ஸ்மிரிதி இரானி நீக்கம்: பாராளுமன்றங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு
மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி பாராளுமன்றங்களுக்கான மத்திய அமைச்சரவை குழுவில் இருந்து அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
முன்பு பாராளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய மந்திரி சபை குழுவில் ஸ்மிரிதி இரானி இடம் பெற்று இருந்தார். இந்நிலையில் அவர் தற்போது அந்த குழுவில் இருந்து அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஸ்மிருதி இரானி சமீபத்தில் மனித வள மேம்பாட்டு துறையில் இருந்து ஜவுளித்துறைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் பாராளுமன்றங்களுக்கான மத்திய அமைச்சரவை குழுவில் நீக்கம் செய்யப்பட்டது அவர் மீது பிரதமர் மோடிக்கு அதிருப்தி நிலவுதையே காட்டுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.