அசைவ உணவு விற்க எதிர்ப்பு! KFC மூடல்..ஷாக்கிங் வீடியோ..!

UP Hindu Gang Shut Down KFC : உத்திர பிரதேசத்தில், இந்து அமைப்பினர் சிலர் சேர்ந்து அசைவ உணவை விற்க எதிர்ப்பு தெரிவித்து, KFC-ஐ மூடியிருக்கின்றனர். இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம்.   

Written by - Yuvashree | Last Updated : Jul 18, 2025, 06:35 PM IST
  • அசைவ உணவு விற்க தடை
  • கேஎஃப்சி கடை முற்றுகை
  • வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..
அசைவ உணவு விற்க எதிர்ப்பு! KFC மூடல்..ஷாக்கிங் வீடியோ..!

UP Hindu Gang Shut Down KFC : உத்திர பிரதேசத்திலுள்ள லக்னோ, காசியாபாத்தில் இருக்கும் கேஎஃப்சியை இது ரக்‌ஷா தளம் என்கிற அமைப்பை சேர்ந்தவர்கள், இழுத்து மூடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. என்ன நடந்தது, இந்த விவகாரத்தில்? முழுமையாக பார்ப்போம்.

Add Zee News as a Preferred Source

வட மாநிலங்களை பொறுத்தவரை, இந்து காலண்டரின் படி இந்த மாதம் சவான் என்ற மாதமாக, அதாவது புனித மாதமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இது, சிவனுக்கு உகந்த மாதம் என்பதால், இதற்கான பல பூஜைகள் நடைபெறும். இந்த மாதத்தின் 11ஆம் தேதி, சவான் மாதம் பிறந்தது. வரும் ஆகஸ்ட் 9ஆம் தேதி இந்த புனித மாதமானது முடிவுக்கு வரும். 

அசைவ உணவை விற்கத்தடை..

சவான் மாதத்தில், அசைவ உணவுகளை விற்க எதிர்ப்பு தெரிவித்து, ஜூலை 18ஆம் தேதியான இன்று, உ.பி-யில் உள்ள காசியாபாத்தில் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையொட்டி, அங்கிருக்கும் கேஎஃப்சி (அசைவ உணவுகள் விற்கும் இடம்) ஒன்றை முற்றுகையிட்டனர். அதோடு மட்டுமன்றி, அந்த கடையையும் சாத்தினர். 

காசியாபாத்தில் இருக்கும் ரக்‌ஷா தளம் என்கிற அமைப்பை சேர்ந்தவர்கள் இந்த வேலையை செய்ததாக கூறப்படுகிறது. இவர்கள், “ஜெய் ஸ்ரீ ராம், ஹர ஹர மகாதேவா..” என்று முழக்கமிட்டபடி கே.எஃப்.சி கடையின் ஷட்டரை இழுத்து சாத்தினர். மேலும், இந்த மாதத்தில் அசைவ உணவை விற்க கூடாது என்று முழக்கமிட்டனர். 

இதே போலவே, அதே பகுதியில் இருக்கும் நசீர் எனும் உணவகத்தின் முன்பு இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தினர். அங்கும் இதே போல ஜெய் ஸ்ரீ ராம் கோஷமிட்டனர். இதையடுத்து, இந்த உணவகமும் தற்காலிகமாக மூடப்பட்டு இருக்கிறது.

வைரலான வீடியோ:

இது தொடர்பாக வைரலாகும் வீடியோவில், கே.எஃப்.சி கடையில் வேலை செய்பவர்களிடம் ராமர் கொடியுடன் செல்பவர்கள்  கடையை மூடச்சொல்லி வாக்குவாதம் செய்வதும், இந்த மாதத்தில் இறைச்சி சாப்பிடக்கூடாது என்று உபதேசிப்பதும் இடம் பெற்றுள்ளது.

இதையடுத்து, இந்த முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைது செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

கொதித்தெழுந்த நெட்டிசன்கள்:

இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து, நெட்டிசன்கள் பலர் அவரவர் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். ஒரு சிலர், “இந்த கூட்டத்தில் இருக்கும் இளைஞர்களை பார்த்தால் பயமாக இருக்கிறது..” என்று கூற, இன்னும் சிலர் “இவை அனைத்தும் அரசியல் கட்சிகள் செய்யும் வேலைகள்தான்” என்று கூறி வருகின்றனர். இப்படி, வட மாநிலத்தில் மதத்தை திணிப்பதையும், தனி மனித சுதந்திரமான பிடித்த உணவு சாப்பிடுவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதையும் பார்க்கையில் எதிர்காலம் என்னவாகுமா என்கிற கேள்வியும் மக்களிடையே உண்டாகி இருக்கிறது.

மேலும் படிக்க | என் உயிருக்கு ஆபத்து... ஆதவ் அர்ஜுனா புகாரின் பரபரப்பு பின்னணி!

மேலும் படிக்க | 1.67 கோடி குடும்பங்களுக்கு இலவச மின்சாரம்: தேர்தலுக்கு முன் மாநில அரசு அதிரடி அறிவிப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News