Viral Video Of Two Men Hanging On High Tree Branch : 30 செகண்ட் ரீல்ஸிற்காக ஒரு சிலர் உயிரை பணயம் வைக்க கூட தயங்குவதில்லை. அப்படி 2 இளைஞர்கள் செய்துள்ள செயலதான் தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.

Viral Video Of Two Men Hanging On High Tree Branch : சாப்பிடும் போது, உறங்க செல்வதற்கு முன்பு, ரோட்டில் நடந்து செல்லும் பாேது என நாம் எங்கு சென்றாலும் போன் பார்க்க ஆரம்பித்து விட்டோம். இதனாலேயே, செல்போனை மனிதர்களின் மூன்றாவது கை என்றும் பலர் சொல்ல ஆரம்பித்து விட்டோம். இந்தியாவில், டிக் டாக் செயலி இருந்த போது அனைவரும் ஏதேனும் ஒரு பாடலுக்கு அல்லது டைலாக்குகளுக்கு வாயசைத்து வீடியோ பதிவிட்டு வந்தோம்.
வைரலாக வேண்டும் என்கிற ஆசை..
டிக் டாக் செயலி தடைசெய்யப்பட்டதை தொர்ந்து, அதன் இடத்தை இன்ஸ்டாவின் ரீல்ஸ் பக்கம் எடுத்துக்கொண்டது. இதன் மூலம் இன்ஸ்டாவில் கணக்கு வைத்திருப்பவர்கள் வைரலாக வேண்டுமென நினைப்பதோடு, ஏற்கனவே இந்த பக்கங்களில் பிரபலமாக இருப்பவர்கள் போல தாங்கும் ஒரு இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூவனர்ஸர் ஆக வேண்டுமென நினைக்கின்றனர்.
அந்த ஆசையோடு சில வீடியோக்களை இவர்கள், வைரலாக வேண்டும்-பிரபலமாக வேண்டும் என்கிற நோக்கத்தோடு பதிவிடுகின்றனர். அப்படி, 2 இளைஞர்கள் செய்திருக்கும் விஷயம்தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
வைரலாகும் வீடியோ..
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், இரண்டு ஆண்கள் எங்கோ மேலே இருக்கும் ஒரு மரக்கிளையில் தொங்குவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளது. அந்த மரம், பார்க்க ஏதோ ஒரு மலை மீது இருப்பது போன்று தெரிகிறது. அதிலும் ஒரு இளைஞர்கள் மரக்கிளையில் முதலில் இன்னொரு இளைஞரின் காலை தனது கால்களால் பிடிக்கிறார். இதையடுத்து முதலில் இருந்த இளைஞர் அவரை காலை எடுக்க சொல்லிவிட்டு அந்த மரக்கிளையை விட்டு லாவகமாக செல்கிறார். இன்னொரு இளைஞர் மட்டும், அப்படியே அந்த மரக்கிளையை பிடித்துக்கொண்டு புல் அப் செய்து, ஜாலியாக ஊஞ்சல் விளையாடுவது போல தொங்கிக்கொண்டிருக்கிறார்.
20 सैकंड की रील के चक्कर मे पूरी जिंदगी को दांव पर लगा दिए pic.twitter.com/YYponaBqCD
— rajkumar saini (@rajkumarsa67213) April 29, 2025
இந்த மரக்கிளையையும், அதில் தொங்கும் அந்த இரண்டு இளைஞர்களையும், கீழே எவ்வளவு தூரம் இருக்கும் என்பதை கணக்கிட்டு பார்க்கவும் பயமாக இருப்பதாக சிலர் கூறுகின்றனர். அந்த மரக்கிளை உடைந்தாலோ, அல்லது அந்த மரம் லேசாக ஆடினாலோ என்ன ஆகும்? கொஞ்சம் நினைத்து பாருங்கள்! என்றும் சில நெட்டிசன்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர்.
நெட்டிசன்கள் ரியாக்ஷன்..
ஒரு 20 வினாடிகள் ரீல்ஸிற்காக, இப்படி உயிரை பணயம் வைத்து ஒரு விஷயத்தை செய்யலாமா? என்று சிலர் கேள்வியெழுப்பி வருகின்றனர். இது போன்று செய்பவர்களை ஜெயிலில் போடாமல், ஏன் இவர்களை வைரலாக்கி கொண்டிருக்கிறோம் என்றும் சிலர் கேட்டு வருகின்றனர். எது எப்படியிருப்பினும், தங்கள் நினைத்தார் போல அந்த இளைஞர்கள் வைரலாகி விட்டனர். இதுவே, இந்த சமூகத்தின் சோக முத்தை பிரதீபலிப்பதாக இருக்கிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ