Doctor Making Young Boy Smoke Cigarette : சிகரெட் என்பது உடலுக்கு எவ்வளவு ஆபத்தான பொருள் என்பதை அனைவரும் நன்கு அறிவோம். வயது வந்த பின் ஏதோ ஒரு காரணமாக சிகரெட் பிடிப்பவர்களுக்கே பலவித பிரச்சனைகள் வரும். இவர்களில் நுரையீரல் பிரச்சனையாலும், சுவாச கோளாறு பிரச்சனை யாலும், பிற உடல் நல பாதிப்புகளாலும் பாதிக்கப்படுகின்றனர் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் ஒரு குழந்தையை மருத்துவரையே சிகரெட் பிடிக்க வைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
குழந்தையை சிகரெட் பிடிக்க வைத்த மருத்துவர்:
அந்த மருத்துவரின் பெயர், சுரேஷ் சந்திரா. அரசு மருத்துவரான இவர், உத்திரபிரதேசத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் பணியாற்று வந்ததாக கூறப்படுகிறது. அப்போது இவரிடம் சிகிச்சைக்காக வந்த ஐந்து வயது குழந்தையிடம், சிகரெட்டை கொடுத்து அதை புகைக்கும் படி கூறியதாக கூறப்படுகிறது. அந்த குழந்தைக்கு ஐந்து வயதை ஆவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இது குறித்து வைரலாகி வரும் அந்த வீடியோவில், அவர் அந்த சிறுவனிடம் சிகரெட்டை கொடுத்து அதை லைட்டு ரின் உதவியுடன் பற்ற வைப்பதும், பின்னர் புகையை உள்ளிழுத்து வெளியிடுமாறு கூறுவதும் பதிவாகி இருக்கிறது. அந்த குழந்தை அதை எப்படி செய்வது என தெரியாமல் முழிக்க, அப்போது மருத்துவர் அதற்கு செய்து காண்பிக்கிறார்.
வார்னிங்!! இந்த காணொலி உங்களை அச்சுறுத்தலாம். பயணாளர்கள் பயனர்கள் தங்கள் சொந்த ஆபத்தில் இதைப் பார்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Terrible Uttar Pradesh
Jalaun, Uttar Pradesh
A Government Doctor, Suresh Chand, forced a child who came for treatment to smoke a Cigarette.Deputy CM Brajesh Pathak ordered an FIR against this Doctor.#UttarPradesh #DCvsRR #YogiHaiTohMumkinHai #RRvsDC pic.twitter.com/NMlcovvpst
— তন্ময় l T͞anmoy l (@tanmoyofc) April 17, 2025
இந்த வீடியோ நேற்று முதல் நாடு முழுவதும் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அந்த மருத்துவர், வேறு ஒரு இடத்திற்கு பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் மீது, மத்திய அரசின் மருத்துவ நிர்வாகம் விசாரணையும் தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஏன் இப்படி செய்தார்?
கடந்த மாதம் இந்த சம்பவம் நடந்ததாகவும், அது குறித்த வீடியோ தற்போது தான் இணையத்தில் வைரல் ஆகி வருவதாகவும் தெரியவந்துள்ளது. இதை அவர் அந்த குழந்தையின் சளியை குணமாக்க ஒரு எக்ஸ்பிரிமெண்டாக செய்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் இது குறித்த சரியான தகவல்கள் இன்னும் வெளியாகாமல் இருக்கிறது.
குழந்தைகள் புகைத்தால் என்ன ஆகும்:
குழந்தைகளுக்கு நுரையீரல் வளரும் தருவாயாக நிற்கும். அப்போது புகைத்தால் அவர்களுக்கு சுவாசக் கோளாறுகளான இருமல், மூச்சு பிரச்சனை உள்ளிட்டவை ஏற்படலாம்.
தலைசுற்றல்:
சிகரெட்டில் இருக்கும் நிக்கோட்டின், ஒரு சிலருக்கு மயக்கத்தையும் வாந்தி வருவது போன்ற உணர்வையும் ஏற்படுத்தும்.
அடிக்சன்:
ஒரு சில குழந்தைகள் அதற்கே அடிமையாக வாய்ப்பிருக்கிறது.
இதயத்துடிப்பு அதிகரித்தல்:
குழந்தைகள் சிகரெட் பிடிக்கும்போது அவர்களுக்கு இதயத்துடிப்பு அதிகமாக வாய்ப்பு உள்ளது.
கண் மற்றும் தொண்டை எரிச்சல்:
ஒரு சில குழந்தைகளுக்கு சிகரெட் புகை கண் அல்லது தொண்டை எரிச்சலை ஏற்படுத்தலாம்.
மேலும் படிக்க | கார் டிக்கியில் தொங்கிய கை! அச்சமூட்டும் வைரல் வீடியோ..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









