மனைவியுடன் நடனமாடிக்கொண்டே உயிரை விட்ட கணவன்! வைரலாகும் வீடியோ..

Viral Video Husband Dies While Dancing With Wife : ஒருவர், மனைவியுடன் மகிழ்ச்சியாக நடனமாடிய போது, திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.  

Written by - Yuvashree | Last Updated : Apr 4, 2025, 05:18 PM IST
  • நடனமாடி கொண்டிருந்த போது உயிரிழந்த நபர்!
  • 25வது வருட திருமண விழாவில் நிகழ்ந்த விஷயம்..
  • வைரலாகும் வீடியோ..
மனைவியுடன் நடனமாடிக்கொண்டே உயிரை விட்ட கணவன்! வைரலாகும் வீடியோ..

Viral Video Husband Dies While Dancing With Wife : சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோக்கள் பல நம் மனதை பதைபதைக்க வைக்கும் வகையில் சில காட்சிகள் நம் மனதை பாதிக்கும் வகையில் இருக்கும். அதுவும், எதிர்பாராத வகையில் நிகழும் மரணங்கள், நம் மனதை உருகுலைக்க செய்கின்றன. 8 வயது பள்ளி சிறுமி நடந்து செல்கையில் மரணமடைவது, திருமண மேடையில் பரிசு கொடுக்கும் போது நண்பர் மரணமடைவது, நடனமாடிக்கொண்டிருக்கையில் மரணமடைவது என்று நொடிக்கு நாெடி மனதை ‘அபுக்’கென்று ஆக்கும் வீடியோக்கள் பரவுகின்றன. அந்த வகையில், ஒருவர் தனது மனைவியுடன் சந்தோஷமாக பொழுதை கழித்துக்கொண்டிருக்கும் பாேது உயிரிழந்திருப்பது பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Add Zee News as a Preferred Source

25வது வருட திருமண நாள்:

உத்திர பிரதேசத்தில் இருக்கும் ஒரு தம்பதி, தங்களின் 25வது திருமண நாளை தட புடலாக கொண்டாட வேண்டுமென முடிவு செய்துள்ளனர். இதற்காக உறவினர்களை அழைத்து, விருந்து வைத்து, இசை, நடனம் என அனைத்திற்கும் ஏற்பாடு செய்திருக்கின்றனர். நினைத்தது போலவே, விழா களைக்கட்டியுள்ளது. கணவனும் மனைவியும் ஒன்றாக மகிழ்ச்சியாக நடனமாடி கொண்டிருந்தனர். இந்த நடனத்தின் முடிவு, ஒரு சோகத்தில் முடியும் என்பதை யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

வைரல் வீடியாே:

அந்த வீடியோவில், வெள்ளை கோட் அணிந்த ஒருவர், மேடையில் ஒரு பாடலுக்கு மகிழ்ச்சியாக நடனமாடுவதும், தனது மனைவியை பார்த்து சிரிப்பதும் பதிவாகியிருக்கிறது இதை ஒன்றுக்கு இரண்டு கேமாரா மேன்களும் படம் பிடிக்கின்றனர். கடைசியில் சில பெண்கள் இவர்களை சுற்றி வந்து நடனமாட, தனது நடனத்தை கொஞ்சம் மெதுவாக்கிய இவர், அனைவரையும் பார்த்து சிரித்துக்கொண்டிருக்கிறார். பின்னர், யாரும் எதிர்பாராத வண்ணம் மயங்கி கீழே விழுந்து விட்டார். சுற்றி இருக்கும் அனைவரும் அவரை தூக்குவதோடு அந்த வீடியோ முடிகிறது.

மயங்கியவரின் பெயர், வசீம் சர்வாத். இவருக்கு வயது 50. நடனத்தின் போது மயங்கிய இவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருக்கின்றனர். ஆனால், அவர் ஏற்கனவே மாரடைப்பு காரணமாக உயிரிழந்து விட்டதாக அந்த மருத்துவமனையில் இருந்த மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர். 

மகிழ்ச்சியாக மாற வேண்டிய மணநாள் இப்படி, சோகமான நாளாக மாறியது, பலருக்கும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்களும், இது போன்ற உயிரிழப்புகள் நம் ஊரில் பெருகி விட்டதாக கூறிவருகின்றனர்.

மேலும் படிக்க | டான்ஸ் ஆடும் போது உயிரிழந்த 23 வயது பெண்!! பயமுறுத்தும் வைரல் வீடியோ..

மேலும் படிக்க | கட்டிலை கார்-ஆக மாற்றிய இளைஞர்! படுத்துக்கொண்டே பயணிக்கலாமோ? வைரல் வீடியோ..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News