வயதான மாமியாரை ஈவு இரக்கமின்றி தாக்கிய மருமகள்! வைரலாகும் சிசிடிவி காட்சிகள்..

CCTV Footages Of A Woman Thrashing Her Mother In Law : ஒரு பெண், தனது மாமியாரை முடியை பிடித்து கிழே தள்ளி அடிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்த முழு தகவல், இதோ..  

Written by - Yuvashree | Last Updated : Apr 6, 2025, 12:12 PM IST
  • மாமியாரை கொடுமை படுத்திய மருமகள்!
  • ஈவு இரக்கமின்றி அடித்தார்..
  • பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்.
வயதான மாமியாரை ஈவு இரக்கமின்றி தாக்கிய மருமகள்! வைரலாகும் சிசிடிவி காட்சிகள்..

CCTV Footages Of A Woman Thrashing Her Mother In Law : உலகில் நடந்து வரும் விஷயங்களை பார்க்கும் போது, நாளுக்கு நாள் மனிதத்தின் மீதுள்ள நம்பிக்கை குறைந்து கொண்டே வருகிறது. வாயில்லா பிராணிகளை காெடுமை படுத்துவது, குழந்தைகளை அடித்து துன்புறுத்துவது, காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை வெட்டிக்கொல்வது என்று நாளிதழை திருப்பினாலே, இப்படிப்பட்ட செய்திகள்தான் கண்முன் வந்து நிற்கிறது. நம் ஊரில் மாமியர்-மருமகள் சண்டை நடப்பது என்பது மிகவும் சகஜம். அவை கைகலப்பில் முடிவதும் எப்போதாவது நடக்கும். ஆனால், ஒரு சில சம்பவங்கள், அதையும் தாண்டி வன்கொடுமையாகவும் க்ரைம் செய்தியாகவும் மாறிவிடும். அப்படிப்பட்ட காட்சிகள்தான், தற்போது சிசிடிவியில் பதிவாகி இருக்கிறது.

Add Zee News as a Preferred Source

வைரல் வீடியோ:

தற்போது வைரலாகி வரும் அந்த வீடியோ ஒரு வீட்டின் வாசலில் இருந்த சிசிடிவி காட்சிகளில் படம் பிடிக்கப்பட்டிருக்கிறது. இதில், இளமையாக இருக்கும் இரண்டு பேர் மற்றும் வயதான ஒருவர் அடித்துக்கொள்ள, அவர்களை ஒரு வயது முதிர்ந்த பெண்மணி தடுத்து நிறுத்துகிறார். இதைப்பார்த்துவிட்டு, எங்கோ மாடியில் இருந்து ஓடி வரும் இளம்பெண் ஒருவர், அந்த பெண்ணை தரதரவென முடியை பிடித்து இழுத்து கீழே தள்ளுகிறார். 

அதோடு நிறுத்திக்கொள்ளாமல் அவரை போட்டு அடிக்கவும் செய்கிறார். அந்த பெண் அதையும் தாண்டி எழுந்து அடித்துக்கொள்பவர்களை தடுக்க முயற்சிக்கிறார். அப்போதும் அந்த பெண் அவரை விடாமல் தாக்குகிறார். இதனால் நிலை தடுமாறி மீண்டும் மீண்டும் கீழே விழும் அந்த வயதான பெண், எழுந்துகொள்ள முடியாமல் திணறுகிறார். கடைசியில் வேறு ஒருவர் வந்து அந்த பெண்ணை தூக்கி விடுகிறார்.

என்ன பிரச்சனை?

இந்த சம்பவம், மத்திய பிரதேசத்தில் நடந்திருக்கிறது. அங்கு, விசால் பத்ரா என்ற நபர் கார் உதிரி பாக கடையை தனது 70 வயதான தாய் சரளா பத்ராவுடன் சேர்ந்து நடத்தி வருகிறார். இதையடுத்து, மேற்கூறிய சிசிடிவி காட்சிகளில் இடம் பெற்றிருந்த சம்பவம் நடந்தது குறித்து, விஷால் போலீஸில் புகார் கொடுத்திருக்கிறார்.

அதில், ஒரு சிறு பிரச்சனை காரணமாக தங்கள் வீட்டிற்குள் நுழைந்து மனைவியின் வீட்டார் தன்னையும் தனது தாயாரையும் அடித்ததாக குறிப்பிட்டிருக்கிறார். மேலும், தனது தாயை முதியோர் இல்லத்திற்கு அனுப்ப வேண்டுமென தனது மனைவி ரொம்ப நாளாக தொல்லை செய்து வருவதாகவும் கூறியிருக்கிறார். 

கடந்த ஏப்ரல் 1ஆம் தேதியன்று, தனது மாமனார் சில ஆட்களுடன் வீட்டிற்குள் நுழைந்து தாக்கியதாகவும் தன்னை காப்பாற்ற  முயன்ற தாயை, மனைவி அடித்ததாகவும் கூறியிருக்கிறார். இதில் அவருக்கு முகம், கண்கள் ஆகியவை வீங்கியிருக்கின்றன. தெருவீதி வரை இந்த சண்டை தொடர்ந்ததை அடுத்து, அக்கம் பக்கத்தினர் வந்து அந்த சண்டையை தடுத்திருக்கின்றனர். இதையடுத்து, இந்த பிரச்சனை காவல் நிலையம் வரை சென்றிருக்கிறது.

காவல் நிலையத்திலும் கூட, புகார் கொடுத்த விஷாலையும் அவரது தாயையும் கொன்று விடுவதாக அவர்கள் மிரட்டியதாக கூறப்படுகிறது. பொய் புகார் அளித்து, தன்னை காவல் நிலையத்தில் மாட்டிவிடுவதாக தனது மனைவி தன்னை மிரட்டியதாகவும் விஷால் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | மனைவியுடன் நடனமாடிக்கொண்டே உயிரை விட்ட கணவன்! வைரலாகும் வீடியோ..

மேலும் படிக்க | மனைவியை கொன்றதாக 1.5 வருடங்கள் சிறையில் இருந்த கணவன்! உயிருடன் வந்த மனைவி..வைரல் செய்தி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News