அறிக்கைகள் உள்ளன. நடிகர்கள் ஷெர்லின் சோப்ரா, செஜல் ஷா, பல மாடல்கள் மற்றும் குந்த்ரா நிறுவனத்தின் ஊழியர்கள் ஆகியோரது அறிக்கைகள் குற்றப்பத்திரிகையில் பதிவு செய்யப்பட்டுள்ளன. குற்றப்பத்திரிகையில் மேலும் இரண்டு குற்றவாளிகளின் பெயர்களும் உள்ளன.

முன்னதாக, தொழிலதிபர் ராஜ் குந்த்ராவின் மொபைல் போன், லேப்டாப் மற்றும் ஹார்ட் டிஸ்கில் சுமார் 119 ஆபாச வீடியோக்கள் இருந்தது கண்டறியப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். மேலும், இந்த வீடியோக்களை அவர் ரூ .9 கோடிக்கு விற்க திட்டமிட்டிருந்ததாகவும் மும்பை குற்றப்பிரிவு போலீசார் பகீர் தகலவை அளித்துள்ளனர். 

ALSO READ: ஆபாச பட வழக்கில் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் அதிரடியாக கைது 

தனது கணவர் ராஜ் குந்த்ரா (Raj Kundra) திங்கள்கிழமை ஆபாசப் பட வழக்கில் ஜாமீன் பெற்ற சில மணி நேரங்களுக்குப் பிறகு, நடிகை ஷில்பா ஷெட்டி இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவிட்டார். சீன-அமெரிக்கரான கலைஞர் ரோஜர் லீயின் மேற்கோளைப் பகிர்ந்து கொண்டார் ஷில்பா ஷெட்டி. "ஒரு மோசமான புயலுக்குப் பிறகு அழகான விஷயங்கள் நடக்கலாம் என்பதை நிரூபிக்கவே வானவில் வருகிறது" என்று அவர் எழுதியுள்ளார்.

தொழிலதிபர் ராஜ் குந்த்ராவுக்கு கிட்டத்தட்ட இரண்டு மாத சிறைவாசத்திற்குப் பிறகு மும்பை நீதிமன்றம் ரூ. 50,000 பிணைத் தொகையுடன் ஜாமீன் வழங்கியது. அவர் இன்று காலை விடுவிக்கப்பட்டார்.

2009 ஆம் ஆண்டு ராஜ் குந்த்ரா ஷில்பா ஷெட்டியை (Shilpa Shetty) திருமணம் செய்து கொண்டார். ஆபாசப் படங்களை உருவாக்கி வெளியிட்டதாகக் கூறப்படும் வழக்கில் ஜூலை 19 அன்று கைது செய்யப்பட்டார். ஜாமீன் கோரி அவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், அந்த மனு நேற்று விசாரணக்கு வந்தது. 

அவரது ஜாமீன் கோரிக்கையில், அவரது வழக்கறிஞர்கள், ராஜ் குந்த்ரா ஆபாச பட வழக்கில் சிக்க வைக்கப்பட்டுள்ளதாக வாதிட்டார். இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் “விவாதத்திற்குரிய உள்ளடக்கத்தை" படமாக்கியதில் அவர் ஈடுபட்டதற்கான சான்றுகள் இல்லை என்றும், அவர் தவறாக சிக்கவைக்கப்பட்டு தேவை இல்லாமல் இந்த வழக்கில் இழுக்கப்படுவதாகவும் வழக்கறிஞர் கூறினார்.

குற்றப்பத்திரிகையில், ஷில்பா ஷெட்டி தனது சொந்த வேலையில் மும்முரமாக இருந்ததால், கணவரின் வணிக நடவடிக்கைகள் குறித்து தனக்கு தெரியாது என்று தெரிவித்தது குறிப்பிடப்பட்டுள்ளது.

ALSO READ: வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற பிரபுதேவா ஹீரோயின்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News