)
Telangana Woman Killed Her Daughter : செய்தித்தாள்களையும், செய்தி தொலைக்காட்சிகளையும் பார்த்தாலே, நிமிடத்திற்கு ஒரு பதைபதைக்க வைக்கும் செய்தி வந்து விடுகிறது. அதிலும், குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் அநீதிகளை பார்க்கும் போது, நம் குழந்தைகளை பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்கிற அச்சுறுத்தல், நமக்குள் தோன்றுகிறது. அப்படிப்பட்ட ஒரு நிலைதான், தற்போது 2 வயது பெண் குழந்தை தனுஸ்ரீக்கு நேர்ந்துள்ளது.
திருமணம் தாண்டிய உறவு..!
தெலங்கானாவில் இருக்கும், மெதக் என்கிற மாவட்டத்தின் சபாஷ் பள்ளி கிராமத்தை சேர்ந்த பெண், மமதா. இவரும், சித்திப்பேட்டை மாவட்டம் ராய்ப்போல் பகுதியை சேர்ந்த பாஸ்கர் என்பவரும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு சரண் என்கிற 3 வயது மகனும், தனுஸ்ரீ என்கிற 2 வயது மகளும் இருந்தனர்.
சில தினங்களுக்கு முன், தன் மாமியாருடன் மமதாவுக்கு தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து, தனது இரண்டு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு, மமதா தன் தாய் விட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது. 10 நாட்களாக தன் தாய் வீட்டில் இருந்த மமதா, அதே பகுதியை சேர்ந்த பயாஸ் என்பவருடன் தொடரில் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இது, நாளடைவில் திருமணத்தை தாண்டிய உறவாக மாறியிருக்கிறது.
மமதா உறவில் இருந்த பயாஸ் மீது, ஏற்கனவே பல வழக்குகள் நிலுவைகள் இருப்பதாக கூறப்படுகிறது.
கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த குழந்தை..
மமதா-பயாஸ் ஜோடி, உல்லாசமாக இருந்து வந்ததாக தெரிகிறது. இதையடுத்து, தன் 2 வயது பெண் குழந்தையை மட்டும் தூக்கிக்கொண்டு, மமதா பயாஸ் வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது. குழந்தை எங்கு தேடியும் கிடைக்கவில்லை என்பதால், மமதாவின் தந்தை போலீஸில் புகார் அளித்திருக்கிறார். இதையடுத்து, போலீஸார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்திருக்கின்றனர். குழந்தையையும் தேடி இருக்கின்றனர்.
கண்டுபிடிப்பு!
ஆந்திர மாநிலம், பல்நாடு மாவட்டத்தில் நர்சாராவ் பேட்டையில், தன் காதலனுடன் மமதா தங்கி இருப்பது போலீஸாருக்கு தெரிய வந்தது. இதையடுத்து, இந்த ஜோடியை போலீசார் பிடித்தனர். இவர்களுடன் குழந்தையை காணவில்லை. இது குறித்து விசாரித்திருக்கின்றனர். அப்போது, தனது குழந்தை உல்லாசத்திற்கு தடையாக இருந்ததால், காதலனுடன் சேர்ந்து குழந்தையை அடித்தே கொன்றதாக தெரிவித்திருக்கிறார். மேலும், பிணத்தை சாக்கு மூட்டையில் கட்டி எடுத்து அதை யாருக்கும் தெரியாமல் புதைத்து விட்டதாக கூறியிருக்கிறார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ