West Bengal Durgapur Gang Rape Incident: ஒடிசா மாநிலத்தின் ஜலேஷ்வர் நகரைச் சேர்ந்த 23 வயதான இளம்பெண் கொல்கத்தாவின் துர்காபூர் நகரின் சிவாபூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் படித்து வருகிறார்.
அந்த மருத்துவக் கல்லூரியின் வளாகத்திற்கு அருகிலேயே இரவில் மூன்று ஆண்களால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக இன்று போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடந்தது என்ன?
இச்சம்பவம் இரவு 8.30 மணியளவில் நடந்திருப்பதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட அந்த பெண் தனது ஆண் நண்பர் ஒருவடன் இரவு உணவு சாப்பிட வந்திருந்தபோது இச்சம்பவம் நடந்துள்ளது. பெண்ணையும் அவரின் நண்பரையும் கல்லூரியின் வாயிலின் அருகே ஒரு கும்பல் தடுத்து நிறுத்தியுள்ளது. அந்த பெண்ணை கும்பல் அருகில் இருந்த காட்டுப்பகுதிக்கு அத்துமீறி தூக்கிச்சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளனர்.
ஏற்கெனவே, கடந்தாண்டு கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம், கடந்த ஜூன் மாதம் கொல்கத்தா சட்டக்கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் என மேற்கு வங்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், துர்காபூரில் நடந்துள்ளதாக கூறப்படும் இச்சம்பவம் தற்போது ஆளும் மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்க அரசிற்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
கூட்டு பாலியல் வன்புணர்வு சம்பவம்
மேலும், பாஜகவும் இச்சம்பவத்தை தொடர்ந்து மம்தா பானர்ஜியின் அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து பாஜக கூறுகையில், துர்காபூரில் உள்ள IQ சிட்டி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக கூறப்படுகிறது என்றும் மம்தா பானர்ஜி அரசு பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதியை பெற்று தர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும், மம்தா பானர்ஜி அரசின் கீழ் மக்கள் தொடர்ந்து நீதி கேட்டு போராடுகின்றனர். ஆனால் அவர்களுக்கு நீதி கிடைப்பதே இல்லை என்றும் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
AbhayaAgain!
It seems that every days Mamata’s regime sees the horrific rape of a female student.
A student of IQ city medical college and hospital in Durgapur by Wasif Ali and gang.
The victim, a young woman from Orissa, is demanding justice and accountability from Mamata’s… pic.twitter.com/pXS8LnKUpu
— BJP West Bengal (@BJP4Bengal) October 11, 2025
பாஜக குற்றச்சாட்டு
இதுகுறித்து மேற்கு வங்க பாஜக அவரது X பக்கத்தில், "மம்தா பானர்ஜியின் ஆட்சியில் ஒவ்வொரு நாளும் ஒரு பெண் மாணவி கொடூரமான பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு வருகிறார்கள். துர்காபூரில் உள்ள IQ நகர மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் மருத்துவ மாணவி, வாசிஃப் அலி மற்றும் கும்பலால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார்.
ஒடிசாவைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட இளம்பெண், மம்தாவின் அரசாங்கத்திடம் இருந்து நீதியையும் பொறுப்புணர்வையும் கோருகிறார். மம்தாவின் ஆட்சியின் கீழ் மக்கள் நீதியைக் கோரி வருகிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியாது, ஆனால் அவர்கள் உண்மையில் அதை ஒருபோதும் பெறுவதில்லை" என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | கொல்கத்தா மருத்துவர் பாலியல் கொலை வழக்கு! சஞ்சய் ராய்க்கு ஆயுள் சிறை!
மேலும் படிக்க | 10 க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரை காவு வாங்கிய இருமல் மருந்து.. காரணம் என்ன
மேலும் படிக்க | கொதிக்கும் எண்ணெயை கணவர் முகத்தில் ஊற்றிய மனைவி! அப்பறம் என்னாச்சு?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









