)
பெங்களூரு சுப்ரமணியபுரா பகுதியை சேர்ந்த நேத்ராவதி (45) தனது கணவரை பிரிந்து மகளுடன் தனியாக வசித்து வந்தார். பொருளாதார சிரமத்தில் இருந்தபோதிலும், அதனை மகளிடம் பெரிதாக காட்டிக்கொள்ளாமல் வளர்த்ததாக அக்கம்பக்கத்தினர் தெரிவிக்கின்றனர். ஆனால் தாய்–மகள் இடையே அடிக்கடி தகராறு இடம்பெற்று வந்ததுள்ளது.
இந்த சூழலில், 16 வயது மாணவிக்கு அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவனுடன் காதல் ஏற்பட்டது. சிறுவன் பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்தியிருந்தாலும், மாணவி அவனுடன் தொடர்பைத் தொடர்ந்து வந்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. சிறுவன் அடிக்கடி வீட்டிற்கு வரத் தொடங்கியதை கவனித்த நேத்ராவதி, மகளை கண்டித்ததோடு "உன் படிப்பை கவனிக்க வேண்டும்; அவனுடன் இருக்கும் தொடர்பை நிறுத்திக்கொள்" என்று எச்சரித்தார். மேலும், அந்தச் சிறுவன் தனது வீட்டிற்கு வரக்கூடாது என்று தெரிவித்ததன் பின்னர் குடும்பத்தில் பிரச்சனை அதிகரித்துள்ளது.
இந்நிலையில் அக்டோபர் 25ஆம் தேதி, நேத்ராவதி வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்தார். அதே சமயம் மகளும் காணாமல் போனதால், இது தற்கொலையா அல்லது கொலையா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். ஐந்து நாட்களுக்கு பிறகு மாணவி வீடு திரும்பியதால், போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில் அதிர்ச்சியூட்டும் தகவல் வெளிச்சத்திற்கு வந்தது.
விசாரணையில் மாணவி அளித்த வாக்குமூலப்படி, அந்த இரவு சிறுவனைத் தானே வீட்டிற்கு வரச்சொல்லியதாகவும், "என் தாய் மது போதையில் தூங்கிவிடுவாள்" எனச் சொன்னதாகவும் தெரிவித்தார். சிறுவன் தனது நண்பர்களுடன் வீட்டிற்கு வந்தபோது, நேத்ராவதி அவர்களைப் பார்த்து கோபமடைந்து சிறுவனின் செல்போனை பிடுங்கி போலீசில் புகார் அளிப்பதாக மிரட்டியுள்ளார்.
இதனால், பயத்திலும் கோபத்திலும் சிறுவர்கள் "அவரை கொன்றுவிட்டால் விஷயம் முடிந்துவிடும்" என்று முடிவு செய்து, நேத்ராவதியின் கழுத்தை துணியால் சுற்றி போக வைத்து கொலை செய்துள்ளனர். பின்னர் அதை தற்கொலை போல காட்டுவதற்காக புடவையை ஃபனில் கட்டி உடலை தொங்க விட்டுள்ளனர். கொலைக்குப் பின்னர் மாணவியை தனது நண்பர்கள் வீட்டில் மறைத்தனர். இந்த தகவல் போலீசாருக்கு கிடைத்ததையடுத்து விசாரணை விறுவிறுப்பாக முன்னேறி, வழக்கின் முழு பின்னணி வெளிச்சமடைந்தது.
தற்போது 13 வயது சிறுவன் உட்பட மூன்று சிறுவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மாணவியும் கைது செய்யப்பட்டு சிறுவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் பெங்களூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடும்ப உறவுகளில் நிகழும் பிளவு குழந்தைகளின் மனநிலையினை எவ்வாறு பாதிக்கிறது என்பதை இந்த சம்பவம் மீண்டும் நினைவூட்டுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ