)
CCTV Of Women Falling Off Bus : ஒரு பெண், பஸ்ஸில் கம்பியை பிடிக்க சென்ற நேரத்தில் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து வெளியாகி இருக்கும் சிசிடிவி காட்சிகளும் வைரலாகி வருகிறது.
சமூக வலைதளங்களில் வைரலாகும் சில வீடியோக்கள், நம் மனதை பதற வைக்கும் அளவிற்கு இருக்கும். அப்படிப்பட்ட ஒரு வீடியோதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம், சில நாட்களுக்கு முன்பு கேரளாவில் நடந்தது.
An elderly lady lost her balance while trying to take her seat on a bus in Thrissur. The conductor reached out to assist, but she accidentally stepped off the bus. Remember to hold onto handrails while boarding or moving inside a bus. pic.twitter.com/XKf9eWNr7B
— Deadly Kalesh (@Deadlykalesh) August 12, 2025
பஸ்ஸில் இருந்து கீழே விழுந்த பெண்:
இந்த சம்பவம், கேரளாவில் உள்ள திருச்சூரில் நடந்திருக்கிறது. வயது மூத்த அந்த பெண், ஓடும் பஸ்ஸில், கம்பியை பிடிக்கும் முன்பு பஸ்ஸின் வேகத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்து விட்டார். அதன் பிறகு பலரும் அலறி அடித்துக்கொண்டு பஸ்ஸை நிறுத்துகின்றனர். இவை, பஸ்ஸில் இருக்கும் சிசிடிவி கேமராவில் பதிவாகி இருக்கிறது.
வீடியோவில் இருப்பது..
அந்த வீடியோவில், ஒரு பெண் ஸ்டாப்பிங்கில் பஸ்ஸில் ஏறுவதும், அவர் ஏறிய பின்பு பஸ்ஸை எடுப்பதும் பதிவாகியிருக்கிறது. அவர் ஏறிய பின்பு, முதலில் கம்பியைத்தான் பிடிக்கிறார். பின்னர், அருகில் இருக்கும் கண்டக்டர் டிக்கெட் எடுக்கவில்லையா என்று கேட்க, அவர் டிக்கெட் எடுப்பதற்காக அவரிடம் செல்கிறார். வேலைக்கு செல்லும் அந்த பெண், கையில் ஹேண்ட்பேக் மாட்டிக்கொண்டு இருக்கிறார். கண்டக்டரிடம் டிக்கெட் வாங்குவதற்காக அந்த பெண் அருகில் செல்கிறார். அப்போது, அருகில் இருக்கும் கம்பியை பிடிப்பதற்குள் பஸ் சென்ற வேகத்தில் அவர் நிலை தடுமாறி, பஸ்ஸில் கதவு திறந்திருக்கவும் அதிலிருந்து தவறி விழுந்துவிட்டார்.
இதை பார்த்த பின்பு அந்த பஸ்ஸில் இருந்த அனைவரும் வண்டியை நிறுத்த சொல்லி கத்துகின்றனர். ஆனால் அதற்குள், அந்த பெண்ணிற்கு கீழே விழுந்து பலத்த அடிப்பட்டு விட்டது.
உயிரிழப்பு:
அந்த பெண்ணிற்கு 74 வயது என்று தகவல் வெளியாகியிருக்கிற்றது. படுகாயம் அடைந்த அவரை, உடனடியாக அழைத்து சென்று மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால், அவர் சிகிச்சை பலனின்று உயிரிழந்திருக்கிறார். சில மாதங்களுக்கு முன்னர், இதே போல ஒரு நபர் ஓடும் பஸ்ஸின் திறந்திருந்த கதவில் விழ இருந்தார். ஆனால், அதிர்ஷ்டவசமாக பஸ் கண்டக்டர் அவர் அருகிலேயே இருந்தததால், அவரை ஒரே கைகளால் பிடித்து மேலே இழுத்த வீடியோ, பெரிதாக வைரலானது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ