கேரளாவில் இருந்து பீகார் செல்லவிருந்த தொழிலாளர் சிறப்பு ரயில் ரத்து...?

கேரள அரசின் சேவையை பீகார் அரசு ஏற்கத் தவறியதைத் தொடர்ந்து மலப்புரத்தின் திருர் ரயில் நிலையத்திலிருந்து பீகார் செல்லவிருந்த (புலம்பெயர்ந்த) தொழிலாளர்களுக்கான சிறப்பு ரயில் ரத்து செய்யப்பட்டது.

Last Updated : May 4, 2020, 03:42 PM IST
கேரளாவில் இருந்து பீகார் செல்லவிருந்த தொழிலாளர் சிறப்பு ரயில் ரத்து...? title=

கேரள அரசின் சேவையை பீகார் அரசு ஏற்கத் தவறியதைத் தொடர்ந்து மலப்புரத்தின் திருர் ரயில் நிலையத்திலிருந்து பீகார் செல்லவிருந்த (புலம்பெயர்ந்த) தொழிலாளர்களுக்கான சிறப்பு ரயில் ரத்து செய்யப்பட்டது.

இந்த ரயில் திங்கள்கிழமை பிற்பகல் 2 மணிக்கு 1200 தொழிலாளர்களுடன் புறப்பட திட்டமிடப்பட்டது. தொழிலாளர்களை திருப்பி அனுப்ப கேரள மாநில அரசின் ஒரு பகுதியிலிருந்து ஏற்பாடுகள் முடிந்துவிட்டதாக மலப்புரம் மாவட்ட ஆட்சியர் ஜாபர் மாலிக் தெரிவித்தார். எனினும், பீகார் அரசாங்த்தின் தரப்பில் இருந்து கேரள அரசின் சேவை புறக்கணிக்கப்பட்ட நிலையில் ரயில் தற்போதைக்கு ரத்து செய்யப்பட்டது.

பீகார் அரசாங்கத்திடமிருந்து சாதகமான பதிலைப் பெற்ற பின்னர் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுடன் பீகார் செல்லும் ரயிலின் அடுத்த அட்டவணை நிர்ணயிக்கப்படும் என்று மலப்புரம் ஆட்சியர் மாலிக் தெரிவித்துள்ளார்.

நேபாளத்தைச் சேர்ந்த 76 பேர் உட்பட மொத்தம் 65,255 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தற்போது மாவட்டத்தில் வசித்து வருகின்றனர். தங்கள் மாநிலங்களுக்குச் செல்ல விரும்பும் அனைத்து தொழிலாளர்களுக்கும் சிறப்பு ரயில்கள் ஏற்பாடு செய்யப்படும் என்று மாவட்ட நிர்வாகம் முன்பு தெரிவித்திருந்தது.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் மொத்த எண்ணிக்கையில், 5438 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பீகாரைச் சேர்ந்தவர்கள். மாவட்டத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அதிக எண்ணிக்கையில் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவர்கள் 26,977 பேர் உள்ளனர் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முழு அடைப்பால் மாவட்டத்தில் சிக்கித் தவித்த 1140 புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் முதல் தொகுதி சனிக்கிழமை சிறப்பு ரயிலில் பீகாரில் உள்ள தனபூருக்கு திருப்பி அனுப்பப்பட்டது.

பல்வேறு புலம் பெயர்ந்த தொழிலாளர் முகாம்களில் இருந்து தொழிலாளர்களை ரயில் நிலையத்திற்கு கொண்டு செல்ல மாவட்ட நிர்வாகம் KSRTC பேருந்துகளை ஏற்பாடு செய்தது. போக்குவரத்துச் செயல்பாட்டின் போது சமூக விலகல் விதிகளைப் பின்பற்றும்படி அறிவுறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Trending News