1 மணி நேரத்திற்கு ரூ. 200 கட்டணம்! கபேவில் ஜோடிகளுக்கு இருட்டு அறை!

மகாராஷ்டிரா மாநிலம் அமராவதியில் போலீசார் நடத்திய சோதனையில் பல இளம் ஜோடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள். 

Written by - RK Spark | Last Updated : Jun 23, 2025, 08:16 AM IST
  • 200 ரூபாய்க்கு 1 மணி நேரம்!
  • சிக்கிய கஃபே ஓனர்கள்.
  • திகைத்துப் போன அதிகாரிகள்.
1 மணி நேரத்திற்கு ரூ. 200 கட்டணம்! கபேவில் ஜோடிகளுக்கு இருட்டு அறை!

மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி நகரில் ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடைபெற்றுள்ளது. அங்குள்ள கஃபேவில் இளம் ஜோடிகளுக்கு ஒரு மணி நேரத்திற்கு 200 ரூபாய் கட்டணம் வசூலித்து, தனி கேபின்கள் அடங்கிய இருட்டு அறை வழங்கப்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ராஜபேத் காவல் நிலை எல்லைக்குள் இருந்த கஃபேக்களில் நடைபெற்று வந்த இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் அதிரடியான சோதனை வேட்டியில் ஈடுபட்டனர். அப்போது இந்த கஃபேக்களில் பல இளம் ஜோடிகள் விரும்பத்தகாத நிலையில் இருந்துள்ளனர். இது போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க | மனைவியின் மூக்கை கடித்து துப்பிய கணவன்! பகீர் காரணம்..என்ன தெரியுமா?

அமராவதி நகரின் முக்கிய இடங்களான பர்கர் லேண்ட், ஃபியூஷன் பைட் மற்றும் சத்ரி தலாப் ஆகிய இடங்களில் அமைந்துள்ள கஃபேக்களில் இருந்து 13 இளம் ஜோடிகளை போலீசார் கைது செய்தனர். இது போன்ற கஃபேக்களில் ஜோடிகள் அமர ஒரு மணி நேரத்திற்கு ரூபாய் 200 வசூல் செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு தனியான கேபின்கள் உள்ள இருட்டு அறையில் வழங்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக ஆர்டர் செய்தால் அவர்களுக்கு கூடுதல் நேரமும் வழங்கப்பட்டுள்ளது. 

இந்த சம்பவங்கள் தொடர்பாக காவல்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் நேரடியாக சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அனைத்து இடங்களிலும் ஒரே நேரத்தில் இன்ஸ்பெக்டரின் தலைமையில் சோதனை நடைபெற்றுள்ளது. இதில் கஃபேக்களில் ரகசிய டேட்டிங் இடமாகவும், ஹோட்டல் அறைகளாகவும் மாற்றப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. பிறகு அங்கிருந்த 13 ஜோடிகளும் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பின்பு அனைவரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 

இதற்கு முன்பும் இதுபோன்ற பல சம்பவங்கள் அமராவதி நகரில் நடைபெற்றுள்ளது, அப்போது போலீசரின் அதிரடி நடவடிக்கைகளால் இது போன்ற கஃபேக்கள் மூடப்பட்டன. இருப்பினும் தற்போது மீண்டும் இந்த கஃபேக்கள் தொடங்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள அனைத்து கஃபேக்களையும் விசாரணை செய்ய காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இது போன்ற இடங்கள் இளைஞர்களுக்கு தவறான எண்ணத்தை ஏற்படுத்தும் என்றும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் மீது அதிக கவனத்தை ஏற்படுத்து மாறும், இது போன்ற பிரச்சனைகளில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க அறிவுரை வழங்கவும் காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்தனர்.

மேலும் படிக்க - ஈரான் விஷயத்தில் முஸ்லிம் உம்மா ஏன் ஒன்றுபடவில்லை? ஈரானின் வரலாறு.. அஞ்சும் நாடுகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News