ஸ்ரீதேவிக்கு இறுதிச் சடங்கு: மும்பைக்கு வந்து குவிந்த மக்கள்!
மும்பையில் ஸ்ரீதேவின் இறுதிச்சடங்குகளுக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஸ்ரீதேவியின் உடல் மதியம் 4 மணிக்குள் ஒப்படைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பையில் ஸ்ரீதேவின் இறுதிச்சடங்குகளுக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஸ்ரீதேவியின் உடல் மதியம் 4 மணிக்குள் ஒப்படைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் என பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகை ஸ்ரீதேவி (54) நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் மாரடைப்பு காரணமாக உயிர் இழந்தார்!
துபாயில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்ற ஸ்ரீதேவி, திடீரென உயிரிழந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தினர்.
இந்நிலையில், அவரது உடலுக்கு உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து சில நடைமுறைகள் முடிந்த பின்னர் இன்று அவரது உடல் அம்பானி அனுப்பிய தனிவிமானத்தில் மும்பை வருகிறது.
அங்கு சிறிது நேரம் குடும்பத்தினர், திரையுலகினர், ரசிகர்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து ஜூஹு பகுதியில் உள்ள பவன் ஹான்ஸ் இடுகாட்டில் அவருக்கு இறுதி சடங்குகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
அவரது உடலை காண வேண்டும் என்பதற்காக மும்பை அந்தேரியில் உள்ள லோகன்ட்வாலா காம்ப்ளஸில் உள்ள அவரது வீடு முன்பு ரசிகர்கள் திரண்டுள்ளனர். இனி ஸ்ரீதேவியை எப்போதும் பார்ப்போம் என்று குமுறி வருகின்றனர்.
ஸ்ரீதேவியின் இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக போனி கபூரின் முதல் மனைவியின் மகன் அர்ஜுன் கபூர் மும்பை வந்துள்ளார்.